‘நாம் இருவர் நமக்கு இருவர்’

May 15, 2009 at 6:16 am 12 comments

family planning

‘நாம் இருவர் நமக்கு இருவர்’  80களில் இந்த வாசகத்தை கேட்காத, படிக்காத யாரும் இருந்திருக்க மாட்டார்கள். சிறுவனாக இருந்த நான் கூட மஞ்சள் நிறப்பின்புலத்தில் கறுப்பு வண்ணத்தில் திருத்தமாக வரைந்திருக்கும் அம்மா அப்பா குழந்தைகள் முகங்கள் போட்ட அரசு விளம்பரங்களை ஆர்வமாக பார்த்திருக்கிறேன். குடும்பக்கட்டுப்பாடு என்றால் என்னவென்று தெரியாத வயதில் அரசு மருத்துவமனைகளிலும் ரோட்டோர சுவர்களிலும் வரையப்பட்டிருந்த அந்த விளம்பரங்களை கவனித்திருக்கிறேன். எனது பால்ய கால ஞாபகங்களில் ஒன்றாக பதிந்து போன சித்திரங்கள் அவை. அதில்  மக்கள் தொகைப்பெருக்கம் உலகத்தை பயமுறுத்தத் துவங்கிய பிறகு உலக அரசாங்கங்கள் எடுத்த முடிவில் இந்தியாவும் இணைந்து கொண்டதின் வெளிப்பாடு அது. எனது தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பதினோரு பிள்ளைகள். அந்த விளம்பரங்களுக்கு கிடைத்த வெற்றி போலும். அரசாங்கம்¢ கொண்டு வந்த திட்டங்களில் இது மட்டும்தான் வர்க்க, ஜாதி வேறு பாடுகளை தாண்டி சமமான வெற்றியைப் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். அரசு விளம்பரங்கள் பெரும்பாலும் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன என்று நான் நினைத்ததுண்டு, பிற்காலத்தில் காட்சி தொடர்பியல் படிக்கும்போது தான் தெரிந்துகொண்டேன் மஞ்சள் வண்ணம் அதிக அலைநீளம் கொண்டது என்று. அதிக தூரத்திற்கு பார்வைக்கு படுகிற வண்ணம்.  அந்த விளம்பரங்களில் என்னை கவரும் இன்னொரு அம்சம் நல்ல சிகப்பு கலரில் வரையப்பட்ட முக்கோணம். அந்த முக்கோண லோகோவை வடிவமைத்தவர் டீப் தியாகி என்று அழைக்கப்பட்ட தர்மேந்திர குமார் தியகி. நேரு, லால்பகதூர் சாஸ்திரி காலத்திருந்து இந்திரா வரை  குடும்பக்கட்டுபாட்டு  உதவி ஆணையராக இருந்தவர். சிறந்த வடிவமைப்பு திறன் படைத்த்வர். இன்று இந்த முக்கோண லோகோ பல உலக நாடுகளின் குடும்பக்கட்டுபாட்டு சின்னமாக விளங்குகிறது. டீப் தியாகி தன் 41 ம் வயதில் இறந்து போனார் அவருக்கு குழந்தைகள் இல்லை. அவரது பங்களிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.

Advertisements

Entry filed under: Uncategorized.

தமிழ் விளம்பர எழுத்தாளர்கள் தேவை. விளம்பரம் செய்யாதீர்

12 Comments Add your own

 • 1. snekithi  |  May 15, 2009 at 8:53 am

  ideas is very nice…… u r very lovable person…… keep it up…….

 • 2. ensanthosh  |  May 15, 2009 at 9:02 am

  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சினேகிதி

 • 3. Jay  |  May 15, 2009 at 9:37 am

  the funny thing with this ad campaign is, it created a wrong image of an ideal family among Indian middle class educated audience. They thought that the ideal family have to have one boy and one girl child. so whoever got two girl child or two boy child, got sad.
  But anyways it has different agenda at that time. 🙂

 • 4. ensanthosh  |  May 15, 2009 at 9:45 am

  ஆமாம் சரியா சொன்ன ஜெய்.

 • 5. arun  |  May 15, 2009 at 4:32 pm

  எதனால் இந்த முக்கோண வடிவம் சந்தோஷ்?

 • 6. Nathan  |  May 17, 2009 at 8:27 am

  dae….santhosh, good to see you expressing in mediums like this………..great……..i like your blog very much…..i hope i can learn more from your writing…..good ……

  same way your vocabulary is very good….very entertaining and very interesting….

  i wish you should be choosy in selecting what to write…..since, that persuades people to visit or see your writing then and there…so far the topics are great

  great machan…..

 • 7. ensanthosh  |  May 19, 2009 at 9:32 am

  நன்றி நண்பா.

 • 8. ensanthosh  |  May 19, 2009 at 9:34 am

  முக்கோணத்தை பற்றி சரியான தகவல்கள் எங்கும் கிடைக்கவில்லை. யாருக்கேனும் தெரிந்தால் இங்கே பதிவு செய்யலாம்.

 • 9. selections  |  May 20, 2009 at 11:10 am

  சந்தோஷ்!
  என்னை உனக்கு நினைவிருக்குமான்னு தெரியலை, நான் அருணோட நண்பன், 2008 புத்தகக் கண்காட்சியில் நம்ம சந்திச்சிருக்கோம்(அஜயன் பாலாவைக் கூடப் பார்த்தோமே ஞாபகம் இருக்கா?!).

  அந்த முக்கோணம் தொடர்பா ஒரே ஒரு சுவாரசியம் எங்க டியூஷன் வாத்தியார் சொல்லியிருக்கார் – அந்த முக்கோணத்தை எப்பவும் தலைகீழாத்தான் வரைஞ்சிருப்பாங்க, ஏன்னா, அது சுருங்கனும் அப்படீங்கற தாத்பரியம் – இப்ப சுருங்கி, ‘நாமிருவர் நமக்கொருவர்’னு இப்ப ஆகிப்போச்சில்ல!

  உன்னை இங்க பார்க்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு! தொடர்ந்து எழுதுங்கள்!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

 • 10. selections  |  May 20, 2009 at 11:12 am

  சொல்ல மறந்தது – அந்த முத்தாய்ப்பான கடைசி வரி – ‘அவரது பங்களிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.’, இதை இயல்பா, எந்தவொரு puntuationம் இல்லாம சொன்னது – விகடன் பாணியில சொன்னா- ‘குபுக்’னு சிரிப்பை வரவழைத்தது 🙂

 • 11. ensanthosh  |  May 20, 2009 at 11:19 am

  மன்னிக்கவும் வெங்கட் ரமணன். எந்த அருண். இரண்டு மூன்று அருண்கள் எனக்கு நண்பர்கள் உண்டு. ஓவியக்கல்லூரி நண்பண் அருண் என்று நினைக்கிறேன். மங்கலான ஞாபகம். எப்படி இருந்தாலும் உங்கள் பதிவுக்கு நன்றி. நான் தலை வனங்குவதாக சொன்னது சும்மா இல்லை. முக்கோணம் பற்றிய சுவையான தகவலுக்கு நன்றி.

 • 12. லக்கிலுக்  |  June 20, 2009 at 2:40 pm

  முக்கோணம் எது எதையோவெல்லாம் நினைவுப்படுத்தக்கூடிய வடிவம் 🙂

  குறிப்பாக ’மேட்டர்’ சைட்டுகளில் முக்கியமான இடங்களை மறைப்பதற்கு முக்கோணத்தை விட்டால் வேறு வழியில்லை 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

May 2009
M T W T F S S
    Jun »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: