உங்க டூத் பேஸ்டுல உப்பு இருக்கா? : கார்ப்பரேட் சித்தன் சிந்தனைகள்!

December 6, 2013 at 1:36 am 3 comments

Image

1

“அந்த கோர்ஸ் படிச்சா ஃப்யூச்சர் இல்ல”

“இல்லப்பா இந்த கோர்ஸுக்கு சரியான ஃப்யூச்சர் இருக்கு”

அலுவலகத்தின் இரு இன்டெர்ன்ஷிப் மானவர்கள் விவாதித்து கொண்டிருந்தார்கள்.

கார்ப்பரேட் சித்தன் கேட்டான் “ஏம்பா என்ன இன்னும் ஒரு ஐனூறு வருஷம் உயிர் வாழ்வீங்களா”

 

2

“தண்ணீரைக்கூட தனியார்மயமாக்கணும்” என்றார் அலுவலக நண்பரொருவர்.

“நாளைக்கு கக்கூசுக்கு கூட கடனட்டை எடுத்திட்டு போகணும் பரவால்லியா” என்றான் கார்ப்பரேட் சித்தன்.

 

3

“காலையிலையும் நைட்லேயும் பல்லு வெளக்கா ஆயிரம் காரணம் இருக்கு, கிருமிகள், கிருமிகள்… ” என்று பயமுறுத்தும் டூத்பேஸ்ட் விளம்பரங்களை பார்த்து மிரண்டு போன நண்பனிடம் கார்ப்பரேட் சித்தன் சொன்னான்

” இவனுங்க‌ சொல்றத கேட்டா, இது பல்லா இல்ல‌ பப்ளிக் டாய்லெட்டான்னு சந்தேகம் வந்திருது”

 

4

” உணவு கடையில எலி இருந்தா அஞ்சு லட்சம் அபராதமாம்.” என்று செய்தியை வாசித்தார் அலுவலக நண்பர் ” “உணவே இங்கே எலியா இருக்கிற நிலைமையை மாத்துங்கடா முதலில” என்றான் கார்ப்பரேட் சித்தன்.

5

“உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கான்னு கேட்டானுங்க. ஓகே. இப்போ எலுமிச்சை இருக்கான்னு கேக்கிறானுங்க.” என்றார் அலுவலக நண்பர்

“இது பல்லு விளக்குற பேஸ்டா இல்ல சரக்குக்கு தொட்டுக்குற சைடிஷ் ஊறுகாயா. “ என்றான் கார்ப்பரேட் சித்தன்.

6

”எங்க அப்பாவுக்கு சுகர் இருக்கு” என்றான் அலுவலக நண்பன்

“உங்க தாத்தாவுக்கு கரும்புத்தோட்டமே இருந்திச்சு. ஞாபகம் இருக்கா” என்றான் கார்ப்பரேட் சித்தன்

7

”லைஃப் முழுக்க இன்கம் வர மாதிரி ஒரு ஸ்கீம் இருக்கு” என்றாள் தொலைபேசி வங்கி பெண்

“யாரு உங்க பாங்க் ஓனருக்கா” என்று போனை வைத்தான் கார்ப்பரேட் சித்தன்

8

” i like modern  multiplex theaters only.” என்றான் அலுவலக நண்பன்

“அங்கே போயும் ’ஊதா கலர் ரிப்பன் யாரு உனக்கு அப்பன்’க்கு தானே விசிலடிக்கப்போற”  என்றான் கார்ப்பரேட் சித்தன்!

 

Advertisements

Entry filed under: tamil advertising.

சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் இரண்டு. இன்றைய கலை1: மரினா அப்ராமொவிக்

3 Comments Add your own

  • 1. எழுத்தாளர் புதின்  |  December 7, 2013 at 10:37 am

    ரசித்தோம் நண்பரே. ஒவ்வொன்றும் செம செம. முக்கியமாக…

    “”லைஃப் முழுக்க இன்கம் வர மாதிரி ஒரு ஸ்கீம் இருக்கு” என்றாள் தொலைபேசி வங்கி பெண்

    “யாரு உங்க பாங்க் ஓனருக்கா”
    என்று போனை வைத்தான் கார்ப்பரேட் சித்தன்”

    நேரம் கிடைக்கும் போது, என் தளத்திற்கும் வாருங்கள்.
    http://www.pimbam.com

  • 2. ensanthosh  |  December 7, 2013 at 12:50 pm

    புதின். உங்கள் தளத்தை பார்த்தேன் நிறைய எழுதி இருக்கிறீர்கள். சாவகாசமாக வாசிக்கிறேன். நன்றி!

  • 3. warcry  |  December 13, 2013 at 10:35 pm

    ” i like modern multiplex theaters only.” என்றான் அலுவலக நண்பன்
    “அங்கே போயும் ’ஊதா கலர் ரிப்பன் யாரு உனக்கு அப்பன்’க்கு தானே விசிலடிக்கப்போற” என்றான் கார்ப்பரேட் சித்தன்!
    superrrrrr

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 61,507 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: