சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் இரண்டு.

December 5, 2013 at 2:47 am 6 comments

Somali pirate on the coast of Hobyo

ஆர்வம் மேலிட தலைவன் இன்னொரு புத்தகத்தை எடுத்து பிரித்தான். “இது யாருப்பா” என்றான். “எஸ்.ராமகிருஷ்ணன்” என்றான் ஜெய். “உலக சினிமா பற்றி ஒரு புக் எழுதி இருக்காரே அவரா” என்று தலைவனே கேட்டான். ஜெய் அப்படியே ஷாக் ஆயிட்டான்.

“பாஸ் உங்களுக்கு எப்டி தெரியும் பாஸ்” என்றான் ஒரு பொடியாளாய் இருந்த இன்னொரு அடியாள்.

“மூணு நாலு வருஷம் முன்னாடி அவர நான் மீட் பண்ணிருக்கேன்பா” என்று ஆரம்பித்தான் பாஸ். பொறுமையில்லாமல் ஜெய் கேட்டான் “எஸ்ராவையா? நீங்களா? எங்கே மீட் பண்ணினீங்க சார்”

ஏன் இந்த அவசரம் என்பது போல தலைவன் ஜெய்யை உற்று பார்த்துவிட்டு தொடர்ந்தான் “உங்க ஊருல ஆனந்த விகடம்னு ஒரு மேகசின் வருதா”

“விகடம் இல்ல விகடன்” திருத்தினான் ஜெய். முகத்தில் சற்று பெருமிதம் காட்டி கொண்டான், ஏன் என்று அவனுக்கே தெரிய வில்லை.

“ஏதோ ஒண்ணு தம்பி. இப்படி குறுக்க குறுக்க பேசாதீங்க. எனக்கு மறந்து போவும். ஆங்.. ஆனந்த விகடன்ல தேசாந்திரின்னு ஒரு பத்தி எழுதுனாராம் இல்ல.”

“எங்க ஊருல பத்தின்னா ரெண்டே ரெண்டு தான் பேமசு. ஒண்ணு சைக்கிள் அகர்பத்தி இன்னோண்ணு எஸ்ரா பத்தி மேல சொல்லுங்க” என்றான் ஜெய்.

“பயம் விட்டு போச்சு.” என்று சற்று முறைத்து விட்டு விட்ட இடத்தில் தொடர்ந்தான் தலைவன்.

“அவரு தேசாந்திரி எழுதிட்டு இருந்தாரா அந்த அனுபவங்களுக்காக கால் நடையாவே இந்தியா முழுக்க சுத்த ஆரம்பிச்சிருக்காரு. கோவில்பட்டியில கடலை மிட்டாய்க்கு பாகு காய்ச்சறவன்ல ஆரம்பிச்சு சென்னை ட்ரெயின்ல பிளாஸ்டிக் முகமூடி விக்கிறவன், பம்பாய்ல வாட்ச் மிட்டாய் செய்யுறவன், காசியில பிச்சை எடுக்கிற தாத்தா, கல்கத்தாவுல கைவண்டி இழுக்குற வங்காளி, காஷ்மீர்ல குல்லா செய்றவன், கராச்சியில கபாப் போடுறவன் வரைக்கும் விழிம்பு நிலை மக்கள் கிட்ட நெருக்கமா பேசி தன் அனுபவங்களை உருக்கமா எழுதி அந்ததந்த ஊருல இருந்தே விகடனுக்கு த்பால்ல அனுப்பிருவாராம். அப்டியே விளிம்புநிலை மக்கள் கிட்ட பேசிக்கிட்டே பொடிநடையா நடந்தவர் சோமாலியா வரைக்கும் வந்துட்டார்னா பத்துக்கோயேன்” என்று நிறுத்தினான் தலைவன்”கோயேன்” என்று முடித்த இடத்தில் ஒரு அழுத்தம் இருந்தது. தலைவனின் கண்கள் ததும்புவதை பார்தததும் “சிறுத்தை அழுவது போல” என்று எஸ்ரா ஸ்டைலில் கவித்துவமான ஒரு வாசகம் ஜெய்கிருஷ்ணனின் மனதுக்குள் ஓடி மறைந்தது.

கொள்ளையர்களில் சிலரும் ரகசியமாக கண்ணீரை துடைத்து கொண்டு விம்முவதை ஜெய் கவனித்தான். எங்கும் லேசான சோகம் பரவுவதை உணர்ந்த ஜெய் கொள்ளையர்களின் சோகத்தை கலைக்க எண்ணியவன் போல “சரி சரி அவரு தேசாந்திரி மட்டும் எழுதல உங்கள மாதிரி திருடர்களை பற்றி கூட ஒரு நாவல் எழுதி இருக்கார்” என்றான்.

”சொல்லவே இல்ல” என்பது போல தலைவன் பார்த்தான்.

”நெடுங்குருதின்னு ஒரு நாவல். உங்களை மாதிரி கள்வர்களை பற்றிய கதை தான் அது. வேம்பலைன்னு ஒரு கிராமமே திருடர்கள் கிராமம் தான் கதையில தெரியுமா” என்றான்.

இப்போது தலைவனுக்கு பெருமையாக இருந்தது. ”பேசாம அவர கடத்திட்டு வந்து நம்மள பத்தி ஒரு நாவல் எழுத சொல்லலாமா” என்று ஒரு அடியாள் கேட்டான்.

“எதுக்கு தேசாந்திரி பார்ட் டூ எழுத சொன்னா அவரே ஆட்டோமேட்டிக்கா இன்னொரு வாட்டி இங்கே வந்திட போறாரு” என்றான் இன்னொருவன்.

தலைவன் முறைத்தான்.

அப்போது பக்கத்திலிருக்கும் கடற்கரையில் காவல் நிற்கும் ஒரு கொள்ளையன் பரபரப்புடன் ஓடி வந்தான்.

“என்னா மேட்டர்” என்றான் பாஸ்.

“பாஸ் இந்த பாட்டில பாருங்க இது கடல் தண்ணில மிதந்து வந்திச்சு. உள்ள ஒரு மெசேஜும் இருக்கு. மெசேஜ் உங்களுக்கு. பாட்டில் எனக்கு”

“மெசேஜ படி” என்றான் தலைவன்.

”நான் எப்டி பாஸ் படிக்கிறதுக்கு இது தமிழில எழுதி இருக்கு எனக்கு தான் தமிழ் தெரியாதே” என்றான் அவன்.

மெசேஜை பிடுங்கி இன்னொருவனிடம் கொடுத்து “படி” என்றான் தலைவன்.

அவன் எழுத்து கூட்டி சத்தமாக படித்தான் “கறிவிருந்துடன் ஒரு இலக்கிய சந்திப்பு கண்டிப்பாய் வரவும் இப்படிக்கு பவா.செல்லதுரை”

(தொடரும்)

 

Advertisements

Entry filed under: tamil advertising.

சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் ஒன்று. உங்க டூத் பேஸ்டுல உப்பு இருக்கா? : கார்ப்பரேட் சித்தன் சிந்தனைகள்!

6 Comments Add your own

  • 1. pandian  |  December 5, 2013 at 2:27 pm

    ஹஹஹ்ஹஹ்ஹ்…. சிவனேன்னு கப்பலை மறிச்சு திருடிக்கிட்டு இருந்தவனுங்களுக்கு, என்னங்க இது சோதனை… ! விட்டா புத்தக திருவிழாவுக்கு வந்து குத்துவிளக்கு ஏத்திட்டு போவானுங்க போல இருக்கே…

  • 2. ensanthosh  |  December 5, 2013 at 2:51 pm

    ஹா ஹா! இதுவும் நல்லா தன் இருக்கு. புத்தகத்திருவிழாவுக்கே அவுனுங்கள கூட்டிட்டு வந்திடுவோம். ஜெய் கிட்ட சொல்றேன்!

  • 3. n jagan  |  December 6, 2013 at 8:51 pm

    அருமை!வாழ்த்துகள்

  • 4. புகழேந்தி  |  December 13, 2013 at 2:16 pm

    ஸார்.. அந்த கடைசி வரி படிச்சு பயங்கரமா சிரிப்பு அடக்க மிடியள.. இருங்க மீதியும் முடிச்சிட்டு வந்திடறேன்.

  • 5. ranjani135  |  December 17, 2013 at 9:17 pm

    ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடுத்து யார் வரப்போகிறார்கள் என்று சொல்லும் அழகை ரொம்பவும் ரசிக்கிறேன், சந்தோஷ்!
    உங்களது இயல்பான நகைச்சுவை கலந்த நடை மனதை கவருகிறது, வாழ்த்துக்கள்!

  • 6. muralikannan  |  December 18, 2013 at 7:25 pm

    அட்டகாசம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 67,888 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: