அமுல் பேபி!

May 20, 2009 at 2:21 pm 7 comments

amul collect 3

அமுல் பேபி என்று கிண்டல் செய்வதை எல்லாரும் கேட்டிருப்போம். காரணம் அமுல் விளம்பரங்களில் வரும் உருண்டை முகமும் முட்டைகண்களும் உப்பிய கன்னங்களும் கொண்ட புள்ளிகளிட்ட சட்டை அணிந்த  குட்டிப்பெண் தான். அமுல் இந்திய வெண்மைப் புரட்சியின் முக்கியமான அடையாளம் . மிகப்பழைமையும் புகழும் கொண்ட ஒரு பிராண்ட். அமுல் என்ற பெயருக்கு காரணம் சமஸ்கிருதத்தில் அமுல்ய என்றால் விலைமதிப்பற்றது என்று பொருள் அதுமட்டுமல்லாமல் Anand Milk Union Limited என்பதன் சுருக்கிய வடிவமும் கூட. ஆனந்த் என்பது அமுல் தயாரிப்புகள் ஆரம்பித்த குஜராத்திலுள்ள கிராமத்தின் பெயர். டாக்டர் வர்கீஸ் குரியின் அவர்களின் முன்னெடுப்பில் அயிரக்கணக்கான பால் விவசாயிகளின் ஒருங்கிணவால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம் தான் அமுல் பிறப்பதற்கு காரணம்.   அமுல் இந்த அளவிற்கு பெயரும் புகழும் பெற  முக்கியமான காரணம் அதன் விளம்பரங்கள். அந்தந்த காலங்களின் சமூக நிகழ்வுகளை கிண்டலடிக்கும் அதன் கார்ட்டூன் வடிவ விளம்பரங்கள். காயிதே மில்லத் கல்லூரி சாலையில் முன்பு விளம்பரப்பலகைகள் இருந்தபோது சென்னை வாசிகள் அதை கவனித்திருக்கலாம். அரசியல் சினிமா கிரிக்கெட் பண்டிகைகள் என்று எல்லா விஷயங்களையும் கிண்டலடிக்கும் அந்த விளம்பரங்களின் வெற்றி அமுல் என்கிற பிராண்டை இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றிவிட்டது. 1945 ல் சந்தைக்கு வந்த அமுல் கிட்டத்தட்ட 1967 வரை வழக்கமான விளம்பர உத்திகளையே கையாண்டு வந்தது. அதன் பிராண்ட் இமேஜை மாற்றியவர் சில்வெஸ்டர் டகுன்கா (Sylvester daCunha)என்ற விளம்பர விற்பன்னர். உணவு பொருட்களை வாங்குவதில் முக்கிய முடிவுகளை எடுப்பது இந்தியாவை பொறுத்தவரை இல்லத்தரசிகள் தான். எனவே அவர்களுக்கு பிடித்தமான குழந்தை பாத்திரம் ஒன்றை உருவாக்க முடிவெடுத்து உருவாக்கப்படடவள் தான் இந்த அமுல் பேபி என்று அழைக்கப்படும் “அட்டர்லி பட்டர்லி குட்டிப்பெண்”. 1960 களின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளம்பர வரிசை அன்று முதல் இன்று வரை இந்தியாவில் நடந்த முக்கியமான நிகழ்வுகளின் நகைச்சுவை ஆவணமாகத் திகழ்கிறது. கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது அமுல் விளம்பரங்கள். 

amul collect 1

மேலும் அமுல் விளம்பரங்களை காண இங்கே கிளிக்கவும் http://www.amul.com/hits.html

Advertisements

Entry filed under: tamil advertising.

விளம்பரம் செய்யாதீர் விளம்பரங்களில் நடிக்க விருப்பமா?

7 Comments Add your own

 • 1. selections  |  May 21, 2009 at 5:16 am

  N(ostalg)ice!
  நேத்தே கூகுள் ரீடர்ல feedஐ சேர்த்தாச்சு! ஒரு இடுகை கூட இனி மிஸ்ஸாகாது!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

 • 2. ensanthosh  |  May 21, 2009 at 5:29 am

  நன்றி வெங்கட். அமுல் பற்றி உங்களுக்கு சுவையான தகவல் எதுவும் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளலாம்

 • 3. snekithi  |  May 21, 2009 at 10:58 am

  hi santhu…..

  amul babynu sonnave sweet sapta mathiri iruku…

  ungal blog oru puthu anupavathai tharukirathu endrum sollalam…

  ithai endrum neengal dhodara en vaazhthukal…

  anbudan

  snekithi

 • 4. ensanthosh  |  May 21, 2009 at 11:14 am

  thank you snekithi

 • 5. diwakar  |  May 22, 2009 at 6:06 am

  nalla blog. kalyanathukku piragu jollu adhigamaayiduchu pola 🙂

 • 6. ensanthosh  |  May 22, 2009 at 6:14 am

  ஹி ஹி ஜொள்ளா? லொள்ளா?

 • 7. லக்கிலுக்  |  June 20, 2009 at 2:28 pm

  நாட்டில் இனக்கலவரமே நடந்தாலும் கூட அதுபற்றிய அமுல் ஹோர்டிங் என்னவென்று பார்ப்பதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

May 2009
M T W T F S S
    Jun »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: