ஐ லவ் சொந்த ஊர்.

June 8, 2009 at 7:18 pm 5 comments

I_LUV_NY

உங்களுக்கு எந்த ஊர் சொந்த ஊராக இருந்தாலும் அந்த ஊர் மேல் ஒரு இந்த பாசம் இருக்கும் இல்லையா. அது என்னவாகவும் இருந்து விட்டு போகட்டும். இங்கே நீங்கள் பார்ப்பது ஐ லவ் நியூயார்க் லோகோ. உலகத்திலேயே மிக அதிகமாக மிமிக்ரி செய்யப்பட்ட லோகோ இது தான்.

i luv ny parody

இதை வெவ்வேறு வடிவங்களில் நீங்கள் டி-ஷர்டிலோ அல்லது ஏதோ ஒரு நிகழ்விலோ பார்த்திருக்கலாம். பார்த்ததில்லை என்றால் நீங்கள் உங்கள் சுற்றுவட்டத்தை பற்றிய கொஞ்சமும் அக்கறை இல்லதவர் என்று அர்த்தம். இந்த லோகோவை வடிவமைத்தவர் மில்டன் கிலேசர் என்கிற நியூயார்க்கை சேர்ந்த மூத்த(?) வடிவமைப்பாளர். 1929இல் பிறந்த மில்டன் நியூயார்கின் கலை மற்றும் இசை பள்லியில் பயின்றவர். 1977 இல் நியூயார்க் மாநில பிரசின்டாக இருந்த வில்லியம் எஸ் டோயல் சுற்றுலா பயணிகளின் வரவை அதிகரிக்க செய்ய அதற்கான விளம்பரங்களை உருவாக்க நினைத்து அதன் பொறுப்பை மில்டனிடம் ஒப்படைத்தார். அதற்காக மில்டன் கிலேசர் உருவாக்கியது தான் இந்த லோகோ. பாப் ஆர்ட் பாணியில் உருவாக்கப்பட்ட் லோகோ இன்றும் அமெரிக்காவின் பாப் கல்ச்சரின் ஒரு பாகம். இரட்டைக்கோபுரம் இடிக்கப்பட்ட போது இந்த லோகோ மறு உயிர் கொண்டு நியூயார்க் மக்களுக்கு ஆறுதலை கொடுத்தது.  சமீபத்தில் கூட ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக வெளிநாட்டில் நடந்த ஒரு போராட்டத்தை தொலைகாட்சியில் பார்த்த போது சில இளைஞர்கள் ஐ லவ் தமிழ் ஈழம் என்று இந்த லோகோவின் பாரடியை பொறித்த டி-ஷர்டுகளுடன் நிற்பதை பார்த்தேன்.

i_luv_kk

உங்களுக்கு திருநெல்வேலியாகவோ மதுரையாகவோ இருக்கலாம். உங்கள் ஊரை ஊராக இல்லாமல் உயிராக நேசிக்கும் நீங்கள் உங்கள் ஊர் பெயர் பொறித்த டி-ஷர்ட் வேண்டுமென்றால் எங்களை அணுகலாம் டி-ஷர்டுடனுன்  “உங்களில் யார் அடுத்த தங்கர்பச்சான்” என்கிற டைட்டிலையும் நீங்கள் வின் பண்ணலாம்.

Advertisements

Entry filed under: tamil advertising.

வலைப்பதிவர் திரைப்பட விழா: ஒரு விளம்பரம் எழுத்தாளர்களுக்கு இலவச விளம்பரம்

5 Comments Add your own

  • 1. கலையரசன்  |  June 8, 2009 at 8:12 pm

    அருமைய்யா! எனக்கு ஒரு டீ/சர்ட் சொல்லுலைய்யா…

    ஐ லவ் தமிழன்

  • 2. ensanthosh  |  June 9, 2009 at 1:38 pm

    டி-ஷர்ட் சொல்லலாம். “உங்களில் யார் அடுத்த தங்கர்பச்சான்” பட்டம் பெற தயாரா? கலையரசன்!

  • 3. செல்லப்பா  |  June 9, 2009 at 5:06 pm

    அசலைவிட நகல் செய்வதில் திறமையானவர் என தங்கரை உதாரணம் காட்டியது ஏனோ? தங்கர்மேல் என்ன கோபம்! தமிழனை மதிக்க தமிழனுக்குத் தெரியவில்லை என கோபப்படப் போகிறார்.

  • 4. ensanthosh  |  June 9, 2009 at 6:10 pm

    மன்னிக்கவும் செல்லப்பா. சொந்த ஊர் பெயரை சொன்னாலே உருகி அழுகிற அளவுக்கு எமோஷனல் சிகரமாக இருக்கும் நண்பர்களுக்கு தான் அந்த பட்டம் தரப்படும் என்று சொல்ல வந்தேன். நகல் செய்வதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.

  • 5. mugil  |  June 29, 2009 at 1:55 pm

    ஐ லவ் தூத்துக்குடி – ரெண்டு டீசர்ட் பார்சல்!!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 67,888 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

June 2009
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: