இது காதல் கதை மட்டுமேயல்ல!

September 26, 2012 at 1:06 am 8 comments

2050ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு அதிகாலை. நெய்தல் நிலத்திற்கேயுரிய உப்புக்காற்று மெலிதாக வீசிக்கொண்டிருந்த அந்த பூங்காவில் கிறிஸ்டோபர் எலிசபெத்தை சந்திக்க காத்திருந்தான்.

சென்னையிலிருந்து வரும்போதே இந்த முறை எலிசபெத்திடம் காதலை சொல்லி விடுவதை தீர்மானித்திருந்தான். ஆன்டிக்கு தெரிந்தால் உடனே கல்யாணம் செய்து கையோடு அனுப்பி விடுவாள். யாரும் தங்கள் காதலுக்கு எதிர் நிற்க மாட்டார்கள் என்பது இருவருக்கும் தெரியும். இருந்தாலும் கொஞ்சநாள் நன்றாக காதலிக்க வேண்டும் என்பது கிறிஸ்டோபரின் அவா. காலையில் பூங்காவுக்கு வந்து விடு என்று என்று சொல்லும் போதே ஏஞ்சலுக்கும் தெரியும். விருப்பம் சின்ன வயதிலிருந்தே இருந்தாலும் காதலை நேரடியாக சொன்னதில்லை.

பூங்காவிலிருந்து பார்க்கையில் எதிரில் கடல் லேசான மஞ்சள் ஒளியுடன் அலையாடிக்கொண்டிருந்தது. சில படகுகள் ஒளியுடன் அசைந்து கடல் பரப்பின் மீதாக நகர்ந்து கொண்டிருந்தது. கிரிஸ்டோபரின் மனமே படகுகளாக மிதந்து கொண்டிருப்பதாக தோன்றிய போது சின்னதாக சிரிப்பு வந்தது.

எலிசபெத் சரியாக ஆறுமணிக்கு வருவதாக சொல்லி இருந்தாள். ஆறு தாண்டி விட்டது. பூங்காவை சுற்றி முற்றி பார்த்தான். விளிம்புகளில் மஞ்சள் ஒளி லேசாக தீற்றப்பட்டு அழகான மரங்கள், செடிகள், பூக்கள். தானே ஒரு ஓவியத்தின் உள்ளே இருப்பது போல பிரமைத்து கொண்டான். பூங்கா ஓரத்தில் ஏதோ பழைய கட்டிட இடிபாடுகளின் எச்சங்கள் தெரிந்தன.

தூரத்தில் எலிசபெத் வந்து விட்டாள். இந்த பசுமையான பூங்காவின் நடுவில் அவள் வருவது பைபிள் கதைகளில் வரும் தேவகன்னிகையின் வருகை போல இருந்தது. இவ்வளவு அழகான இந்த இடம் தான் தன் அழகான காதலைச்சொல்ல சரியான இடம் என்று அவன் தேர்ந்தெடுத்தது சும்மா அல்ல. ஈடன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் போல தானும் எலிசபெதும் அங்கே அந்த பூங்காவில் காதலின் ரகசியக்கனியை பங்கிட்டு கொள்ள‌ வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டான். அந்த தருணமும் வந்து விட்டது.

கூடை நிறைய மத்தி மீனுடன் திரும்பும் அவன் அப்பாவைப்போல மனம் நிறைய காதலுடன் அவன் திரும்பி இருந்தான். அதை அப்படியே அவள் காலடியில் கொட்டி விட வேண்டும்.

எலிசபெத் வந்தாள். கிறிஸ்டோபர் தன் காதலை சொன்னான். அவளுக்கு அதிர்ச்சியளிக்க அதில் ஒன்றுமில்லை. இருந்தாலும் வெட்கம் சிறு வலையாக அவள் முகத்தில் பரவிற்று. தான் அவளுக்கு தர எதுவும் கொண்டுவரவில்லை என்பதை அவளுக்கு சொன்னான். பிறகு அந்த பூங்காவில் அந்த காலையில் மலர்ந்த செம்பருத்தி மலர் ஒன்றை பறித்து அவளுக்கு கொடுத்தான். அதில் லேசாக உப்பின் மணம் இருந்தது. செம்பருத்தியை தன் ஈரமான தலையில் சொருகியபடி அவள் அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்தாள். அவனும்.

தூரத்தில் இப்போது கதிரவனின் ஒளி மேலும் பொலிவாகிக்கொண்டு வந்தது. கிறிஸ்டோபர் எலிசபெத்தின் காதலால் அந்த பூங்கா மேலும் ஒளிர்வுடன் மினுங்க ஆரம்பித்தது.

கிறிஸ்டோபர் எலிசபெத்தின் கைகளை பிடித்துக்கொண்டான். எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தார்கள் என்பது அவர்ளுக்கு தெரியாது. எலிசபெத்தின் பார்வை வெட்கத்துடன் பூங்காவிலிருந்த ஒவ்வொரு செடிகளையும் அதன் பூக்களையும் தொட்டு தொட்டு மீண்டது. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் இந்த பூங்காவில் ஓடியாடி விளையாடியது இருவருக்கும் ஒரே சமயம் ஞாபகத்தில் வந்து உள்ளூர மகிழ்ச்சி பெருகிற்று.

எலிசபெத்தை நினைக்கும் போதெல்லாம் கிறிஸ்டோபரால் இந்த பூங்காவை நினைக்காமல் இருக்க முடியாது. பூங்காவை பார்க்கும் போதெல்லாம் எலிசபெத்தையும். இந்த கடற்கரையில் இவ்வளவு பெரிய பூங்கா எப்படி வந்தது என்று ஒரு நாள் டென்னிஸ் வாத்தியாரிடம் கேட்டதும் அவர் சொன்ன பதிலும் கூடவே ஞாபகம் வந்தது. இப்போது இந்த பூங்காவில் தன் காதலை சொல்லி தன் வாழ்க்கையை எலிசபெத்துடன் ஆரம்பிக்கப்போகிறான். இந்த கடற்கரை மண்ணில் எனது முன்னோர் போராடி மீட்ட இந்த இடத்தில் தன் காதலைச்சொன்னது அவனுக்கு ஆத்ம திருப்தியாக இருந்தது. இதை விட தன் காதலை சொல்ல பொருத்தமான இடம் இவ்வுலகில் வேறு உண்டா என நினைத்துகொண்டான்.

எமது மக்கள் பட்டினி கிடந்து, அடி உதை வாங்கி மீட்டுக்கொடுத்த இடம் அல்லவா இது. இங்கே தான் என் பேரனும் தன் காதலைச்சொல்வான். அவன் பேத்தியும் தன் காதலனை கொஞ்சுவாள். எங்கள் சந்ததிகள் செழித்து பெருகப்போவதும் இங்கிருந்து தான். எலிசபெத்தின் கைகளின் வெப்பத்தை உணர்ந்தவன் மெல்ல சிரித்து கொண்டான்.

இருவரும் எழுந்து வீட்டுக்குப்போகத் தயாரானார்கள். பூங்கா இருக்கின்ற இடத்தில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஏதோ பெரிய கட்டுமானங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் சில சிதைந்த சுவர்கள் மூலமாக தெரிந்து கொண்டிருந்தது. கிறிஸ்டோபரும் எலிசபெத்தும் கைகளை கோர்த்துக்கொண்டு நுழைவாயிலை விட்டு வெளியேறும்போது பூங்காவின் மூலையில் கிடந்த அந்த மட்கிப்போன பெயர்பலகையை கவனித்தான். அது அங்கே வரவிருந்த அந்த பிரமாண்ட திட்டத்தின் பெயர் பலகை. அது துரு பிடித்து பழைய வேதனைகளின் ஞாபகச்சின்னம் போல அங்கே கிடந்து. அதிலிருந்த எழுத்துகள் பெரும்பாலும் அழிந்து போயிருந்தது. சில எழுத்துக்களை மட்டுமே கிறிஸ்டோபராலும் எலிசபத்தாலும் வாசிக்க முடிந்தது. அணு ன் லைய ம் . பறவைகள் சில சிறகடித்து அவர்கள் தலைக்கு மீதாக பறந்து சென்றன். ஒரு மரத்தின் வேர் கிறிஸ்டோபரின் காலில் தட்டியது. டென்னிஸ் வாத்தியார் சொன்ன அந்த தாடிக்காரரை பற்றி பெருமையுடன் மனதில் நினைத்து கொண்டான்.

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , , .

நிர்வாணம் என்பதும் ஒரு கலை! ஃபேஸ்புக்: லைக்குகளின் நுண்நுண்ண‌ரசியலும் கமென்டுகளின் மரண‌மும்

8 Comments Add your own

 • 1. Prakash  |  September 26, 2012 at 10:44 am

  அருமை.

 • 2. Kumarraja  |  September 26, 2012 at 11:03 am

  கூடை நிறைய மத்தி மீனுடன் திரும்பும் அவன் அப்பாவைப்போல மனம் நிறைய காதலுடன் அவன் திரும்பி இருந்தான்.

 • 3. Annamalai L  |  September 27, 2012 at 10:16 am

  அருமை Chenthil.

  காதலுக்கு பின்னணியில் ஒரு மாபெரும் புரட்சியை, சிறு சுவடுகளின் மூலம் subliminal-ஆக கதை சொல்லியது, ஒரு தாக்கத்தை, இறுக்கத்தை இறுதியில் ஏற்படுத்தியது.

  நிகழ்காலத்திலிருந்து எதிர்காலம் நோக்கும் போது :
  அப்புடி ஒரு பூங்கா, இந்த நெய்தல் நிலத்தருகே. இன்றைய அணு மின் நிலைய நிலம், நாளைய பூங்காவாக கற்பனை செய்திருப்பது, உச்ச கட்ட கற்பனை/உவமை மட்டும் அல்ல, உச்ச கட்ட நம்பிக்கை. இன்றைய போராட்டத்தில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை மிளிர்கிறது. வாசகர்க்கும் அது தொத்தி கொள்ளும்.

  எதிர்காலத்திலிருந்து நிகழ்காலம் நோக்கும் போது :
  ‘தாடிக்காரன்’ என்ற ஒரு சுவடு, அடுத்த தலைமுறையினருக்கு சரித்திரத்தை தெரிந்த கொள்ள தூண்டும் சுவடாக இருக்கிறது. போராட்டத்தின் வலி, பெருமை உணர்ந்து வாழ்ந்திட ஒரு வழிகாலாக இருக்கிறது.

  நல்ல எழுத்து. உங்கள் ஓவியங்களை மிஞ்சிட உங்கள் எழுத்துக்கும் என் வாழ்த்துக்கள்.

  அண்ணாமலை

 • 4. Ravishankar Biotechnologist A K  |  September 27, 2012 at 1:22 pm

  Good attempt boss…Why should not you title it as “2050ல் கூடங்குள‌த்தில் ஒரு காதல்”?

 • 5. pandian  |  September 27, 2012 at 1:24 pm

  உங்கள் நம்பிக்கை நிஜமாக வாழ்துக்கள்.

 • 6. Sambamoorthy S  |  September 27, 2012 at 7:03 pm

  Dreams become reality….Appadi ungal kanavu Oru naal milira en advance vazhathukal… cheers Sambamoorthy..

 • 7. சில படைப்புகள்  |  October 14, 2012 at 12:11 am

  […] எழுதிய ஒரு பதிவு கீழே சுட்டியில். என் ஆசையை, ஒரு கனவை, கதை ‘போல’ […]

 • 8. Thiru  |  December 10, 2013 at 3:20 pm

  Oh Yes, “இது காதல் கதை மட்டுமேயல்ல”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

September 2012
M T W T F S S
« May   Oct »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: