சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் மூன்று.

December 9, 2013 at 8:19 pm 5 comments

Unknown

(முன்கதை சுருக்கம்: சோமாலியா கப்பல் கொள்ளையர்களிடம் ஏராளமான தமிழ் இலக்கிய புத்தகங்களுடன் மாட்டிக்கொள்கிறான் ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியம். என்ன நடந்தது தெளிவாக தெரிந்து கொள்ள முன் அத்தியாங்களை படிக்கவும். கண்டினியூட்டி முக்கியம் பாஸ்!)

 

அவன் எழுத்து கூட்டி சத்தமாக படித்தான் “கறிவிருந்துடன் ஒரு இலக்கிய சந்திப்பு கண்டிப்பாய் வரவும் இப்படிக்கு பவா.செல்லதுரை”

“யாருப்பா இது பவர். செல்லதுரை.பெரிய ஆளா இருப்பாரு போல‌” என்றான் தலைவன்

“அய்யோ அது பவர். இல்லங்க பவா. புள்ளி வராது” என்றான் ஜெயகிருஷனன். தலைவன் மெசேஜை திருப்பி திருப்பி பார்த்தான். ஜெய் மெஸேஜ் பேப்பரை வாங்கி மறுபடி படித்து விட்டு தலைவனை பார்த்து சொல்ல ஆரம்பித்தான்

” சார் நீங்க தமிழ்நாட்டு பக்கம் வந்தீங்கன்ன்னு வச்சுக்குங்க, அங்கேருந்து திருவண்ணாமலை வரைக்கும் போயிட்டு வரலாம்ணு போனீங்கண்ணா தப்பித்தவறி இலக்கியம்ணு ஒரு வார்த்தை சொல்லிடாதீங்க. அவ்ளவு தான் உங்கள அலேக்கா தூக்கிட்டு போய்டுவாரு இந்த பவா. செல்லதுரை”

“எத்தன பேர கடத்திருக்கோம். எங்க கிட்டேவா” என்றான் தலைவன்.

“அவ்வளவு டெரரா அவரு” என்றான் ஒரு கொள்ளையன்

“இல்ல பாஸ். அவருக்கு இலக்கிய அன்பர்கள்னா ஒரு பாசம். அவ்வளவுதான் அப்புறம் சும்மா விட மாட்டார். மட்டன் பிரியாணி,  சிக்கன் கொத்சு, கூடவே அவரு எழுதின கதையில ஒண்ண நரேட் பண்ணி கண்ணுல தண்ணி வர வச்சிடுவார். சிக்கனால வந்திச்சா இல்ல சிறுகதையால வந்திச்சா கண்ணுல தண்ணின்னு உங்களுக்கே தெரியாது. விருந்துக்கு அப்புறம் அப்டியே கொல்லைப்பக்கமா மாந்தோப்புல இருக்கிற கெஸ்ட் ஹவுஸ் போனீங்கன்னா உண்ட மயக்கத்துல உட்காந்திருக்கிற மிஷ்கின்ல இருந்து நீயா நானா ஆன்டனி வரைக்கும் நீங்க பாக்கலாம் பாஸ். ” என்றான் ஜெய்.

இவங்க எல்லாம் யாரு என்பதை போல பார்த்தான் தலைவன்.

” இலக்கிய ஏப்பம் விட்டுட்டே மாமரத்துக்கு கீழே நீங்க லேசா கண்ணசந்தா இன்னொரு மரத்துக்கு கீழே நா. முத்துகுமார் சத்தமா கவிதை பாடி நியூட்டனின் மூன்றாம் விதிப்படி உங்க தூக்கத்த கெடுத்திட்டு இருப்பார். அங்கேருந்து எஸ்கேப்பாயி இன்னொரு மரத்துல தலைய சாய்ச்சா பி.சி. ஸ்ரீ ராம் கேமரா போகஸ் பண்ணிட்டு இருப்பார். இப்படி எந்த மூலைக்கு போனாலும் வித விதமான ஆளுமைகளை பார்த்து நீங்களே விக்கித்து போய், சொந்த ஊரான‌ சோமாலியாவுக்கே போய் தூங்கிக்கலாம்ணு முடிவெடுப்பீங்க” என்று நிறுத்தினான் ஜெய்

“அப்போ பவா.செல்லத்துரை என்ன பண்ணிட்டு இருப்பார்” என்றான் ஒரு கொள்ளையன் ஆர்வமாக‌

“அவர் 19, டிஎம் சரோனிலிருந்து… கப்பல் கொள்ளையர்களுடன் ஒரு கார்த்திகை தீபம்  என்று தன் பிளாகில் ஒரு கட்டுரைய தட்டிட்டு இருப்பார் பாஸ்” என்ற போது தலைவன் குதூகலித்து “இவ்வளவு அன்பான ஒரு இலக்கிய வாதியா? அவர கண்டிப்பா நாங்க மீட் பண்ணனுமே” என்றான் தலைவன்.

“அன்புன்னா அன்பு அவ்வளவு அன்பு பாஸ். ஏழுமலை ஜமா மாதிரி எக்செலென்ட் கதைகள் எழுதினவர்.  இப்படி விருந்து வைக்கிறதுலயும் விழா எடுக்கிற‌துலையும் அவரு டைம் போய்க்கிட்டு இருக்கு. திருவண்ணாமலையில கிரிவலம் போற பவுர்ணமி இரவுக்கு அப்புறம், இவரும் நண்பர்களும் உருவாக்கின கலை இரவு தான் பேமசு தெரியுமா.” என்று நிறுத்தினான் ஜெய்.

“தமிழ் இலக்கியத்துல ஒரு காலத்துல சுந்தர ராமசாமி வீடு தான் கலை இலக்கிய வாதிகளுக்கு காசி ராமேஸ்வரம் மாதிரி. ஒரு தடவ போயிட்டு வரலேன்னா எழுத்தாளர்கள் ஆத்மாவுக்கு இலக்கிய சாந்தி கிடைக்காது. எப்போ போனாலும் சுராவே சோறுபோட்டு பஸ்ஸுக்கு படியும் கொடுத்து அனுப்புவாரு.  அவ்வளவு நல்ல மனுஷன். அதுக்கு அப்புறம் தைரியாமா ஒரு கதவ தட்டலாம்னா அது பவா. செல்லத்துரையோட கதவு தான். ஆனா கையில இலக்கிய ஸ்வைப்பிங் கார்டு இருக்கணும் பாஸ்”

“ஓகே எனக்கே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்குப்பா. உங்க ஊரு இலக்கிய வாதிக எல்லாம் இவ்வளவு நல்லவகளா இருக்காங்களே” என்றான் தலைவன்.

ஜெயகிருஷ்ணன் தான் ஒரு பணயக்கைதியாக இருப்பதையே சற்று மறந்து போயிருந்தான். கொள்ளையர்களில் ஒருவன் அந்த தூசி படிந்த டி.வியை ஆன் பண்ணினான்.

“பாஸ் பாஸ் எங்க ஊரு சேனல் எதாவது கிடைக்குமான்னு பாருங்க. என்னை பத்தி ஏதாவது நியூஸ் வந்திருக்காணு பாக்குறேன்.” என்றான் ஜெய்.

அந்த கொள்ளையன் மெல்ல ஒரு தமிழ் சானலை மாற்றினான்.
“சோமாலியா கொள்ளையர்கள் கடத்திய தமிழன் ஜெயகிருஷ்ணனின் கதி என்ன…? ஒரு விவாதம்.” என்று ஹோஸ்டிங் பண்ணும் ஆள் காற்றை காரச்சேவாக மென்ற படி பில்டுப் கொடுக்க, கருத்து சொல்ல காத்திருந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் தொன்டையை சற்று செருமி கொண்டார்.  முகத்தில் விழும் முடிக்கற்றைகளை கைகளால் கோதி விட்ட படி உற்சாகமாக பேச ஆரம்பித்தார்.

 

(தொடரும்)

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , .

இன்றைய கலை 2. தியோ ஜான்சன் உலக சினிமாவுக்கு நாங்க தான் அத்தாரிட்டி!

5 Comments Add your own

  • 1. தனிமரம்  |  December 10, 2013 at 1:16 am

    சுவாரசியம் கற்பனை நயம்!

  • 2. புகழேந்தி  |  December 13, 2013 at 2:24 pm

    தமிழக நிலவரம் தெரிந்தவர்கள் உங்கள் தொடரைச் சத்தம் போட்டு சிரிக்காமல் படிக்கவே முடியாது. இது உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

  • 3. ranjani135  |  December 17, 2013 at 9:25 pm

    சந்தோஷ்…! சிரித்து சிரித்து கண்களில் நீர் வந்துவிட்டது. //……சும்மா விட மாட்டார். மட்டன் பிரியாணி, சிக்கன் கொத்சு, கூடவே அவரு எழுதின கதையில ஒண்ண நரேட் பண்ணி கண்ணுல தண்ணி வர வச்சிடுவார். சிக்கனால வந்திச்சா இல்ல சிறுகதையால வந்திச்சா கண்ணுல தண்ணின்னு உங்களுக்கே தெரியாது //
    தாங்க முடியல! மிஷ்கின், ஸ்ரீராம், நா. முத்துக்குமார்…..!

  • 4. sksk82  |  January 1, 2014 at 7:15 pm

    சுவாரசியம்…சுவாரசியம்…சுவாரசியம் !!!

  • 5. ensanthosh  |  January 4, 2014 at 6:12 pm

    நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 61,507 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: