முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை!

December 31, 2013 at 1:57 am 4 comments

இன்று சற்று தீவிரமாக வாசிக்கும் உரையாடும் நாம் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் ஒரு வார்த்தை ”நவீன மனம்”. நவீன மனம் எதையும் சந்தேகம் கொள்ளும், அது எப்போதும் தர்க்கம் என்னும் இரும்பு ஸ்கேலால் எல்லாவற்றையும் கறாராக அளக்கும், அது ஒற்றைப்படையான உண்மை என்று ஒன்று இருப்பதையே ஏற்றுக்கொள்ளாது. எல்லாவற்றையும் விமர்சனத்துக்கு உட்படுத்தும், இது அறிவியற் பூர்வமானதா என்று கேள்வி கேக்கும்… நீங்கள் நவீன மனம் படைத்தவர் என்று நம்பி கொண்டிருந்தால் இன்னும் இந்த வரிசையில் இட்டு நிரப்பிக்கொள்ள உங்களிடம் ஒரு நூறு விஷயங்கள் இருக்கும்.

எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக மட்டுமே அணுகுவேன் என்று அடம் பிடிக்கும் உங்களிடம் இப்போது ஒரு கேள்வி. நீங்கள் காதலித்திருப்பீர்கள், அல்லது காதலித்து கொண்டிருப்பீர்கள். இந்த இடத்தில் நான் சொல்கிறேன் உங்கள் காதலரின் உடலுக்காக அதாவது அவரிடம் பாலுறவு கொள்வதற்காக அதாவது இனப்பெருக்க உறுப்புகளின் வழியாக உங்கள் சந்ததிகளை பெருக்கிக்கொள்வதற்காக அதாவது இந்த மனித இனம் தழைத்திருக்க இனப்பெருக்க மறு உற்பத்திக்காக உங்கள் சுரப்பிகள் போடும் வேதியல் நாடகம் மட்டும் தான் காதல் என்பது. இப்படித்தான் அறிவியல் சொல்கிறது. இதை ஒத்துக்கொள்கிறீர்களா? நான் ஒத்துக்கொள்கிறேன் மேலே சொன்னவை சந்தேகமற்ற அறிவியல் உண்மை தான். ஆனால் ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது இப்படி தர்க்கப்பூர்வமாக, அறிவியல் பூர்வமாக எல்லாவற்றையும் அறிந்து கொண்ட பின்னும் நாளையோ நாளை மறுநாளோ உங்கள் காதலரை சந்திக்கும் போது ஏதோ ஒன்று மெல்ல நுரை ததும்பி உங்களில் நிறையும். அது என்ன?

கண்டிப்பாக அது நாம் மேலே சொன்ன அறிவோ, தர்க்கமோ இல்லை. அது உணர்வு. இப்போது இப்படி யோசிப்போம். நாம் முந்திய பாராவில் பார்த்த அறிவா இல்லை இப்போது சொன்ன உணர்வா எது உங்களுக்கு உண்மையில் மகிழ்வளிக்ககூடியது. சந்தேகமே இல்லை உணர்வில் இருப்பது தான் இல்லையா.

இனி நாம் செய்யப்போவது என்ன அறிதலின் சுமை கொண்டு தலை கனப்பதையா இல்லை உணர்தலின் சுகம் கொண்டு வாழ்தலை இனிய பயணமாக மாற்றுவதையா.

தர்க்கம் என்னும் வளையாத இரும்பை விட்டு இப்படி உணர்தல் என்னும் நெகிழும் மூங்கிலாக வாழ்வை அணுக நான் கற்றுக்கொண்டிருப்பது நண்பர் செந்தமிழனிடம்.

ம.செந்தமிழன் இயக்குனர்,எழுத்தாளர்,ஆய்வாளர்,என்பதை தாண்டி அவர் ஒரு இயற்கையியல் ஆர்வலர். விவசாயி. இயற்கையியல் என்றால் வெறும் இயற்கை சார்ந்த அறிவியல் அறிவு மட்டுமே கொண்டு அதை புரிந்து கொள்ள முடியாது, இந்த இயற்கையை இயக்கும் பேராற்றலின் பேரன்பை புரிந்து கொள்வதும், மனிதன் மட்டுமே இயற்கையின் மய்யம் இல்லை என்கிற பேருண்மையை உணர்ந்து கொள்வதும் கூட.

அறிவியலின் பெயரால் வேட்டையாடப்பட்டு கொண்டிருக்கும் நமக்கு உணர்தலின் தேவையை பற்றி மிக மிக மென்மையாக, அமைதியாக, அறிவு சுமைகளாய் கனம் கொள்ளாத தரவுகளுடன், இயற்கையின் பேராற்றல் வழங்கிய பேரன்புடனும் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார் செந்தமிழன். ”முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை!”

muthal mazhai

இந்த உணர்தலை மிக அழகாக இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொள்ளுகிறார். ஒரு நீண்ட இசைக்கோர்வையை தனிமையில் அமைதியாக கேட்பது போல, ஒரு ஆழமான தியானத்தில் அமிழ்வது போல, மனம் பஞ்சாக உதிர்ந்து காற்றில் மெல்ல மிதந்து செல்வது போல, கடவுளின் கைகளையே பிடித்து கொண்டு ஒரு நதிக்கரை ஓரம் நீள் நடை செல்வது போல, இருக்கிறது இந்த புத்தகம் அளிக்கும் அனுபவம். நீங்களும் ஒரு தடவை அனுபவித்து பாருங்கள். பழக்க தோஷத்தில் உங்கள் இரும்பு தர்க்கத்தை எடுத்து இந்த சொற்களை உரசிப்பார்க்க ஆரம்பித்தால் மெழுகாக உங்கள் இரும்பு உருகுவதை உணர்வீர்கள். பிறகு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களை நினைத்து ஒரு சிறு புன்னகை மட்டுமே!

 

முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை!

இயற்கையியல் கட்டுரைகள்

ம. செந்தமிழன்

செம்மை வெளியீட்டகம்.

 

 

 

 

 

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , .

சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும். : அத்தியாயம் ஐந்து இலக்கியப் ‘பொங்கல்’!

4 Comments Add your own

 • 1. guru udayakuar  |  December 31, 2013 at 12:02 pm

  please give the link to buy that book

 • 2. ensanthosh  |  December 31, 2013 at 12:45 pm

  நண்பரே புத்தகம் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளிவரும். பத்து நாள் பொறுத்துக்கொள்க 🙂

 • 3. ensanthosh  |  January 4, 2014 at 6:11 pm

  book will come soon!

 • 4. ranjani135  |  January 8, 2014 at 10:04 pm

  //அறிவியல் பூர்வமாக எல்லாவற்றையும் அறிந்து கொண்ட பின்னும் நாளையோ நாளை மறுநாளோ உங்கள் காதலரை சந்திக்கும் போது ஏதோ ஒன்று மெல்ல நுரை ததும்பி உங்களில் நிறையும். அது என்ன//
  மிக மிக மென்மையாக சொல்லிவிட்டீர்கள், சந்தோஷ்!
  அறிவு பூர்வமாக சிந்திப்பவர்கள் ஆண்கள், உணர்விற்கு அடிமை பெண்கள் என்பதை உங்களின் இந்த வரிகள் படித்தபின் மாற்றிக் கொள்ள வேண்டும் போல இருக்கிறதே!

  //தர்க்கம் என்னும் வளையாத இரும்பை விட்டு இப்படி உணர்தல் என்னும் நெகிழும் மூங்கிலாக வாழ்வை அணுக நான் கற்றுக்கொண்டிருப்பது நண்பர் செந்தமிழனிடம்.//
  உங்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்! அருமை, அருமை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

December 2013
M T W T F S S
« Nov   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: