தமிழ் விளம்பர எழுத்தாளர்கள் தேவை.

May 14, 2009 at 7:48 am 9 comments

தமிழ் விளம்பர எழுத்தாளர்களின் தேவை இன்று அதிகம்.
தமிழில் எழுதவேண்டும் என்று நினைப்பவர்களில் பலர் பத்திரிகை வேலையை மட்டும் தான் தேர்வு செய்கிறார்கள் அல்லது மூன்று பாரம் வரும் அளவுக்கு கவிதைகள் தேறியதும் புத்தகம் போட ஏதாவது பதிப்பகத்தை தேடி அலைகிறார்கள். பத்திரிகையை விட குறைந்த உழைப்பு (?) ஆனால் அதிக வருமானத்தை அளிக்கிற
விளம்பரத்துறைக்கு நம் எழுத்தாள நண்பர்கள் அதிகமாக வருவதில்லை. நூறு பத்திகளில் எழுத வேண்டிய விஷயங்களை ஒரு வரியில் சொல்ல  வேண்டிய நிர்ப்பந்தம் சுவாரஸ்யமானது என்றே நான் நினைக்கிறேன். ’குறுகத் தரிக்கும்’ இந்த திறமை தான் விளம்பர எழுத்துக்கு மிகத் தேவையானது. வெகுஜன மக்களிடம் நேரடியாக பேசும் கலை என்பதால் மொழி எளிமை முக்கியம்.
அவர்களின் பண்பாடு வாழ்வியல் உளவியல் பொருளாதாரம் சார்ந்த நுட்பமான அறிதல் ரொம்ப முக்கியம்.   இன்று வருகின்ற தமிழ் அச்சு விளம்பரங்கள் பெரும்பாலும் மொழிபெயர்ப்புகள்.
உள்ளூர் நிறுவனங்களுக்கு மட்டும் தான் நேரடி எழுத்துக்கள்
அவசியமாக இருக்கிறது அதுவும் பெரும்பாலும் ஆடல் பாடல்களல் ஆன துணிக்கடை விளம்பரங்கள் தான். விளம்பர மெட்டுகளுக்கு பாடல்கள் எழுதுவதும் முக்கிய வேலை.
நமது இந்திய சினிமாக்களின் நீட்சியாக இந்திய விளம்பரங்களிலும் பெரும்பாலும் பாடல்களே இடம் பிடித்திருக்கிறது. விளம்பர எழுத்துகளும் ஒரு வகை மக்கள் இலக்கியம் என்றே நினைக்கிறேன்.  ஆங்கிலத்தில் உலகப்புகழ்பெற்ற சிறந்த விளம்பர எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சிறந்த நாவலாசிரியர்களுக்கு இணையான புகழும்இருக்கிறது. உதாரணம் David Abbott, William Bernbach, Leo Burnett, David Ogilvy. தமிழிலும் இருக்கிறார்கள் ஆனால் அவர்களைப்பற்றி நமது இலக்கிய எழுத்தாளர்களுக்கோ ஊடகங்களுக்கோ அக்கறை இல்லை.  என்ன ஆச்சு… குழந்தை அழுகுது… போன்ற விளம்பர வசனங்கள் பட்டி தொட்டிகள் எங்கும் புகழ்பெற்று நமது தமிழ் வெகுஜனமக்களின் பகடி பேச்சுவழக்கின் ஒரு பாகமாக இருந்தது என்று கூட சொல்லாம் ஆனால் அந்த வசனத்தை  எழுதியது யார் என்று சத்தியமாக இன்று வரை தெரியாது.  புது பைக் புது ட்ரெஸ்ஸ§ புது வீடு கலக்குற் சந்ரு போன்றவை சமீபத்திய உதாரணங்கள். முழுக்கமுழுக்க வணிக ரீதியான கலை என்பதால் கூட படைப்பாளிகளின் விவரங்கள் வெளியில் தெரியாமல் போய் இருக்கலாம். சினிமாவுக்கு இனையான கவர்ச்சிகரமான ஒரு துறை விளம்பரம். சினிமாவை விட வணிகரீதியான ஒழுங்கு மிக அதிகம். மிகச்சிறந்த விளம்பர எழுத்தாளர்கள் சில சமயங்களில் ஒன்றுமே எழுதாமல் விட்டு விடுவார்கள்.  விளம்பரங்கள் காட்சியின் வழியாக பேசுபவை அதனால் மொழி சில சமயங்களில் அவசியமற்று போய்விடும். அந்த சமயங்களில் மவுனமே மிகச்சிறந்த வாசகம். நுட்பமான வாசிப்பு அறிவும் மொழி ஆளுமையும் உள்ள எழுத்தாளர்களின் வரவு விளம்பரத்துறைக்கு மிக முக்கியம் மனசை இளமையாகவும் மூளையை முதிர்ச்சியாகவும்  வைத்து கொள்ள வேண்டியது அதை விட முக்கியம். ’இளம்‘ எழுத்தாளர்களை விளம்பரத்துறைக்கு வரவேற்கிறேன்.

Advertisements

Entry filed under: tamil advertising, Uncategorized. Tags: , , .

அரசியல் விளம்பரங்கள் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’

9 Comments Add your own

 • 1. S.Ravi kumar  |  May 14, 2009 at 10:47 am

  Dear,
  The points discussed in this letter or mail are worth discussing.
  The examples cited are from the Audio Visual Media,Is it because,the Tamil Mind has more inclination towards things visual.
  I welcome the debate,

  Thank you,
  Ravi

 • 2. ensanthosh  |  May 14, 2009 at 10:52 am

  உங்கள் கருத்துக்கு நன்றி. மேலும் உங்கள் எழுத்துக்களை வரவேற்கிறேன்.

 • 3. Peer Mohamed  |  May 14, 2009 at 4:26 pm

  Friend, you can write a post that explains where these aspiring copywriters in Tamil can look for an opening.

 • 4. பென்னேஸ்வரன்  |  May 14, 2009 at 6:32 pm

  அற்புதம் நாராயணன். மிகப் பரந்த மனது உங்களுக்கு. நல்ல காரியம் செய்து வருகிறீர்கள்.

  வாழ்த்துக்கள்.

  டெல்லியில் ஏதாவது வேலை இருந்தால் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது எங்கள் இணைய தளத்துக்கு வருகை புரியுங்கள்.

  ராகவன் தம்பி

 • 5. ensanthosh  |  May 15, 2009 at 5:20 am

  உங்கள் ஆலோசனைகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா! உங்கள் இணைய தளத்தில் ஒரு விளம்பரமும் இரு பொய்களும் வாசித்தேன். முக்கியமான பதிவு. விளம்பர எழுத்தாளர்கள் வாய்ப்புகள் எதுவும் வந்தால் கண்டிப்பாக தெரியப்படுத்துவேன்.

 • 6. ensanthosh  |  May 15, 2009 at 5:22 am

  நன்றி பீர்முகம்மது. வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நான் வலைப்பூவில் வெளியிடுவேன். பெரும்பாலும் தமிழ் விளம்பர எழுத்தாளர்கள் வேலை FREE LANCEஆக தான் இருக்கிறது.

 • 7. Ramesh Kalyan  |  June 6, 2009 at 8:50 am

  முழுக்க உண்மை. இந்த விஷயத்தை பதிவு செய்திருப்பதே மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது எல்லா தமிழ் விளம்பரங்களுமே ஆங்கிலத்தின் மொழி பெயர்ப்பாகத்தான் இருக்கின்றன. அதனால் தமிழ் வழி சிந்தனைகளே இல்லை. கலக்கற சந்துரு மற்றும் எப்டி கீற விளம்பரங்கள எல்லாம் சராசரியான ஆனால் பிரபலமான விளம்பரங்கள். அவற்றின் தேவையும் அதுதான். ஒரு பாலீஷ் விளம்பரம் நல்ல கட்ட (வார்த்தைகள் நினைவில் இல்லை) என்று கடந்து செல்லும் ஒரு பெண்ணை குறிப்பாக காட்டி சொல்லப்படுவது எல்லாம் தமிழக ரசனை சார்ந்தவையே தவிர தமிழ் ரசனை சார்ந்தவை அல்ல. ஒரு நல்ல அசலான தமிழ் விளம்பரம் வெற்றி பெறவேண்டும். பிறகு எல்லோரும் அதை அடியொற்றி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். மொழிப்பற்று மிக்கதாக கருதப்படும் தமிழ் நாட்டில் இது கவனிக்கப்படாமல் இருப்பது சற்று ஆச்சரியமாகவே உள்ளது.

 • 8. தண்டோரா  |  June 16, 2009 at 6:25 pm

  நான் விளம்பரக்காரன் என்ற பெயரில் ஒரு சிறிய விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறேன்.தமிழ் காப்பி நன்றாக எழுத வரும்…தேவைகள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்..93400 89989..சென்னை

 • 9. லக்கிலுக்  |  June 20, 2009 at 2:10 pm

  நல்ல வருமானம் வரும் துறை இது. ஓரளவுக்கு சம்பாதித்தவன் சொல்றேன். நம்புங்கப்பூ! 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

May 2009
M T W T F S S
    Jun »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: