காமிக்ஸ் பயித்தியம்!

June 17, 2009 at 1:26 pm 9 comments

mad-magazine-cover

பயித்திரக்காரப்பய என்று உங்களை யாராவது திட்டினால் அல்லது கிண்டல் செய்தால் என்ன செய்வீர்கள். பதிலுக்கு திட்டுவீங்க இல்ல கிண்டல் செய்வீங்க ஆனா ஹார்வே கர்ட்ஸ்மேன் அப்படி பதிலுக்கு திட்டவோ கிண்டல் செய்யவோ இல்லை. “அட பயித்தியக்காரபய! டைட்டில் நல்லாருக்கே” என்று யோசித்தார். காமிக்ஸ் ஆர்டிஸ்டாக இருந்த அவருக்கு  இந்த டைட்டிலில் ஏன் ஒரு பத்திரிகை நடத்தக்கூடாது என்ற பல்பு தலைக்கு மேல் எரிந்தது.  உடனே தன் நண்பரும் பதிப்பாளருமான் வில்லியம் கெயின்ஸுடன் தொடர்புகொண்டு தன் ஐடியாவை சொன்னார். இப்படி 1952இல் பிறந்தது தான் “மேட்” (MAD)என்கிற நகைச்சுவைக்கென்றே வெளிவரும் பத்திரிகை. முழுக்க முழுக்க காமிக்ஸ். அரசியல், விளையாட்டு, சினிமா, நாட்டுநடப்புகள் ஆளுமைகள் என்று எல்லா விஷயங்களையும் எடுத்துக்கொண்டு காமெடி பண்ணுவது தான் இதன் ஸ்பெசியாலிட்டி.

images

நம்ம ஊர் விகடன் தாத்தா மாதிரி இந்த பத்திரிகைகென்றே ஸ்பெஷியலாக உருவாக்கப்பட்ட ஆல்பெர்ட் இ நியூமென் என்கிற இந்த சின்னப்பயல் தன் எப்போதும் ‘மேடி’ன் அட்டையை அலங்கரிப்பவன். ஒவ்வொரு அட்டையிலும் அதன் உள்ளடக்கத்துக்கு ஏற்ப கமல்ஹாசன் மாதிரி கெட் அப் மாற்றி அசத்துவான். 1952 முதல் இன்று வரை ‘மேடி’ன் பயணம் மிகவெற்றிகரமானது. நான் இதை பெரும்பாலும் லான்ட்மார்க்கில் ஓசியில் படித்திருக்கிறேன். ஸ்பை வெர்சஸ் ஸ்பை இதில் எனக்கு பிடித்த காமிக்ஸ் தொடர். விகடனில் கரைவேட்டிகள் இரண்டு பேர் சண்டையிட்டு கொள்வது போல கொஞ்சம் நாள் முன்னால் ஒரு காமிக்ஸ் ஸ்ட்ரிப் வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். ஸ்பை வெர்சஸ் ஸ்பைன் பாதிப்பு தான்.

டாம் மார்ட்டின் என்கிற காமிக்ஸ் ஆர்டிஸ்டின் தொடரும் எனக்கு மிக விருப்பம். மூக்குச்சளி முதல் அழுக்கு ஜட்டி வரை இவர் காமிக்ஸில் ஒரு கேரக்டராக மாறுவது தனி அழுக்கு… சாரி அழகு.

வழக்கமான காமிக்ஸ் பிரியர்களை மேட் அவ்வளவாக கவர்வது இல்லை என்பதை எனது ஒருசில காமிக்ஸ் பிரியர்களான நண்பர்களிடம் பேசும்போது தெரிந்துகொண்டேன். எனென்றால் இதில் வரும் நிறைய கமிக்ஸ்கள் கொஞ்சம் புத்திஜீவித்தனம் கொண்டவை. கொஞ்சம் முதிர்ச்சியானவை. பிளாக் ஹூயூமர் என்கிறோம் இல்லையா அந்த வறையறைக்குள்ளும் கொஞ்சம் வரும். அதனால் “முட்டைத்தீவில் முகமூடி” வகை ரசிகர்களுக்கு இது பிடிப்பதில்லை என்று நினைக்கிறேன்.

இந்தியத்திருநாட்டில் இதுபோன்ற முஅயற்சி ஒன்றை கார்ட்டூனிஸ்ட் ஷங்கர் நடத்தினார் என்பதை கேள்விப்படிருக்கிறேன். ஷங்கர்ஸ் வீக்லி. ஆனால் இது முழுக்க காமிக்ஸ் இல்லை கார்ட்டூன்கள். இந்திய காமிக்ஸ் மற்றும் கார்ட்டூன்கள் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

Advertisements

Entry filed under: tamil advertising.

ரொம்ப நல்லவர்கள் இதப் படிக்காதீங்க! ஆயர்பாடி மாளிகையில்…

9 Comments Add your own

 • 1. venkatramanan  |  June 17, 2009 at 4:42 pm

  சந்தோஷ்!
  இட்லிவடையின் கார்ட்டூன்ஸ் டாப் 10 பதிவு இங்கே உபயோகப்படும் என்றே நினைக்கிறேன்!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

 • 2. ensanthosh  |  June 17, 2009 at 5:10 pm

  Thank u venkat…

 • 3. பரிசல்காரன்  |  June 18, 2009 at 9:21 am

  அருமையான பகிர்வு தோழர்.

 • 4. Anonymous  |  June 18, 2009 at 10:04 am

  ஒருசில காமிக்ஸ் ரசிகர்களின் கருத்தை வைத்து காமிக்ஸ் ரசிகர்களின் ரசனை பற்றி முடிவுசெய்ய வேண்டாம். காமிக்ஸை வெறும் கதைப் புத்தகங்களாகப் படித்து ரசிப்பவர்கள் ஒரு வகை. அவற்றின் கலைத் தன்மைக்காகவும் சேர்த்து ரசிப்பவர்கள் இன்னொரு வகை. இந்த இரண்டாவது வகை வாசகர்கள் சற்று கூடுதல் முதிர்ச்சியுள்ளவர்கள். எனக்கு காமிக்ஸ் புத்தகங்களும் பிடிக்கும், மேட் பத்திரிகையும் பிடிக்கும். எனக்குத் தெரிந்து பலருக்கும்.

 • 5. ensanthosh  |  June 18, 2009 at 11:19 am

  நன்றி பரிசல் காரரே

 • 6. ensanthosh  |  June 18, 2009 at 11:27 am

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் பெயர் ஏன் குறிப்பிடவில்லை. நானும் ஒரு காமிக்ஸ் ரசிகன் தான். காமிக்ஸ் படிப்பதற்கு கொஞ்சம் முதிர்ச்சியற்ற தன்மை இருப்பதும் நல்லது தான்.

 • 7. லக்கிலுக்  |  June 20, 2009 at 2:17 pm

  சந்தோஷ்! தமிழ் காமிக்ஸும் படிப்பதுண்டா?

 • 8. சந்தோஷ்  |  June 22, 2009 at 10:51 am

  லக்கி நான் தமிழில் மட்டும் தான் காமிக்ஸ் படித்திருக்கிறேன். இங்கிலீஷில் பக்கங்களை புரட்டி படம் மட்டும் தான் பார்ப்பேன்

 • 9. வா.மணிகண்டன்  |  July 3, 2009 at 1:06 pm

  அப்பு…என்னமோ பின்னுறீங்கன்னு மட்டும் தெரியுது…ஆனா நிறைய டைம் எடுத்துக்குறீங்க? சீக்கிரம் சீக்கிரமா கட்டுரைகளை தட்டி விடுங்க…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

June 2009
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: