விளம்பரங்களில் செக்ஸ்.

June 1, 2009 at 2:27 pm 9 comments

saatchi_bar_optical_illusion_advertisement_sex_sexual_funny_advertising

தொண்ணூறுகளில் மிலின்ட் சோமனும் மது சாப்ரேவும் நிர்வாணமாக நடித்த STUFF SHOE விளம்பரம் மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் இயக்குனர் மகேஷ் பட்டின் மகளும் நடிகையுமான பூஜாபட் தன் பாடிபெயின்ட் பண்ணிய தேகத்தை விளம்பரங்களில் காட்டி இன்னோரு சர்ச்சையை கிளப்பினார். பாலியலை பூச்சாண்டி ரேஞ்சுக்கு ஒளித்து வைத்து கண்ணா மூச்சி காட்டும் நமது சமூகத்தில் இந்த சர்சைகளும் எதிர்ப்பும் நமக்கு வியப்பளிக்கும் ஒன்றல்ல. மேலை நாடுகளின் செக்ஸ் என்கிற விளம்பர பொட்டலத்தில் கட்டி பொருட்களை சந்தையில் விற்பது சகஜமான ஒன்று.

saatchi_pool_optical_illusion_advertisement_sex_sexual_funny_advertising

மேலும் அந்த பொருளின் நுகர்வோர் வறையறைக்கு ஏற்ற மாதிரி தான் செக்ஸ் சமாச்சாரங்களை கையாள்கிறார்கள். உதாரணம் ஆக்ஸ் ஃபெர்ப்யூம் விளம்பரங்கள். கேன்ஸ் விளம்பர விழாக்களில் பலதடவை விருதுகளை அள்ளியிருக்கிறது இத்தைகைய ஆச்ஸ் விளமபரங்கள். அந்த விளம்பரங்களுடன் ஒப்பிடும்போது ஆக்ஸ் இந்திய மார்கெட்டில் பண்ணுகிற விளம்பரங்கள் ரொம்பவும் கண்ணியமாக இருக்கிறது என்று சொல்வேன். இந்திய விளம்பரங்களை பொறுத்த வரை காமசூத்ரா ஆணுறை மிகவும் தைரியமாக கொஞ்சமே மறைக்கப்பட்ட தேகங்களுடன் விளம்பரங்களை வெளியிட்டது. அதுவும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகளில் மட்டும் தான். தமிழில் வேறு வெகுஜன பத்திரிகைகளில் பார்த்த ஞாபகம் எனக்கு இல்லை. விளமபர்ங்களில் செக்ஸ் என்பது பெரும்பாலும் பெண்ணுடலை காட்சி பொருளாக்கி வியாபாரம் செய்யும் ஒரு தந்திரம் என்கிற வகையில் அதை பெண்ணிய வாதிகள் எப்போதும் எதிர்க்கிறார்கள். ஆண்களின் சவர பிளேடு விளம்பரங்களுக்கு பெண் எதற்கு எனபது அவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளுக்கு உதாரணம். இன்றைய வணிகச்சந்தையில் பெரும்பான்மையான நுகர்வோர் இளம் வயதினரகவும் மிகப்பெரிய வாங்கும் சக்தியாகவும் இருப்பது இத்தகைய விளம்பரங்களுக்கு துணைசெய்வதாக இருக்கிறது. இவர்களிடம் எளிதில் செல்லுபடியாகும் ஒரு விஷ்யம் செக்ஸ்.

saatchi_beach_optical_illusion_advertisement_sex_sexual_funny_advertising

கலைக்கும் ஆபாசத்திற்கும் இடையே ஒரு நூலிழை தான் இடைவெளி இருக்கிறது. டேவ் சான்டர்ஸ் தொகுத்த ஒரு செக்ஸ் இன் அட்வெர்டைசிங் ஆங்கில புத்தகம் விளம்பரங்களில் செக்ஸ் பற்றி படங்களுடன் (விளம்பரப்படம்) கூடிய ஒரு பதிப்பு. கடந்த பத்தாண்டுகளில் மேற்குலகில் வெளியிடப்பட்ட முக்கியமான விளம்பரங்களின் தொகுப்பு. ஆன் பெண் உடல்களை வைத்து அழகாக காட்சிபடுத்தப்பட்ட விளம்பரங்கள். மிகுந்த படைப்புத்திறனுடன் உருவாக்கப்பட்டு பல சர்வதேச விருதுகளை பெற்ற விளம்பரங்களின் தொகுப்பு அது. பெண்ணிய, சமூக, விமர்சனங்களை தாண்டி முகம் சுளிக்காமல் ரசிக்கும்படி உருவாக்கப்பட்ட அச்சு விளம்பரங்கள். அந்த விளம்பரங்களை இந்திய ஊடகங்களிலும், நமது சாலையோர விளம்பரப்பலகைகளிலும் கொஞ்சம் கற்பனைப்பண்னி பார்த்தேன். மூடிமறைக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரும் ஒரு மனம் அதை எப்படி எதிர்கொள்ளும். அதை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? நீங்களே சொல்லுங்கள்!

பி.கு: மேலே இருக்கும் விளம்பரங்களில் செக்ஸ் இல்லூஷனாக ஒளிந்துள்ளது. புரிந்து கொள்பவர்கள் பாக்கியவான்கள்.

Advertisements

Entry filed under: tamil advertising.

யூத்ஃபுல் விகடன் ஜெயமோகனின் விளம்பரம்.

9 Comments Add your own

 • 1. கலையரசன்  |  June 1, 2009 at 2:56 pm

  அட ஆமாம்.. பாருடா, எப்டி எல்லாம் யோசிக்கிறாங்கன்னு!

 • 2. யாத்ரீகன்  |  June 1, 2009 at 3:30 pm

  I still remember the Aha FM Ad boards kept all over chennai during its innaugral days and the stir it created

 • 3. ensanthosh  |  June 1, 2009 at 3:39 pm

  ஆமா நண்பரே அதைபற்றி நானே எழுதனும் என்று நினைத்தேன். ஞாபகபடுத்தியதற்கு நன்றி

 • 4. Tamilarasi.D  |  June 3, 2009 at 12:38 pm

  vanakkam..
  mukam sulikamal rasikum vitham uruvakkapadum vilamparangal nichayam aatharikappadum endru ninaikiren.. silavilamparangalil(eg;7up ad, recently one perfume ad) thevai illamal serkappadum aabasam sattru veruppai uruvakkukirathu.
  dinamalar ad(sundayna irandu).. oru seithithaal vilambarathirku avvithamana appeal or concept thevaiyanatha?

 • 5. லக்கிலுக்  |  June 5, 2009 at 9:27 am

  சுவாரஸ்யமான பதிவு சந்தோஷ்.

  ஆனால் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள். இவ்வளவு குட்டியாக வேண்டாம் 🙂

 • 6. லக்கிலுக்  |  June 20, 2009 at 2:25 pm

  நம்மூரில் செக்ஸ் விளம்பரங்களில் சுவாரஸ்யத்தை கூட்டுவது மூட்ஸ் விளம்பரங்கள். நிரோத்துக்கு அந்தக் காலத்தில் செய்த விளம்பரங்கள் கொடூரம் 😦

 • 7. sindhukumar  |  January 13, 2010 at 6:11 pm

  ஹலோ, உங்கள் வலைப்பூவை இன்னிக்குத்தான் புதுசா பார்த்தேன். சுவாரஸ்யமா நிறைய விஷயம் சொல்றீங்க.. பாராட்டுக்கள்…தொடர்ந்து பார்க்கிறேன்… விமர்சிக்கிறேன்.
  பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  அன்புடன்,
  திருவட்டாறு சிந்துகுமார்
  kumudamsindhu@gmail.com

 • 8. 2010 in review «  |  January 2, 2011 at 1:55 pm

  […] விளம்பரங்களில் செக்ஸ். June 2009 7 comments 3 […]

 • 9. krishy  |  May 4, 2012 at 7:03 pm

  அருமையான பதிவு

  மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

June 2009
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: