நிர்வாணம் என்பதும் ஒரு கலை!

September 25, 2012 at 4:47 pm 2 comments

இன்ஸ்டல்லேஷன் என்பது நவீன சிற்பக்கலையின் ஒரு வடிவம். கையில் கிடைக்கும் எதையும் கலையாக்கலாம் எனபதே இதன் தத்துவம். சாணி வரட்டியிருந்து சாட்டிலைட் உடைசல் வரை மனிதனுக்கு இந்த பிரபஞ்சத்தில் கைக்கெட்டும் எதை வேண்டுமானால் ஊடகமாக உபயோகிக்கலாம். ஆனால் அதில் ஒரு ஆர்டிஸ்டிக் இன்டெர்பிரடேஷன் என்கிற கலைஞனின் தலையீடு இருக்க வேண்டும். அதாவது கலைஞன் ஒரு கருத்தையோ, அனுபவத்தையோ அந்த கலைவடிவம் வழியாக பார்வையாளனுக்கு கடத்த வேண்டும். நம் ஊரிலும் வல்சன் கொலேரி முதல் மு. நடேஷ் வரை பல கலைஞர்கள் இருக்கிறார்கள்.

பெரும்பாலும் அஃறிணைகளையே இன்ஸ்டல்லேஷன் ஆர்ட்-க்கு உபயோகப்படுத்தி கொண்டிருக்க ஸ்பென்சர் டுனிக் என்கிற கலைஞனுக்கு “வேறு” மாதிரியாக ஒரு ஐடியா தோன்றி இருக்கிறது. அடிப்படையில் இவர் ஒரு புகைப்பட கலைஞர். அதிலும் எல்லா உலகப் புகைப்பட கலைஞர்களை போல இவரும் முதலில் சில அழகான நியூட்(நிர்வாண அழகியல்) புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். ஒன்றிரண்டு மாடல்களை வைத்து ஸ்டுடியோவுக்குள்ளே புகைப்படங்கள் மட்டுமே எடுப்பது என்பதை தாண்டி இந்த இந்த நியூட் மேட்டரை என்ன பண்ணலாம் என்று யோசித்தபோது, இருபது, முப்பது நியூட் மாடல்களை  திரட்டி பொதுவிடங்களில் வைத்து போட்டோ எடுக்கலாம் என்று தோன்றி இருக்கிறது.

அந்த புகைப்படங்கள் அடைந்த வெற்றி டுனிக்கை இன்னும் பிரம்மாண்டத்தை நோக்கி தள்ளி இருக்கிறது. ஆயிரம் இரண்டாயிரம் மாடல்கள் என்று போய் ஒரு சமயத்தில் பதினெட்டாயிரம் மாடல்கள் வரை நிர்வாணமாக வைத்து பிரம்மாண்டமான மனித இன்சஸ்டல்லேஷ்ன்களை அமைத்து அதை புகைப்படங்களும் எடுத்திருக்கிறார்.


ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று நிர்வாணமாக இவருடைய புகைப்படங்களில் மனித உடல்கள் அலையாக, கடலாக, கட்டிடங்களாக, நிலக்காட்சிகளாக விரிந்து பரவுகிறார்கள். நிர்வாணம் அசிங்கம் என்கிற சமூகப்பார்வையை இந்த கூட்டு நிர்வாண புகைப்பட்ங்களின் வழியாக கேள்விக்குள்ளாக்கும் ஸ்பென்சர் டுனிக் புகைப்படங்களின் வழியாக ஆதித்தன்மையின் அழகியலை தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருக்கிறார். அவருடைய புகைப்படங்களை காண கூகிளில்  Spencer Tunick என்று ‘டைப்’பிட்டு பார்க்கவும்.

Advertisements

Entry filed under: tamil advertising.

மால்தூசியனின் கதை இது காதல் கதை மட்டுமேயல்ல!

2 Comments Add your own

  • 1. Annamalai L  |  October 12, 2012 at 12:53 am

    Global arts appreciation குறித்து ஜனரஞ்சகமான/வெகுஜன கட்டுரைகள்/பதிவுகள் தமிழில் பெரிதும் இல்லாதது பெரிய குறையாகவே எனக்கு தோன்றி இருக்கிறது. அந்த சூழலில், installation art பற்றியும், Tunick-இன் நிர்வாண human installation art பற்றியும் சராசரி பார்வையாளர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இந்த பதிவு இருந்தது. துறை சார்ந்த வல்லுநர்கள், இது போன்ற வெகுஜன கட்டுரைகளை தமிழில் நிறைய எழுத வேண்டும். Therz a huge void waiting to be filled there.

    This one’s a good initial drop in that ocean, waiting to be filled.

  • 2. Iqbal Selvan  |  October 12, 2012 at 1:45 am

    Amazing info, thanks for sharing bro.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

September 2012
M T W T F S S
« May   Oct »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: