அஞ்ஞானச் சிறுகதைகள் 0.1

October 25, 2012 at 11:43 pm 4 comments

 

1

பிளாஸ்டிக் பாட்டில்.
கி.பி. 2100
குருபிரசாத் ஆய்வுக்காக சேகரித்து தன் பச்சை நிற லேபரட்டிரியில் வைத்திருந்த அந்த குப்பையை கிளறிக்கொண்டிருந்தார். ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கையில் சிக்கியது. சுத்தமான குடிநீர் என்று அதில் எழுதி இருந்தது. “குடிநீரா அப்படி என்றால்” என்று அவர் நெற்றி சுருக்கி யோசித்து கொண்டிருந்தபோது அவர் கிட்னியோடு இணைக்கப்பட்டிருந்த மின்னணு காட்டி பீப் பீப் என்றது. கைகளில் கட்டியிருந்த வாட்ச் திரையில் மின்னிய வார்த்தையை உற்று பார்த்தார். “thirsty” அவசரமாக ஒரு மாத்திரையை நாக்கில் வைக்க அது கரைந்து உருகி அவருடைய தொண்டைக்குள் இறங்கத்துவங்கியது.

2

டார்க் பிறவுன் ஜெல்லி
கி.பி. 2500
சந்தானகிருஷ்ணன் செவ்வாய் கிரகத்தின் பாதுகாப்பு நுழைவு வாசலில் ஸ்கேனிங்கிற்காக நின்றிருந்தார். சில ரோபோக்கள் அவர் உடலை லேசர் ஒளியால் ஊடுருவி செக் செய்துகொண்டிருந்தன. பூமிக்கு விடுமுறைக்கு போனவர் இன்று தான் திரும்பி இருந்தார். வயிற்றை ஸ்கேன் செய்த ரோபோ திடீரென்று அலறியது. “extra terrestrial content: dark brown jelly ” என்று அயோனிச ஸ்பீக்கர்கள் மின்குரலில் கத்தியது. ஸ்கேனர் சிவப்பு திரையில் டீடெயில்ஸ் தோன்றியது கலர்: டார்க் பிறவுன், மெட்டீரியல்: ஜெல்லி டைப், டேஸ்ட்: ஸ்வீட். சட்டென்று அவர் முன்பு தோன்றிய மாயத்திரையில் கேப்டன் கூ படமாக தோன்றி கேட்டார் “மிஸ்டர். சந்தானகிருஷ்ணன் பூமியில் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள். “திருனெல்வேலி சார்” என்றார் சந்தானம்.

 

3

மூதாதை
கி.பி 2150
பிரணவ் கண்களை மூடி தயாராகிக்கொண்டான். அவன் தலையை சுற்றி விதவிதமான ஒயர்கள் நெளிந்து கொண்டிருந்தன. மூளையை ஊடுருவி பிணைத்திருக்கும் ஒயர்கள். அவன் தன் ஐந்து தலைமுறைக்கு முந்தைய அவன் எள்ளு தாத்தாவிடம் தொடர்பு கொள்ள தயாரானன். காலத்தின் பின்னோக்கிய ஒரு பயணம். விஞ்ஞானிகள் எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்துகொண்டிருந்தார்கள். ஓகே ஸ்டார்ட் ஒன் டூ த்ரீ. 2075… 2025..2012 அக்டோபர்… இன்று… இந்த நொடி…ரிங்டோன் அடித்துகொண்டே இருந்தது. தொடர்பு கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்துக்குபிறகு பிரணவ் கண்ணீருடனும் விஞ்ஞானிகள் மிகுந்த சோகத்துடனும் கலைந்து சென்றார்கள். கதையை படித்து முடித்துவிட்டீர்களா. இப்போது உங்கள் மொபைல் போனை பாருங்கள். ஒரு unknown நம்பரிலிருந்து மிஸ்டு கால் வந்திருக்கிறதா என்று!

 

4

எல்லோவ் பால்
கி.பி.2600

 

இந்திய விஞ்ஞானிகளுக்கு மிகப்பெருமையாக இருந்தது. ஆஸ்ட்ராய்ட் என்கிற புதிய பால் வீதிக்கு இன்று முதன்முதலாக ஒரு “காலக்சி ஷிப்பை” அனுப்பப்போகிறார்கள். சூரியனிலிருந்து ஒரு ட்ரில்லியன் ஒளிதூரத்தில் இருக்கும் பால்வீதி அது. ஷிப் இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட இருக்கிறது. அனைவர் முகத்திலும் பதட்டமும் கவலையுமாக இருந்தனர். தலைமை விஞ்ஞானி மூர்த்தி அந்த மிகப்பிரம்மாண்டமான ஷிப்பின் முன் சக்கரத்திற்கு பக்கத்தில் நின்றிருந்தார். அந்த சக்கரமே எல்.ஐ.சி பில்டிங்கை விட பெரிசாக இருந்தது. இந்த ஷிப் ஃபிளைட் மாதிரி சிறிது தூரம் தளத்தில் ஓடி பின் செங்குத்தாக மெலே எழும்பி விண்வெளிக்கு பறந்துவிடும். கவுன்ட் டவுன் ஆரம்பித்தது. பத்திலுருந்து தலைகீழாக எண்ண ஆரம்பித்தனர். சரியாக ஷிப் கிளம்பும் சில நொடிகளுக்கு முன்பு தலைமைவிஞ்ஞானி மூர்த்தி தன் வெள்ளை நிற தொங்கு சட்டையின் பையிலிருந்து அந்த எல்லோவ் பாலை எடுத்து முன்சக்கரத்திற்கு முன்பாக வைத்தார். அந்த பிரம்மாண்டமான சக்கரம் அதை நசுக்கியபடி முன்நகர்ந்தது. அந்த எல்லோவ் பாலிலிருந்து சிட்ரிக் ஆசிட் பீச்சி அடித்தது.

5
frogetarian
கி.பி. 3000
கி.பி. 3000லிருந்து கால யந்திரத்தில் ஏறி 2015க்கு வந்திருந்தான் அந்த மனிதன். அவன் இடுப்புக்குக்கீழே தவளையின் உடலைக்கொண்டிருந்தான். அவனைப்போலவே தவளை உடல் கொண்ட அவன் காலத்தின் சகமனிதர்களின் பிரதி நிதியாகத்தான் இப்போது இங்கே வந்திருக்கிறான். அந்த பெரிய வீட்டை பின் பக்கமாக சென்று சாலையிலிருந்து ஒரு துள்ளலில் மாடிக்கு குதித்து விட்டான். அறைக்குள் நுழைந்த போது அந்த வெள்ளையுடை மனிதர் இவனைக்கண்டு பீதியுடன் அலற முற்பட்டபோது அவன் கேட்டான் ” நீ தான் தவளையின் மரபணு கலந்த தக்காளிக்கு அனுமதி கொடுத்த மந்திரியா” அவர் பீதியுடன் தலையை ஆட்டினார். ஆப்ரிக்க கருந்தவளையின் கொடும் விஷம் கொண்ட நாக்கை ஆட்டியபடி அவன் பெருங்கோபத்துடன் அவர் கழுத்தை நோக்கி குனிந்தான்.
Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , .

நீங்களும் ஆகலாம் கோட்டோவியர்! அஞ்ஞானச் சிறுகதைகள் 02

4 Comments Add your own

 • 1. திண்டுக்கல் தனபாலன்  |  October 26, 2012 at 8:56 pm

  நடந்தாலும் நடக்கும்…

  உங்கள் சிந்தனைக்கு பாராட்டுக்கள்…

  நன்றி…

 • 2. Annamalai L  |  October 30, 2012 at 2:22 pm

  அருமையான கற்பனை. தற்போது தமிழில் fantasy fiction, science fiction குறைவாக இருப்பாதாக அடிக்கடி தோனுவதுண்டு. அந்த வகையில், இந்த post fresh-ஆக இருந்தது.

  ஐந்தில், frogetarian – நல்ல தாக்கம். அழுத்தம்.
  மேலும், அரை கிலோ டார்க் பிறவுன் ஜெல்லி, ஒரு எல்லோவ் பால் juice – order செய்ய தூண்டும் வகையில் நகையுடன் கூடிய கற்பனை.
  2600-இலும் எல்லோ பால், சிஸ்டர் பூசணி (பூசணிக்கா) – சேட்டைகள் உலகில் தொடரும் நம்பிக்கை எனக்கும் உண்டு. 🙂 🙂

 • 3. vizhiyan  |  November 1, 2012 at 7:27 pm

  அருமை 🙂

 • 4. தகிடுதத்தம் ரமணி  |  November 1, 2012 at 10:32 pm

  அருமையான கதைகள். சயின்ஸ் ஃபிக்ஸன் தற்போது மிக அவ்சியமான தேவையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

October 2012
M T W T F S S
« Sep   Nov »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: