Archive for January 24, 2011
சித்திரமும் ‘கணிணி’ப்பழக்கம்!
சித்திரங்கள் வரைவதில் நான் இப்போதும் பயிற்சி மானவன் தான். இவை சில இணைய மற்றும் அச்சு இதழ்களுக்காக வரைந்தவை. ஒரே ஸ்டைலில் வரைவதும் சலிப்பூட்டும் விஷயம் ஆதலால் வெவ்வேறு மீடியம்களில் வெவ்வேறு ஸ்டைலில் வரைந்து பார்த்தவை இந்த சித்திரங்கள்!
தங்க மீன் இணைய இதழில் ஒரு சிறுகதைக்கு வரைந்த சித்திரம்
விகடன் பப்ளிகேஷனுக்காக ஒரு சிறுகதை தொகுப்புக்கு…
காலச்சுவடுக்காக…
சும்மா…
அசோகமித்திரனின் அழிவற்றது தொகுப்புக்கு…
மோனோலிசாவின் எக்ஸ் ரே!
பெண்களை அழகாக வரைவது ஒரு ஓவியனுக்கு முக்கியமான விஷயம். அந்த கொடுப்பினை எனக்கு இல்லை. அது என்னமோ என்ன மாயமோ தெரியல பொண்ணுங்க முகம் மட்டும் ஒழுங்கா வரைய வரமாட்டேங்குது. அனாடமிய ஒழுங்கா கத்துக்கோன்னு என் ஓவிய வாத்தியார்கள் சொன்னதை உதாசீனம் பண்ணியது ரொம்ம்ம்ம்ப தப்பு.










