வலைப்பதிவர் திரைப்பட விழா: ஒரு விளம்பரம்

June 8, 2009 at 6:55 am 12 comments

fall 1

என்ன பண்றது விளம்பரம் பற்றிய வலைப்பூனு சொல்லிட்டேன் அதனால எல்லாத்தையும் விளம்பரத்த தொடர்பு படுத்தியே பேசவேண்டி இருக்கு. இதுவரைக்கும் விளம்பரம் பத்தி தான் எழுதி இருக்கேன். இது விளம்பரத்துக்காக எழுதுறேன். போன வாரம் லக்கிலுக்கின் வலைப்பூவில் ஒரு கட்டுரை.  கொரிய இயக்குனர் கிம் கி டுக் பத்தி. அப்புறம் அவரோட திரைப்ப்டம் Spring, Summer, Fall, Winter… and Spring வலைப்பூவினரால் திரையிடப்படுகிறது . அந்நிகழ்வை செயல்படுத்துபவர் பயித்தியக்காரன் என்று அவருடைய சுட்டியையும் கொடுத்திருந்தார். சுட்டி பிடித்து பயித்தியக்காரனின் வலப்பூவிற்குள் நுழைந்தேன். உலகத்திரைபடம் உலகத்திரைபடம் என்று எல்லாரும் பேசுகிறார்களே, நமது வலைப்பூ மக்கள் உலகத்திரைபட ஞானத்தில் சற்றும் பின் தங்கி விடக்கூடாதெ என்று அவரே முயற்சி எடுத்து அவ்விழாவினை நடத்துகிறார் என்பதை அறிந்தேன். அதற்கு கிழக்கு பதிப்பகம் திரையிடல் கருவியும் இடமும் அளிக்கிறது என்பது கூடுதல் தகவல். ஏற்கனவே ஓவியக்கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் ஓடியோடி உலகத்திரைப்படம் பார்த்து மொட்டைமாடிகளில் விவாதித்து இந்திய சினிமாவின் முகத்தை மாற்றியே தீரவேண்டும் என சபதமெடுத்து இன்று அனிமேஷனிலும் அட்வெர்டைசிங்கிலும் வேலை பார்க்கிற என் நண்பர்களை நினைத்து கொண்டேன். ”ஞாபகம் வருதே” ஃபீலிங்கோடு கண்டிப்பாக திரையிடலுக்கு போக வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அப்படியே புதிதாக வலைப்பூ பேட்டையில் நுழைந்திருக்கும் புதுபேட்டை தனுஷ் மாதிரி இருக்கும் நான், ஏற்கனவே பேட்டையை கலக்கி துவம்சம்  செய்துகொண்டிருக்கும் லக்கிலுக் போன்ற ஜாம்பவான்களையும் சந்திக்கலாம் என்பது கூடுதல் சந்தோஷ எதிர்பார்ப்பு.

ஞாயிறு
தனியாகப்போவதற்கு கொஞ்சம் தயக்கமும் அதிகம் பயமும் இருந்ததால் கூடவே நண்பர் செல்லப்பாவையும் அழைத்து கொண்டேன். காரணம் அவர் வலைப்பூ சிட்டிசன் இல்லை. எல்டாம்ஸ் ரோடில் கிழக்கு பதிப்பகத்திற்கு எதிரில் இருக்கும் பழமை கொண்ட கட்டிடம் தான் அரங்கம்.நாங்கள் நுழையும்போது டாக்டர் ருத்ரன் உள்ளே செலவதைக்கண்டேன். முற்றத்திலும் வராண்டாவிலுமாக கொஞ்சம் நம் மக்கள். யாருடைய முகமும் தெரிந்தது அல்ல. “ எங்கே ஸ்கிரீனிங்” என்று நீல நிற உடுப்பு அணிந்திருந்த நண்பரிடம் கேட்டேன். ”இங்க தான், நான் லக்கி நீங்க” என்றார் அவர். “ ஓ யுவ கிருஷ்ணா! நான் சந்தோஷ் இந்த விளம்பரங்களப்பத்தி எழுதுறேன் இல்ல” என்றேன். “ ஓ என்சந்தோஷ்” என்ற லக்கி பக்கத்திலிருக்கும் டி-ஷர்ட் அணிந்த ’இளைஞரை’ அறிமுகப்ப்டுத்தினார் “ இவர் பயித்தியக்காரன்”. “ ஓ நீங்க தானா ( பாத்தா அப்டி தெரியலியே)“ என்றபடி கை குலுக்கினேன். “மேலே ஒரு ஓவியக்கண்காட்சி இருக்கு பாக்கலாமா” லக்கி. முதல் தளத்தில் ஓவியக்கண் காட்சி. பல்வேறு நவீன ஓவியர்களின் ஓவியங்கள். ஒரு சுற்று பார்த்து விட்டு கீழே வந்தோம். இதற்கிடையில் லக்கியும் நானும் கைல் பற்றியும் விளம்பரங்கள் பற்றியும் பேசியது தனி டிராக் அது இப்போதைக்கு அவசியமில்லாத சப்ஜெக்ட். நானும் செல்லப்பாவும் வராந்தாவின் ஓரத்தில் இருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டோம். லக்கி வந்திருந்த வலப்பூவினரின் ஜோதியில் ( இது சிகரெட் பற்றிய குறியீடு அல்ல) கலந்து விட்டார். நண்பர் முகில் வருவார் என்று நினைத்தேன். அவர் வரவில்லை அல்லது எனக்கு அடையாளம் தெரிய வில்லை. மற்ற எல்லாருடைய முகங்களையும் பார்த்து கொண்டிருந்தேன். எந்த முகங்களுக்குள் வண்ணத்து பூச்சியாரும், வால்பையனும், அதிஷாவும் இன்னும் யார் யரெல்லாம் ஒளிந்து கொண்டிருக்கிறார்களோ எனக்கு தெரியவில்லை என்று எண்ணிக்கொண்டேன். நான்கு மணிக்கு என்று சொல்லியிருந்த திரையிடல் நாலேகாலுக்கு மேல் ஆரம்பித்தது. பிளாஸ்டிக் நாற்காலிகளை நாங்களே இழுத்து போட்டுக்கொண்டு உட்கர்ந்தோம். அதிகம் பெரிசாக தெரியாத அறை. இன்னும் இரண்டு மாதங்களில் கண்டிப்பாக இடம் பத்தாது. பயித்தியக்காரன்(ர்) இனி இம்மாதியான திரையிடல்கள் மாதத்தின் முதல் ஞாயிறுகளில் நடக்கும் என்று விட்டு இயக்குனர் கிம் கி டுக் மற்றும் படத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை கொடுத்தார். மீதியை வெண் திரையில் காண்க என்று முத்தாய்ப்பாக முடித்துகொண்டு திரைக்கு வழி விட்டார். படம் ஆரம்பமானது. எனக்கு எப்போதுமே திரைப்படம் சென்சார் சர்டிஃபிகேட் போடுவதிலிருந்தே பார்க்க ஆரம்பித்தால் தான் பிடிக்கும் ஆனால் சிலருக்கு படம் ஆரம்பித்து பத்து நிமிடம் போனபின்பு இருட்டில் தடவியபடி தியேட்டருக்குள் நுழைவது தான் பிடிக்கிறது. இதே மனநிலையில் தான் சிலர் படம் போட்டு அரைமணி நேரம் தாண்டியும் கதவை கிரீச்சிட திறந்தபடி உள்ளே நுழைந்து கொண்டே இருந்தார்கள்.பயித்திய காரன் தான் எழுந்து எழுந்து கதவை சாத்திகொண்டிருந்தார். நண்பர்களே அடுத்த தடவையேனும் பாதி சிகரெட்டை தூக்கி எறிந்தாலும் பரவாயில்லை தயவு செய்து சீக்கிரமாக அரங்கத்திற்குள் வந்து விடுங்கள். படம் முடிந்த போது மணி ஆறு தாண்டி விட்டது. அரங்கத்தைவிட்டு வெளியே வந்தோம். பயித்தியக்காரன் இருங்க டீ வந்திரும் சாப்பிட்டு கிளம்பலாம் என்றார். அவரைப்பார்த்து பெருமை பட்டேன். அவருடைய இந்த முயற்சியை உழைப்பை முகத்துக்கு நேராக பாராட்டலாம் என்று நினைத்தேன். அது நாகரீகமல்ல அந்த பழக்கமும் நம்மிடம் கிடையாது என்பதால் “ சரிங்க டைம் ஆச்சு கிளம்பறோம்” என்றேன்.குரூப் குரூப்பாக வட்டமாக நின்று கொண்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு ஏற்கனவே செல்லப்பாவையும் தற்போது லக்கிலுக்கையும் தவிர வேறு யாரை தெரியாது. செல்லப்பா வேறு செல்போனுக்கு காதை கொடுத்து அங்குமிக்கும் நடந்தபடி பேசிக்கொண்டிருந்தார். “ இல்ல பாஸூ…” என்று நண்பர்களிடம் கதைக்க தொடங்கிய லக்கிலுக்கை இடைமறித்து ”அடியேன் கிளம்புறேன் வலையில் சந்திக்கலாம்” என்று விட்டு நடையைக்கட்ட தொடங்கினோம். அடுத்த திரையிடலுக்கு அனைவரும் வருக. சரி சினிமாவைப்பற்றி எதுவுமே எழுதவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். இந்த சினிமா பேசுவதற்கு உரியது அல்ல பார்ப்பதற்குரியது.

Advertisements

Entry filed under: tamil advertising.

ஜெயமோகனின் விளம்பரம். ஐ லவ் சொந்த ஊர்.

12 Comments Add your own

 • 1. sureshkannan  |  June 8, 2009 at 8:18 am

  என்னடா இது யாருமே இந்த நிகழ்வைப் பற்றி பதிவு எழுதவில்லையே என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். மிக முயன்றும் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போனது.

  //இந்த சினிமா பேசுவதற்கு உரியது அல்ல பார்ப்பதற்குரியது.//

  exactly.

 • 2. செல்லப்பா  |  June 8, 2009 at 8:38 am

  வணக்கம்
  திரையிடல் பற்றிச் சுடச்சுட பதிவு பண்ணீட்டீங்க. உலகத் திரைப்படங்கள் பார்க்க இப்போ முன்னைவிட நிறைய வாய்ப்புகள் இருப்பது மிகுந்த சந்தோஷத்தைத் தருது. ஏற்பாடு செய்தவர்களுக்கு மனப்பூர்வ நன்றி! ஒரே ஒரு ஃபோன் பண்ண போயிட்டேன் அதுக்காக என்னை இப்படிப் போட்டு வாங்கிட்டீங்க. அடுத்த மாசம் போனையே எடுத்துட்டு வர மாட்டேன் போதுமா!

 • 3. rudhran  |  June 8, 2009 at 9:08 am

  இந்த சினிமா பேசுவதற்கு உரியது அல்ல பார்ப்பதற்குரியது. yes

 • 4. பைத்தியக்காரன்  |  June 8, 2009 at 9:24 am

  அன்பின் என்சந்தோஷ்,

  நிகழ்ச்சிக்கு வந்ததற்கும், அதை பதிவு செய்ததற்கும் நன்றி. அடுத்த மாதமும் மறக்காமல், நண்பர் செல்லப்பாவுடன் வந்துவிடுங்கள்.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

 • 5. ensanthosh  |  June 8, 2009 at 9:30 am

  வாங்க சிவராமன் சார்.
  கண்டிப்பாக. தொடர்ந்து கலக்கலாம்.
  உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

 • 6. ensanthosh  |  June 8, 2009 at 9:32 am

  ருத்ரன் சார்
  உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

 • 7. ensanthosh  |  June 8, 2009 at 9:34 am

  செல்லப்பா உங்களை ‘செல்’லப்பா ஆக்கியதற்கு மன்னிக்கவும்

 • 8. ensanthosh  |  June 8, 2009 at 9:37 am

  உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சுரேஷ்கண்ணன் சார்

 • 9. surapathi  |  June 9, 2009 at 6:59 pm

  இரண்டு வருட பதிவு போட்ட பதிவர் போல் உள்ளது உங்கள் நடை…

  வாழ்த்துக்கள் …………….

  //”ஐ லவ் சொந்த ஊர்.”// super மேட்டர் ……….

 • 10. ensanthosh  |  June 9, 2009 at 7:06 pm

  நன்றி சுரபதி. கேட்கும் போது குஷியாத்தான் இருக்கு

 • 11. புருனோ  |  June 10, 2009 at 6:51 pm

  // எனக்கு எப்போதுமே திரைப்படம் சென்சார் சர்டிஃபிகேட் போடுவதிலிருந்தே பார்க்க ஆரம்பித்தால் தான் பிடிக்கும் ஆனால் சிலருக்கு படம் ஆரம்பித்து பத்து நிமிடம் போனபின்பு இருட்டில் தடவியபடி தியேட்டருக்குள் நுழைவது தான் பிடிக்கிறது. இதே மனநிலையில் தான் சிலர் படம் போட்டு அரைமணி நேரம் தாண்டியும் கதவை கிரீச்சிட திறந்தபடி உள்ளே நுழைந்து கொண்டே இருந்தார்கள்.//

  எனக்கு கூட முதலில் இருந்து பார்ப்பது தான் பிடிக்கும். ஆனால் சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களினால் தாமதமாகி விடுகிறதே 🙂 என்ன செய்ய

  —- அன்று தாமதமாக வந்தவன் என்பதால் ஒரு தன்னிலை விளக்கம்:) 🙂

 • 12. லக்கிலுக்  |  June 20, 2009 at 2:23 pm

  //“மேலே ஒரு ஓவியக்கண்காட்சி இருக்கு பாக்கலாமா”//

  அந்த பின்நவீனத்துவ கண்காட்சியைப் பார்த்த பல பேர் படம் பார்க்காமலேயே ஓடிவிட்டார்கள் என்பது பின்னர்தான் தெரிந்தது 😦

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

June 2009
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: