காமிக்ஸ் பயித்தியம்!

tamil advertising

mad-magazine-cover

பயித்திரக்காரப்பய என்று உங்களை யாராவது திட்டினால் அல்லது கிண்டல் செய்தால் என்ன செய்வீர்கள். பதிலுக்கு திட்டுவீங்க இல்ல கிண்டல் செய்வீங்க ஆனா ஹார்வே கர்ட்ஸ்மேன் அப்படி பதிலுக்கு திட்டவோ கிண்டல் செய்யவோ இல்லை. “அட பயித்தியக்காரபய! டைட்டில் நல்லாருக்கே” என்று யோசித்தார். காமிக்ஸ் ஆர்டிஸ்டாக இருந்த அவருக்கு  இந்த டைட்டிலில் ஏன் ஒரு பத்திரிகை நடத்தக்கூடாது என்ற பல்பு தலைக்கு மேல் எரிந்தது.  உடனே தன் நண்பரும் பதிப்பாளருமான் வில்லியம் கெயின்ஸுடன் தொடர்புகொண்டு தன் ஐடியாவை சொன்னார். இப்படி 1952இல் பிறந்தது தான் “மேட்” (MAD)என்கிற நகைச்சுவைக்கென்றே வெளிவரும் பத்திரிகை. முழுக்க முழுக்க காமிக்ஸ். அரசியல், விளையாட்டு, சினிமா, நாட்டுநடப்புகள் ஆளுமைகள் என்று எல்லா விஷயங்களையும் எடுத்துக்கொண்டு காமெடி பண்ணுவது தான் இதன் ஸ்பெசியாலிட்டி.

images

நம்ம ஊர் விகடன் தாத்தா மாதிரி இந்த பத்திரிகைகென்றே ஸ்பெஷியலாக உருவாக்கப்பட்ட ஆல்பெர்ட் இ நியூமென் என்கிற இந்த சின்னப்பயல் தன் எப்போதும் ‘மேடி’ன் அட்டையை அலங்கரிப்பவன். ஒவ்வொரு அட்டையிலும் அதன் உள்ளடக்கத்துக்கு ஏற்ப கமல்ஹாசன் மாதிரி கெட் அப் மாற்றி அசத்துவான். 1952 முதல் இன்று வரை ‘மேடி’ன் பயணம் மிகவெற்றிகரமானது. நான் இதை பெரும்பாலும் லான்ட்மார்க்கில் ஓசியில் படித்திருக்கிறேன். ஸ்பை வெர்சஸ் ஸ்பை இதில் எனக்கு பிடித்த காமிக்ஸ் தொடர். விகடனில் கரைவேட்டிகள் இரண்டு பேர் சண்டையிட்டு கொள்வது போல கொஞ்சம் நாள் முன்னால் ஒரு காமிக்ஸ் ஸ்ட்ரிப் வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். ஸ்பை வெர்சஸ் ஸ்பைன் பாதிப்பு தான்.

டாம் மார்ட்டின் என்கிற காமிக்ஸ் ஆர்டிஸ்டின் தொடரும் எனக்கு மிக விருப்பம். மூக்குச்சளி முதல் அழுக்கு ஜட்டி வரை இவர் காமிக்ஸில் ஒரு கேரக்டராக மாறுவது தனி அழுக்கு… சாரி அழகு.

வழக்கமான காமிக்ஸ் பிரியர்களை மேட் அவ்வளவாக கவர்வது இல்லை என்பதை எனது ஒருசில காமிக்ஸ் பிரியர்களான நண்பர்களிடம் பேசும்போது தெரிந்துகொண்டேன். எனென்றால் இதில் வரும் நிறைய கமிக்ஸ்கள் கொஞ்சம் புத்திஜீவித்தனம் கொண்டவை. கொஞ்சம் முதிர்ச்சியானவை. பிளாக் ஹூயூமர் என்கிறோம் இல்லையா அந்த வறையறைக்குள்ளும் கொஞ்சம் வரும். அதனால் “முட்டைத்தீவில் முகமூடி” வகை ரசிகர்களுக்கு இது பிடிப்பதில்லை என்று நினைக்கிறேன்.

இந்தியத்திருநாட்டில் இதுபோன்ற முஅயற்சி ஒன்றை கார்ட்டூனிஸ்ட் ஷங்கர் நடத்தினார் என்பதை கேள்விப்படிருக்கிறேன். ஷங்கர்ஸ் வீக்லி. ஆனால் இது முழுக்க காமிக்ஸ் இல்லை கார்ட்டூன்கள். இந்திய காமிக்ஸ் மற்றும் கார்ட்டூன்கள் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

ரொம்ப நல்லவர்கள் இதப் படிக்காதீங்க!

tamil advertising

change

தனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்…
இன்று முதல் எனது வலைப்பதிவை ‘எதைப்பற்றி’ வேண்டுமானாலும் எழுதும் வலைப்பதிவாக மாற்றுகிறேன். இதுவரை விளம்பரங்கள் சார்ந்த பதிவுகளையே எழுதிக்கொண்டிருந்தேன். இப்படி மாற்றிக்கொள்வது எனக்குள் இருக்கும் எழுத்தாளனுக்கு நான் கொடுக்கும் சுதந்திரம்.

அதேசமயம் விளம்பரங்கள் சம்பந்தமான விஷயங்களையும் கைக்கு மாட்டுகின்ற போதெல்லம் விடாமல் எழுதுவேன் என்பதையும் என் தீவிர(?) வாசகர்களுக்கு தெரிவித்த’கொல்கிறேன்’. வலைப்பதிவின் தலைப்பையும் ஊலலல்லா என்று மாற்றுகிறேன். இது கொண்டாட்டத்தின் சப்தம்.

ஒபாமாவுக்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு மாற்றம் தேவை தானே. ஹி! ஹி!

எந்த பொருளையும் கலையாக்கலாம்!

tamil advertising

laptop 2

இது நீங்கள் நினைப்பது போல உண்மையான மடிக்கணிணி இல்லை. வெறும் அட்டைகளால் உருவாக்கப்பட்ட “டம்மி பீஸ்”. இப்படி கைகளில் எந்த பொருள் கிடைத்தாலும் அதை அழகிய கலைபடைப்பாக மாற்றும் பதினெட்டு வயது இளங்கலைஞன் சத்யா.

sathya

சத்யா உனக்கு சொந்த ஊர் எது? இப்போது என்ன செய்கிறாய்?

திருப்பத்தூர். பள்ளிக்கல்வியை முடித்து விட்டு சென்னையில் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.

எப்படி இப்படி ஒரு ஆர்வம் ஏற்பட்டது?

சின்ன வயசிலேருந்து எனக்கு படம் வரையிறது ரொம்ப பிடிக்கும். ரொம்ப நாள் கல்ர் பென்சிலும் ஸ்கெட்சும் பயன்படுத்தி வரைந்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ஏன் இப்படி ஜங்க் மெட்டீரியல் வச்சு முயற்சி பண்ணக்கூடாதுன்னு தோணிச்சு. கலைப்பொருளாகவும் இருக்கும் அதேநேரம் உபயோகமாகவும் இருக்கணும் என்று நினைத்தேன்.

ship

இப்படி ஜங்க் மெட்டீரியல் வச்சு முதலில் என்ன உருவம் செய்தாய்?

ஒரு டேபிள் லாம்ப் முதலில் செய்தேன். முழுக்க காகிதமும் அட்டைகளும் கொண்டு செய்தேன். உள்ளே பல்பு போட்டு எரியவிட்டால் மிக அழகாக இருந்தது.

உன் படைப்புகளை விற்பனை செய்கிறாயா?

 ஆமா மூன்று படைப்புகள் விற்றுருக்கின்றன.

வீட்டில் உன்னை உற்சாகப்படுத்துகிறார்களா?

ஆமா எங்க அம்மா என்னை ரொம்ப உற்சாகப்படுத்தினாங்க!

fan copy

உன் எதிர்கால திட்டம் என்ன?

சினிமாவில் ஒரு கலை இயக்குனர் ஆகவேண்டும் என்பது தான் என் ஆசை.

நல்ல கலைஇயக்குனராக வர என் வாழ்த்துக்கள்!

எழுத்தாளர்களுக்கு இலவச விளம்பரம்

tamil advertising

writers

ழுத்தாளர்களை பிரபல பிராண்டுகளுடன் ஒப்புமையிட்டு யோசித்துகொண்டிருந்தேன். சும்மா ஒரு டமாசுக்கு தான் கோச்சுக்காம வாசிங்க.

ஜெயமோகன் – மெடிமிக்ஸ்
“இயற்கையின் நற்குணங்களுடன் பரம்பரியத்தின் வாசனை கொண்டதினால”

எஸ். ராமகிருஷ்ணன் – ஏர்டெல் பிராட்பான்ட்
” வேகமா டவுன்லோட் ஆகறதினால”

நாஞ்சில் நாடன் – டெட்டால்
“தீதும் நன்றும் பிறர்தர வாரா நம்ம கையிலேயே இருக்கு கைய சுத்தமா வச்சுக்குங்கங்கிறதினால”

கோணங்கி – ஓல்ட் மங்கு
” ரொம்ப புரதனமானது, அடிச்சா தல சுத்தும் என்ன நடக்குதுன்னே புரியவே புரியாதுங்குறதால”

சாருநிவேதிதா – வயாகரா
“………. ………………….. …………………………….தினால”

லக்கிலுக் – ஹட்ச்
” எந்த பிளாக் போனாலும் அங்கே பின்னூட்டம் போட்டு ஃபால்லோவ் பண்ணுறதினால”

பயித்தியக்காரன் – லைபாய்
“கதை போட்டி, திரையிடல் என்று ஆரோக்கியத்தின் இருப்பிடமாய் இருக்கிறதினால”

செல்வேந்திரன் – எல்.ஐ.சி
” யாருக்கு வேணும்னாலும் தேவை படும்போது பண உதவிகள் செய்றதினால”

அதிஷா –  வர்ஜின் மொபைல்
” திங் ஹட்கே என்று எப்போதும் மாத்தி யோசிக்கிறதினால”

முகில் – ஸ்பிரைட்
“வெரி ஸ்ட்ரைட், நோ உடான்ஸ்கிறதுனால”

வண்னத்துபூச்சியார் – கொடாக்
“வித விதமாக ‘ஃபிலிம்’ காட்டுறதுனால”

இந்த லிஸ்டில் வராதவர்களெல்லாம் கோபித்து கொள்ள வேண்டாம். நான் பதிவர் உலகத்துக்கு ரொம்ப புதுசு தெரிஞ்சவரைக்கும் போட்டிருக்கேன். உங்களுக்கு யாரைபற்றியாவது எழுதணும்னா எனக்கு  எழுதுங்க. பார்ட் டூ போடுறதா உத்தேசம்.

 கேரிகேச்சர்: சந்தோஷ்

ஐ லவ் சொந்த ஊர்.

tamil advertising

I_LUV_NY

உங்களுக்கு எந்த ஊர் சொந்த ஊராக இருந்தாலும் அந்த ஊர் மேல் ஒரு இந்த பாசம் இருக்கும் இல்லையா. அது என்னவாகவும் இருந்து விட்டு போகட்டும். இங்கே நீங்கள் பார்ப்பது ஐ லவ் நியூயார்க் லோகோ. உலகத்திலேயே மிக அதிகமாக மிமிக்ரி செய்யப்பட்ட லோகோ இது தான்.

i luv ny parody

இதை வெவ்வேறு வடிவங்களில் நீங்கள் டி-ஷர்டிலோ அல்லது ஏதோ ஒரு நிகழ்விலோ பார்த்திருக்கலாம். பார்த்ததில்லை என்றால் நீங்கள் உங்கள் சுற்றுவட்டத்தை பற்றிய கொஞ்சமும் அக்கறை இல்லதவர் என்று அர்த்தம். இந்த லோகோவை வடிவமைத்தவர் மில்டன் கிலேசர் என்கிற நியூயார்க்கை சேர்ந்த மூத்த(?) வடிவமைப்பாளர். 1929இல் பிறந்த மில்டன் நியூயார்கின் கலை மற்றும் இசை பள்லியில் பயின்றவர். 1977 இல் நியூயார்க் மாநில பிரசின்டாக இருந்த வில்லியம் எஸ் டோயல் சுற்றுலா பயணிகளின் வரவை அதிகரிக்க செய்ய அதற்கான விளம்பரங்களை உருவாக்க நினைத்து அதன் பொறுப்பை மில்டனிடம் ஒப்படைத்தார். அதற்காக மில்டன் கிலேசர் உருவாக்கியது தான் இந்த லோகோ. பாப் ஆர்ட் பாணியில் உருவாக்கப்பட்ட் லோகோ இன்றும் அமெரிக்காவின் பாப் கல்ச்சரின் ஒரு பாகம். இரட்டைக்கோபுரம் இடிக்கப்பட்ட போது இந்த லோகோ மறு உயிர் கொண்டு நியூயார்க் மக்களுக்கு ஆறுதலை கொடுத்தது.  சமீபத்தில் கூட ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக வெளிநாட்டில் நடந்த ஒரு போராட்டத்தை தொலைகாட்சியில் பார்த்த போது சில இளைஞர்கள் ஐ லவ் தமிழ் ஈழம் என்று இந்த லோகோவின் பாரடியை பொறித்த டி-ஷர்டுகளுடன் நிற்பதை பார்த்தேன்.

i_luv_kk

உங்களுக்கு திருநெல்வேலியாகவோ மதுரையாகவோ இருக்கலாம். உங்கள் ஊரை ஊராக இல்லாமல் உயிராக நேசிக்கும் நீங்கள் உங்கள் ஊர் பெயர் பொறித்த டி-ஷர்ட் வேண்டுமென்றால் எங்களை அணுகலாம் டி-ஷர்டுடனுன்  “உங்களில் யார் அடுத்த தங்கர்பச்சான்” என்கிற டைட்டிலையும் நீங்கள் வின் பண்ணலாம்.

வலைப்பதிவர் திரைப்பட விழா: ஒரு விளம்பரம்

tamil advertising

fall 1

என்ன பண்றது விளம்பரம் பற்றிய வலைப்பூனு சொல்லிட்டேன் அதனால எல்லாத்தையும் விளம்பரத்த தொடர்பு படுத்தியே பேசவேண்டி இருக்கு. இதுவரைக்கும் விளம்பரம் பத்தி தான் எழுதி இருக்கேன். இது விளம்பரத்துக்காக எழுதுறேன். போன வாரம் லக்கிலுக்கின் வலைப்பூவில் ஒரு கட்டுரை.  கொரிய இயக்குனர் கிம் கி டுக் பத்தி. அப்புறம் அவரோட திரைப்ப்டம் Spring, Summer, Fall, Winter… and Spring வலைப்பூவினரால் திரையிடப்படுகிறது . அந்நிகழ்வை செயல்படுத்துபவர் பயித்தியக்காரன் என்று அவருடைய சுட்டியையும் கொடுத்திருந்தார். சுட்டி பிடித்து பயித்தியக்காரனின் வலப்பூவிற்குள் நுழைந்தேன். உலகத்திரைபடம் உலகத்திரைபடம் என்று எல்லாரும் பேசுகிறார்களே, நமது வலைப்பூ மக்கள் உலகத்திரைபட ஞானத்தில் சற்றும் பின் தங்கி விடக்கூடாதெ என்று அவரே முயற்சி எடுத்து அவ்விழாவினை நடத்துகிறார் என்பதை அறிந்தேன். அதற்கு கிழக்கு பதிப்பகம் திரையிடல் கருவியும் இடமும் அளிக்கிறது என்பது கூடுதல் தகவல். ஏற்கனவே ஓவியக்கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் ஓடியோடி உலகத்திரைப்படம் பார்த்து மொட்டைமாடிகளில் விவாதித்து இந்திய சினிமாவின் முகத்தை மாற்றியே தீரவேண்டும் என சபதமெடுத்து இன்று அனிமேஷனிலும் அட்வெர்டைசிங்கிலும் வேலை பார்க்கிற என் நண்பர்களை நினைத்து கொண்டேன். ”ஞாபகம் வருதே” ஃபீலிங்கோடு கண்டிப்பாக திரையிடலுக்கு போக வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அப்படியே புதிதாக வலைப்பூ பேட்டையில் நுழைந்திருக்கும் புதுபேட்டை தனுஷ் மாதிரி இருக்கும் நான், ஏற்கனவே பேட்டையை கலக்கி துவம்சம்  செய்துகொண்டிருக்கும் லக்கிலுக் போன்ற ஜாம்பவான்களையும் சந்திக்கலாம் என்பது கூடுதல் சந்தோஷ எதிர்பார்ப்பு.

ஞாயிறு
தனியாகப்போவதற்கு கொஞ்சம் தயக்கமும் அதிகம் பயமும் இருந்ததால் கூடவே நண்பர் செல்லப்பாவையும் அழைத்து கொண்டேன். காரணம் அவர் வலைப்பூ சிட்டிசன் இல்லை. எல்டாம்ஸ் ரோடில் கிழக்கு பதிப்பகத்திற்கு எதிரில் இருக்கும் பழமை கொண்ட கட்டிடம் தான் அரங்கம்.நாங்கள் நுழையும்போது டாக்டர் ருத்ரன் உள்ளே செலவதைக்கண்டேன். முற்றத்திலும் வராண்டாவிலுமாக கொஞ்சம் நம் மக்கள். யாருடைய முகமும் தெரிந்தது அல்ல. “ எங்கே ஸ்கிரீனிங்” என்று நீல நிற உடுப்பு அணிந்திருந்த நண்பரிடம் கேட்டேன். ”இங்க தான், நான் லக்கி நீங்க” என்றார் அவர். “ ஓ யுவ கிருஷ்ணா! நான் சந்தோஷ் இந்த விளம்பரங்களப்பத்தி எழுதுறேன் இல்ல” என்றேன். “ ஓ என்சந்தோஷ்” என்ற லக்கி பக்கத்திலிருக்கும் டி-ஷர்ட் அணிந்த ’இளைஞரை’ அறிமுகப்ப்டுத்தினார் “ இவர் பயித்தியக்காரன்”. “ ஓ நீங்க தானா ( பாத்தா அப்டி தெரியலியே)“ என்றபடி கை குலுக்கினேன். “மேலே ஒரு ஓவியக்கண்காட்சி இருக்கு பாக்கலாமா” லக்கி. முதல் தளத்தில் ஓவியக்கண் காட்சி. பல்வேறு நவீன ஓவியர்களின் ஓவியங்கள். ஒரு சுற்று பார்த்து விட்டு கீழே வந்தோம். இதற்கிடையில் லக்கியும் நானும் கைல் பற்றியும் விளம்பரங்கள் பற்றியும் பேசியது தனி டிராக் அது இப்போதைக்கு அவசியமில்லாத சப்ஜெக்ட். நானும் செல்லப்பாவும் வராந்தாவின் ஓரத்தில் இருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டோம். லக்கி வந்திருந்த வலப்பூவினரின் ஜோதியில் ( இது சிகரெட் பற்றிய குறியீடு அல்ல) கலந்து விட்டார். நண்பர் முகில் வருவார் என்று நினைத்தேன். அவர் வரவில்லை அல்லது எனக்கு அடையாளம் தெரிய வில்லை. மற்ற எல்லாருடைய முகங்களையும் பார்த்து கொண்டிருந்தேன். எந்த முகங்களுக்குள் வண்ணத்து பூச்சியாரும், வால்பையனும், அதிஷாவும் இன்னும் யார் யரெல்லாம் ஒளிந்து கொண்டிருக்கிறார்களோ எனக்கு தெரியவில்லை என்று எண்ணிக்கொண்டேன். நான்கு மணிக்கு என்று சொல்லியிருந்த திரையிடல் நாலேகாலுக்கு மேல் ஆரம்பித்தது. பிளாஸ்டிக் நாற்காலிகளை நாங்களே இழுத்து போட்டுக்கொண்டு உட்கர்ந்தோம். அதிகம் பெரிசாக தெரியாத அறை. இன்னும் இரண்டு மாதங்களில் கண்டிப்பாக இடம் பத்தாது. பயித்தியக்காரன்(ர்) இனி இம்மாதியான திரையிடல்கள் மாதத்தின் முதல் ஞாயிறுகளில் நடக்கும் என்று விட்டு இயக்குனர் கிம் கி டுக் மற்றும் படத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை கொடுத்தார். மீதியை வெண் திரையில் காண்க என்று முத்தாய்ப்பாக முடித்துகொண்டு திரைக்கு வழி விட்டார். படம் ஆரம்பமானது. எனக்கு எப்போதுமே திரைப்படம் சென்சார் சர்டிஃபிகேட் போடுவதிலிருந்தே பார்க்க ஆரம்பித்தால் தான் பிடிக்கும் ஆனால் சிலருக்கு படம் ஆரம்பித்து பத்து நிமிடம் போனபின்பு இருட்டில் தடவியபடி தியேட்டருக்குள் நுழைவது தான் பிடிக்கிறது. இதே மனநிலையில் தான் சிலர் படம் போட்டு அரைமணி நேரம் தாண்டியும் கதவை கிரீச்சிட திறந்தபடி உள்ளே நுழைந்து கொண்டே இருந்தார்கள்.பயித்திய காரன் தான் எழுந்து எழுந்து கதவை சாத்திகொண்டிருந்தார். நண்பர்களே அடுத்த தடவையேனும் பாதி சிகரெட்டை தூக்கி எறிந்தாலும் பரவாயில்லை தயவு செய்து சீக்கிரமாக அரங்கத்திற்குள் வந்து விடுங்கள். படம் முடிந்த போது மணி ஆறு தாண்டி விட்டது. அரங்கத்தைவிட்டு வெளியே வந்தோம். பயித்தியக்காரன் இருங்க டீ வந்திரும் சாப்பிட்டு கிளம்பலாம் என்றார். அவரைப்பார்த்து பெருமை பட்டேன். அவருடைய இந்த முயற்சியை உழைப்பை முகத்துக்கு நேராக பாராட்டலாம் என்று நினைத்தேன். அது நாகரீகமல்ல அந்த பழக்கமும் நம்மிடம் கிடையாது என்பதால் “ சரிங்க டைம் ஆச்சு கிளம்பறோம்” என்றேன்.குரூப் குரூப்பாக வட்டமாக நின்று கொண்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு ஏற்கனவே செல்லப்பாவையும் தற்போது லக்கிலுக்கையும் தவிர வேறு யாரை தெரியாது. செல்லப்பா வேறு செல்போனுக்கு காதை கொடுத்து அங்குமிக்கும் நடந்தபடி பேசிக்கொண்டிருந்தார். “ இல்ல பாஸூ…” என்று நண்பர்களிடம் கதைக்க தொடங்கிய லக்கிலுக்கை இடைமறித்து ”அடியேன் கிளம்புறேன் வலையில் சந்திக்கலாம்” என்று விட்டு நடையைக்கட்ட தொடங்கினோம். அடுத்த திரையிடலுக்கு அனைவரும் வருக. சரி சினிமாவைப்பற்றி எதுவுமே எழுதவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். இந்த சினிமா பேசுவதற்கு உரியது அல்ல பார்ப்பதற்குரியது.

ஜெயமோகனின் விளம்பரம்.

tamil advertising

தலைப்பை பார்த்து ஏமாந்திருப்பீர்கள். எல்லாம் ஒரு விளம்பர யுக்தி தான். என் அன்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் விளம்பரங்கள் பற்றி தன் வலைத்தளத்தில் எழுதி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கே உரிய நக்கலுடன் எழுதப்பட்டக் கட்டுரை. விளம்பரங்கள் பற்றிய இத்தைகைய உரையாடல்கள் மூலம் சமூகத்தின் கூட்டு மன நிலை சார்ந்த புரிதல்கள் ஏற்படுமாயின் மிகுந்த சந்தோஷம். அந்த கட்டுரையை படிக்க இங்கே கிளிக்குங்கள்

http://jeyamohan.in/?p=2847

விளம்பரங்களில் செக்ஸ்.

tamil advertising

saatchi_bar_optical_illusion_advertisement_sex_sexual_funny_advertising

தொண்ணூறுகளில் மிலின்ட் சோமனும் மது சாப்ரேவும் நிர்வாணமாக நடித்த STUFF SHOE விளம்பரம் மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் இயக்குனர் மகேஷ் பட்டின் மகளும் நடிகையுமான பூஜாபட் தன் பாடிபெயின்ட் பண்ணிய தேகத்தை விளம்பரங்களில் காட்டி இன்னோரு சர்ச்சையை கிளப்பினார். பாலியலை பூச்சாண்டி ரேஞ்சுக்கு ஒளித்து வைத்து கண்ணா மூச்சி காட்டும் நமது சமூகத்தில் இந்த சர்சைகளும் எதிர்ப்பும் நமக்கு வியப்பளிக்கும் ஒன்றல்ல. மேலை நாடுகளின் செக்ஸ் என்கிற விளம்பர பொட்டலத்தில் கட்டி பொருட்களை சந்தையில் விற்பது சகஜமான ஒன்று.

saatchi_pool_optical_illusion_advertisement_sex_sexual_funny_advertising

மேலும் அந்த பொருளின் நுகர்வோர் வறையறைக்கு ஏற்ற மாதிரி தான் செக்ஸ் சமாச்சாரங்களை கையாள்கிறார்கள். உதாரணம் ஆக்ஸ் ஃபெர்ப்யூம் விளம்பரங்கள். கேன்ஸ் விளம்பர விழாக்களில் பலதடவை விருதுகளை அள்ளியிருக்கிறது இத்தைகைய ஆச்ஸ் விளமபரங்கள். அந்த விளம்பரங்களுடன் ஒப்பிடும்போது ஆக்ஸ் இந்திய மார்கெட்டில் பண்ணுகிற விளம்பரங்கள் ரொம்பவும் கண்ணியமாக இருக்கிறது என்று சொல்வேன். இந்திய விளம்பரங்களை பொறுத்த வரை காமசூத்ரா ஆணுறை மிகவும் தைரியமாக கொஞ்சமே மறைக்கப்பட்ட தேகங்களுடன் விளம்பரங்களை வெளியிட்டது. அதுவும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகளில் மட்டும் தான். தமிழில் வேறு வெகுஜன பத்திரிகைகளில் பார்த்த ஞாபகம் எனக்கு இல்லை. விளமபர்ங்களில் செக்ஸ் என்பது பெரும்பாலும் பெண்ணுடலை காட்சி பொருளாக்கி வியாபாரம் செய்யும் ஒரு தந்திரம் என்கிற வகையில் அதை பெண்ணிய வாதிகள் எப்போதும் எதிர்க்கிறார்கள். ஆண்களின் சவர பிளேடு விளம்பரங்களுக்கு பெண் எதற்கு எனபது அவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளுக்கு உதாரணம். இன்றைய வணிகச்சந்தையில் பெரும்பான்மையான நுகர்வோர் இளம் வயதினரகவும் மிகப்பெரிய வாங்கும் சக்தியாகவும் இருப்பது இத்தகைய விளம்பரங்களுக்கு துணைசெய்வதாக இருக்கிறது. இவர்களிடம் எளிதில் செல்லுபடியாகும் ஒரு விஷ்யம் செக்ஸ்.

saatchi_beach_optical_illusion_advertisement_sex_sexual_funny_advertising

கலைக்கும் ஆபாசத்திற்கும் இடையே ஒரு நூலிழை தான் இடைவெளி இருக்கிறது. டேவ் சான்டர்ஸ் தொகுத்த ஒரு செக்ஸ் இன் அட்வெர்டைசிங் ஆங்கில புத்தகம் விளம்பரங்களில் செக்ஸ் பற்றி படங்களுடன் (விளம்பரப்படம்) கூடிய ஒரு பதிப்பு. கடந்த பத்தாண்டுகளில் மேற்குலகில் வெளியிடப்பட்ட முக்கியமான விளம்பரங்களின் தொகுப்பு. ஆன் பெண் உடல்களை வைத்து அழகாக காட்சிபடுத்தப்பட்ட விளம்பரங்கள். மிகுந்த படைப்புத்திறனுடன் உருவாக்கப்பட்டு பல சர்வதேச விருதுகளை பெற்ற விளம்பரங்களின் தொகுப்பு அது. பெண்ணிய, சமூக, விமர்சனங்களை தாண்டி முகம் சுளிக்காமல் ரசிக்கும்படி உருவாக்கப்பட்ட அச்சு விளம்பரங்கள். அந்த விளம்பரங்களை இந்திய ஊடகங்களிலும், நமது சாலையோர விளம்பரப்பலகைகளிலும் கொஞ்சம் கற்பனைப்பண்னி பார்த்தேன். மூடிமறைக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரும் ஒரு மனம் அதை எப்படி எதிர்கொள்ளும். அதை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? நீங்களே சொல்லுங்கள்!

பி.கு: மேலே இருக்கும் விளம்பரங்களில் செக்ஸ் இல்லூஷனாக ஒளிந்துள்ளது. புரிந்து கொள்பவர்கள் பாக்கியவான்கள்.