சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் நான்கு

December 13, 2013 at 1:50 am 12 comments

51045063_pirates2

(முன்கதை சுருக்கம்: சோமாலியா கப்பல் கொள்ளையர்களிடம் ஏராளமான தமிழ் இலக்கிய புத்தகங்களுடன் மாட்டிக்கொள்கிறான் ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியம். என்ன நடந்தது தெளிவாக தெரிந்து கொள்ள முன் அத்தியாங்களை படிக்கவும். கண்டினியூட்டி முக்கியம் பாஸ்!)

“சோமாலியா கொள்ளையர்கள் கடத்திய தமிழன் ஜெயகிருஷ்ணனின் கதி என்ன…? ஒரு விவாதம்.” என்று ஹோஸ்டிங் பண்ணும் ஆள் காற்றை காரச்சேவாக மென்ற படி பில்டுப் கொடுக்க, கருத்து சொல்ல காத்திருந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் தொண்டையை சற்று செருமி கொண்டார்.  முகத்தில் விழும் முடிக்கற்றைகளை கைகளால் கோதி விட்ட படி உற்சாகமாக பேச ஆரம்பித்தார்.

”இதப்பற்றி சொல்லணும்னா

அவ்வளவு கொடுமை
அவ்வளவு வன்மம்
அவ்வளவு புறக்கணிப்பு
அவ்வளவு கொடூரம்
அவ்வளவு கொடுங்கனவு
அவ்வளவு கைவிடல்”
என்று சொல்லிக்கொண்டே போனார்.

“யாரு மேன் இது” என்றான் தலைவன்.

“இது எங்க ஊரு பிரபல கவிஞர் மனுஷ்யபுத்திரன். சச்சின் டெண்டுல்கர் ரிட்டயர்டுலருந்து சன்முகபாண்டியன் ’சகாப்தம்’ வரைக்கும் ஒரு கருத்துன்னா, சன் டிவி முதல் வின் டிவி வரை இவர் கிட்ட தான் பைட்ஸ் கேக்கும் ” என்றான் ஜெய்.

“இப்போ இந்த கடத்தல் பற்றி என்ன தான் சொல்றாரு” என்றான் கொள்ளையன்.

“பொதுவா நல்லாதான் கருத்து சொல்லுவாரு. இன்னைக்கு என்னன்னு தெரியல கவிதை எழுதுன கையோட ஸ்டுடியோவுக்கு வந்திட்டாரு போல. அந்த ஹேங் ஓவர்லேயே பேசுற மாதிரி தெரியுது” என்று விட்டு ஜெய் டிவியை பார்த்தான்.

“இந்த சின்னஞ்சிறிய கடத்தலின்

சின்னஞ்சிறு விஷயங்களை பற்றி சொல்வதென்றால்.

ஒரு மனிதன்

இன்னொரு மனிதனை கடத்துவது

எவ்வளவு அபத்தமாக மாறி விட்டது

அது ஒரு பலவந்தம்

அது ஒரு குற்றம்

அது ஒரு தாக்குதல்

அது ஒரு அத்து மீறல்….”

இது வேலைக்காகாது என்று ஜெய்க்கு தெரிந்து விட்டத்து அழாத குறையாக சேனலை மாற்ற சொன்னான். என்ன நடக்கிறது என்று புரியாத அந்த சின்னஞ்சிறு கொள்ளையன் அடுத்த சேனலை மாற்றி விட்டு

“அட இங்கேயும் லைவ்ல அவர மாதிரியே ஒருத்தர் இருக்கிறாரு” என்றான். எல்லா கொள்ளையர்களும் ஆச்சரியமாக டி.வியை பார்த்தனர்.

“அவரு மாதிரி இல்ல அவரே தான்” என்ற ஜெயகிருஷாணன் டிவியை பார்த்தான். அங்கே தமிழிசை சவுந்தர ராஜனிடம் தலைமுடி கண்ணை மறைக்க விவாதம் செய்து கோண்டிருந்தார். ஜெய் உடைந்த ரிமோட்டை வாங்கி இன்னொரு சேனலுக்கு மாற்றினான்.

அந்த சேனலில் நாலு கட்டத்தில் ஒரு கட்டத்துக்குள் உட்காந்தபடி இன்னொரு கட்டத்துக்குள்ளிருக்கும் ஞானதூசிகனை கைககளை காற்றில் பரோட்டா வீசிய படி பொளந்து கட்டி கொண்டிருந்தார்.

இன்னொரு சேனலை திருப்பினால் “ரஜினிக்கு அப்புறமா ரசிகர்கள் எதிர்பார்க்கிறது உங்கள தான். அரசியலுக்கு வருவீங்களா மாட்டீங்களா” என்று கிடுக்கிபிடி கேள்வியைப்போடும் காம்பியரிடம் டிமிக்கி கொடுத்து பேசிக்கொண்டிருந்தார்.

“எப்படி மேன் ஒரே ஆள் ஒரே நேரத்துல வேற வேற டிவியில லைவ்ல வரமுடியும்” என்று துப்பாக்கியின் நுனியால் மண்டையை சொறிந்தான் தலைவன்.

இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்பதைபோல ஜெய் அண்ணாந்து டிவியை பார்த்தான். தன் பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்து அதில் முகநூலை ஆன் பண்ணி, கொள்ளையனின் முகத்துக்கு நேராக காட்டி விட்டு சொன்னான்.

”இங்கே பேசிகிட்டு இருக்கும்போதே ஃபேஸ்புக்ல புதுசா ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட் போட்டிருக்கார் பாருங்க”  தலைவன் தலையை குனிந்து மொபைலை பார்த்தான். கைகளில் காப்பி கோப்பையுடன் ஒரு கறுப்பு வெள்ளை ப்ரொஃபைல் பிக்சர் கண்ணில் பட்டது.

”வினாயக முருகன்ல ஆரம்பிச்சு நெல்சன் சேவியர் வரைக்கும் அதுக்குள்ள ஐனூறு பேரு லைக் வேற போட்டிருக்காங்க” என்று தலைவன் பிரமித்தான்.

“அந்த கேப்புல நாலஞ்சு அடிப்படைவாதிகள் வந்து இந்த ஸ்டேட்டஸ் அப்டேட்டுக்கு சம்பந்தமில்லாம அவர கமெண்டுல திட்டுறாங்க கவனிச்சீங்களா பாஸ். எல்லா மதவாதிகளும் போடுற பெளலிங்கையும்  அவரு தனியாளா தடுத்தாடுறதால இன்னைய தேதிக்கு எங்களுக்கு கிடைச்ச ’செக்குலார் சிங்கம்’ணு என்னை மாதிரி ஆட்கள் அவர கொண்டாடிட்டு இருக்கோம் ” என்ற ஜெய் மேலும்,

“இது மட்டுமில்ல இப்போ உயிர்மை ஆப்பிஸ் போய் பாத்தீங்கன்னா புக்ஃபெயர் ஃபீவர்ல புதுசா வர புத்தகங்களின் அட்டைபடத்துக்கு ஆன்லைன்ல இமேஜ் தேடிட்டே, ஆன் த ஸ்பாட்டுல நாலு புக்குக்கு பில்ட் அப் கொடுத்து பின்னட்டை ’பிளர்பு’ம் எழுதிட்டு இருப்பாரு. அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிறதுல தான் இவரு பாபா ரஜினி, ஆனா ஆல் த சேனலுல அட்டர் டைம்ல அவதாரம் எடுக்கிறதுல இவரு ஒரு கமல் பாஸ்”  என்று நிறுத்தினான் ஜெய்.

ஆர்வமான தலைவன் ஜெயகிருணனிடம் கேட்டான் “இவரு என்ன மாதிரி கவிதைகள் எல்லாம் எழுதுவாருப்பா”

“பாஸ் நீராலானதுன்னு ஒரு தொகுப்பு. அத உன்னோடிருத்தல் தன்னோடிருத்தல் மற்றும் பிறரோடு இருத்தல்னு பிரிச்சு பிரியத்த பின்னி எடுத்திருப்பாரு”

“பிரியமா”

“காதல்கிறது அவருக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை அதான் பிரியம். மேல சொல்லுறேன் கேளுங்க. அந்த ஒரு தொகுப்பே போதும் பாஸ். அத இப்ப திறந்து நான் படிக்க ஆரம்பிச்சாலும் நீங்க துப்பாக்கியால சுட்டா கூட ”எளிய பிரியத்தின் கண்ணீர் முதலில் ஒரு மணல் துகளாகிறது’’ன்னு சொல்லிக்கிட்டே இந்த சோமாலிய பாலைவனத்துல செத்து போகவும் தயாரா இருக்கேன்” முதன் முதலாக ஜெயகிருஷ்ணனின் கண்கள் நீராலானது.

”அந்த அளவுக்கு உன் மனச டச் பண்னிடிச்சா” என்று தலைவன் தன் நெஞ்சோடு ஜெய்யை அணைத்து கொண்டான்.

”நான் அதுக்காக அழல பாஸ். ஆனந்த விகடன் சொல்வனம் பக்கங்களில் கூட

“ஒரு எறும்பை நசுக்குவது போல

ஒரு காலிபிளாஸ்டிக் கோப்பையை விசுவது போல

ஒரு பழைய செருப்பை விட்டெறிவது போல

ஒரு குண்டூசியை நழுவவிடுவது போல

ஒரு காலண்டர் பேப்பரை கிழிப்பது போல

ஒரு காலணா துட்டை தவற விடுவது போல

அவ்வள்வு எளிதில்

தொலைக்க முடியாதது

உனதிந்த ப்ரியம்”

என்று ஆளாளுக்கு பட்டியல் போடுற மாரி கவிதை எழுதி மனுஷ்யபுத்திரனாகலாம்னு பாக்குறாங்க. அத தான் அவரோட தீவிர ரசிகனா என்னால தாங்க முடியல. அத நினச்சு தான் இவ்வளவு கண்ணீர். இவ்வளவு துக்கம். அடுத்த புக்ஃபெயரிலாவது உயிர்மை ஸ்டாலில அவர சந்திச்சா இத சொல்லணும்.” என்று முடித்தான் ஜெய்.

“சே என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்” என்றான் தலைவன்.

“சோமாலியா வரைக்கும் தெரிஞ்சு போச்சா.” என்று எகிறினான் ஜெய்.

தலைவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியனை பார்த்து சொன்னான். “நான் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆயிட்டேன் மேன். இப்பவே நாம தமிழ் நாட்டுக்கு கிளம்புறோம். அங்கே ஒவ்வொரு இலக்கியவாதிகளையும் சந்திக்கிறோம் எடுறா கப்பல” என்றான்.

“பாஸ் நாம இங்கேருந்து நேரா தமிழ் நாட்டுக்கு போக முடியாது ஏன்னா இது அரபிக்கடல். முதல்ல கேரளா போய் இறங்குறோம் அப்புறம் அங்கருந்து தரைவழியா தமிழ்நாட்டுக்கு போறோம்” என்றான் ஒரு அடியாள்.

கப்பல் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருந்தது. நடுவழியில் ஒரு கட்டு மரத்தில் ஒற்றை ஆளாக ஒருவர் அமானுஷ்யமாக எதிரில் வருவதை பார்த்தனர். நெருங்கி செல்லும் போது ஜெய் அடையாளம் கண்டு கொண்டான்.

“அய்யோ பாஸ் இவரு பேரு கோணங்கி.” என்று கத்தினான்.

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , .

உலக சினிமாவுக்கு நாங்க தான் அத்தாரிட்டி! சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் ஐந்து

12 Comments Add your own

 • 1. pandian  |  December 13, 2013 at 12:21 pm

  அத்தனை பகடி
  அத்தனை நக்கல்
  அத்தனை நையாண்டி
  அத்தனை எகத்தாளம்
  அத்தனை கேலி
  அத்தனை கிண்டல்…

  மனுஷ்யபுத்திரன் ரசிகர்கள்னா உங்களுக்கு அத்தனை இளக்காரமா போச்சா…

 • 2. ensanthosh  |  December 13, 2013 at 12:27 pm

  நானும் ஒரு மனுஷ்யபுத்திரன் ரசிகன் தான்!

 • 3. sreenath  |  December 13, 2013 at 2:03 pm

  Really nice.
  Lovely Santhosh.!

 • 4. ensanthosh  |  December 13, 2013 at 2:12 pm

  thank you sreenath!

 • 5. புகழேந்தி  |  December 13, 2013 at 2:39 pm

  அருமை. மனுஷ்யபுத்திரன் அருமையோ அருமை. நல்ல பகடி, ரொம்பவும் நன்றி மிக அதிகமாகச்
  சிரித்தேன். தனித்தனியே இடம் சொல்லிப் பாராட்ட முடியாத அளவிற்கு அவ்வளவு இடமும் அருமை. மிகவும் ரசித்தேன்.. ..

 • 6. ensanthosh  |  December 13, 2013 at 3:44 pm

  நன்றி புகழேந்தி! 🙂

 • 7. சரண்யா சச்சிதானந்தம்  |  December 13, 2013 at 8:06 pm

  Ha..ha.. பின்னிப் பெடலெடுத்து இருக்கீங்க சந்தோஷ்.. பேருக்கேத்த மாதிரி உண்மையாவே சந்தோஷப்படுத்தியிருக்கீங்க…
  மிகச்சிறந்த புத்தக / எழுத்தாள அறிமுகங்கள்..
  என்னைப்போல் எழுத்துலகில் புதிதாகப் பிரவேசிப்பவர்களுக்கு ரொம்ப நல்ல Guiding point..
  நிறையவே ரசிச்சேன்…
  வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய எழுதுங்க..!!

  நன்றி : மனுஷ்ய புத்திரன் (Without you i would not be knowing lot of good things)

  Cheers all (y)

 • 8. ensanthosh  |  December 13, 2013 at 8:21 pm

  நன்றி சரண்யா

 • 9. Ramya  |  December 13, 2013 at 10:00 pm

  மிகவும் அருமை… மீதி எப்ப சார். எழுதுவீங்க?

 • 10. muralikannan  |  December 18, 2013 at 7:31 pm

  பின்னி பெடல் எடுத்துட்டீங்க

 • 11. sksk82  |  January 2, 2014 at 4:36 pm

  செம்ம சுவாரசியம் …..செம்ம ……நக்கல்….

 • 12. ensanthosh  |  January 4, 2014 at 6:12 pm

  நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: