விளம்பரங்களில் நடிக்க விருப்பமா?

May 21, 2009 at 3:21 pm 5 comments

modelling

பெரும்பாலும் மாடல்கள் சினிமாவுக்கான ஒரு பாதையாகத்தான் விளம்பர மாடலிங்கை தேர்வு செய்கிறார்கள். அழகாக இருப்பது மட்டுமல்ல உணர்ச்சிகளை நொடியில் மாற்றி வெளிப்படுத்தும் தேர்ச்சியும் இருக்க வேண்டும். குட்டிக்குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை விளம்பரங்களில் மாடல்கள் பிஸியாக இருக்கிறார்கள். பிரிண்ட் மீடியா என்றால் பெரும்பாலும் கேமராவை முறைத்து பார்ப்பது போல் போஸ் கொடுத்தால் போதும். விளம்பரப்படங்கள் என்றால் தான் கொஞ்சம் நடிக்கவும் தெரிய வேண்டும். ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட ஒரு சிறு விளம்பரப்படத்தில் நடிக்க லட்சலட்சமாக வாங்கும் நடிக நடிகைகள் இருக்கிறார்கள். பெரும்பாலும் நடிகர்களை விளம்பர நிறுவனமோ அல்லது வணிகநிறுவனங்களோ தான் தேர்ந்தெடுக்கிறார்கள். விளம்பரப்பட இயக்குனர்களும் பரிந்துரைப்பது உண்டு. விளம்பர நடிகர்களுக்கான ஏஜென்சிகள் வசம் தான் பெரும்பான்மையான மாடல்களின் புகைப்பட ஆல்பங்கள் இருக்கும் தொடர்பு கொள்ளுவதும் அவர்கள் மூலமாக தான் இருக்கும். விளம்பரப்படங்களில் நடிக்க ஆர்வமுள்ளவர்கள் முதலில் தொடர்பு கொள்ள வேண்டியது ஒரு நல்ல விளம்பர புகைப்படக்கலைஞரைத்தான். அஷ்ட கோணங்களிலும் நவரச பாவங்களிலும் (சிரிப்பு, முறைப்பு, கடுப்பு, etc)  உங்களை புகைப்பிடித்து ஒரு ஆல்பம் தயாரித்து கொள்ளவும்.  பிறகு அந்த ஆல்பத்துடன் மாடல் ஏஜென்டுகளை அணுகவேண்டும். பல விளம்பரநிறுவனங்களுடன் தொடர்பிலிருக்கும் அவர்கள் உங்களை தேவைப்படும் போது விளம்பர தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள். உங்களுக்கு கிடைக்கவேண்டிய தொகையில் ஒரு பாகம் அவர்களுக்கு கமிஷனாகப்போகும். விளம்பரம் வெற்றி பொறுவதை பொறுத்து உங்கள் கிராஃப் ஏறவோ இறங்கவோ செய்யலாம். யார் கண்டது நீங்கள் அப்படியே பெரிய நடிகராகி அரசியலில் புகுந்து…

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , .

அமுல் பேபி! படைப்புத்திறனை பணமாக்கலாம்!

5 Comments Add your own

 • 1. ashok  |  May 21, 2009 at 4:50 pm

  anna kalakuringa…………..

  விளம்பரங்களில் நடிக்க விருப்பமா? title le nallairuku……………

  eppadi nadikarathunu sonna innum romba nallairukumla……..

 • 2. ensanthosh  |  May 22, 2009 at 6:03 am

  athan sollirukkene inimel try pannurathu unnoda poruppu

 • 3. லக்கிலுக்  |  June 9, 2009 at 1:44 pm

  ஹலோ பாஸ்!

  பத்தி பிரிச்சி பிரிச்சி எழுதுங்க. இப்படியே மொத்தமா ஒரே பாராவா எழுதினா படிக்குறவங்களுக்கு தாவூ தீர்ந்திடாதா?

  இதெல்லாம் உங்க காப்பிரைட்டர் சொல்லி கொடுக்கமாட்டாரா? 🙂

 • 4. ensanthosh  |  June 9, 2009 at 2:21 pm

  சாரி பாஸ். நீங்க இப்பவாவது சொன்னீங்களே. சரி பண்ணிடுறேன்.

 • 5. லக்கிலுக்  |  June 20, 2009 at 2:27 pm

  சந்தோஷ் அழகாதானே இருக்கீங்க? நீங்க நடிக்கலாமே?

  என்னுடைய சஜ்ஜஸன் என்னவென்றால் டாண்டெக்ஸ் விளம்பரங்களில் நீங்கள் நடித்தால் அந்நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை இருமடங்காக உயர்ந்துவிடும் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

May 2009
M T W T F S S
    Jun »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: