இலக்கியப் ‘பொங்கல்’!

January 8, 2014 at 7:47 pm 9 comments

PONGAL-02

 

இலக்கியத்தையும், இலக்கிய வாதிகளையும் கிண்டல் பண்ணுறது இப்போ ஃபேஷனா போச்சு. அது ரொம்ப ஈசியும் கூட. மூணு வரி முகநூல் ஸ்டேட்டஸுக்கே முக்க வேண்டியிருக்கு ஆயிரம் பக்கத்துக்கு மேல எழுதுறது அசால்ட்டான விஷயம் இல்லை. இலக்கியம்னாலே அது ஏதோ முப்பது பேரு எழுதி இருபது பேரு படிக்கிறதுன்கிற நிலமை ஒரு காலத்தில் இருந்தது. இன்னைக்கு அது சில ஆயிரம் பேர் படிக்கிறாங்கன்னா அதுக்கு நம் இலக்கிய வாதிகள் சிந்திய ரத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல.

சில நூறு பேரு படிக்கிற சிறுபத்திரிகைல தான் எழுதுவேன்னு அடம் பிடிக்காம ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளிலும் எழுதி வெறும் பொழுதுபோக்கு புத்தகங்களை மட்டுமே படிச்சிட்டிருந்த பயபுள்ளைகளை கொஞ்சம் தீவிரமாவும் வாசிக்க வச்சது எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சாருன்னு நீளும் பட்டியலிலுள்ள எழுத்தாளர்கள் தான்.

இன்னைக்கு விக்கிபீடியாவும், இணையமும் இருக்கு. யாரு வேணும்னாலும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள்ணு அடிச்சா நாலு எழுத்தாளர் பேர அதுவே காட்டும். ஆனா இதெல்லாம் இல்லாத காலத்திலேயே போர்ஹே பற்றியும், மார்கோஸ் பற்றியும் நமக்கு நாலு நல்ல வார்த்த சொன்னது நம்ம இலக்கியவாதிக தான்.

நேற்று பெய்த முகநூல் மழையில் முளைத்த ஃபேக் ஐடி காளான்களெல்லாம் இலக்கியவாதிகளை இளக்காரம் பண்ணி திரிவதை பார்த்தால் “வயலுக்கு வந்தாயா” என்கிற கட்டப்பொம்மன் வசனத்தை தான் வாய் முணுமுணுக்குது.

கனமாக ஒரு புத்தகம் எழுதினால், தலைக்கு வச்சு தூங்கவா இல்ல தலையில போட்டு கொல்லவா என்று தறுமாறா ஸ்டேட்டஸ் போட்டு, கமென்ட் எவ்வளவு லைக் எவ்வளவுன்னு கணக்கு பாத்திட்டு கம்ப்யூட்டர் முன்னாடி தேவுடு காக்கிறார்கள்.

உட்காந்து வாசிக்கிறதுக்கே பொறுமை கிடையாது அப்புறம் உருப்படியா எதாவது எழுத முடியுமான்னா. அதுவும் முடியாது, ஆனா உசுரக்கொடுத்து ஒருத்தன் ஓயாமல் எழுதிக்கொண்டிருப்பான், தமிழனின் வாசிப்பு பழக்கத்த ஒரு படி மேல ஏத்துறதுக்கு தன் உடல் பொருள் ஆவியை கொடுத்து ஒருத்தன் உரையாடிக்கொண்டிருப்பான் அவனையும் அவன் எழுத்தையும் மதிக்காம இவர்கள் பாட்டிற்கு குதர்க்கமா பேசி கும்மியடிச்சிட்டு இருப்பாங்க.

கேரளாவிலும் எனக்கு சில நண்பர்கள் உண்டு. அவர்களுக்கும் இலக்கிய அறிமுகம் உண்டு. ஆனால் அவர்கள் எம்.டி முதல் இன்று எழுதிக்கொண்டிருக்கும் சந்தோஷ் எச்சிக்கானம் வரை இலக்கிய வாதிகளிடம் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டிருக்கிறார்கள். முரண்படுகள் இருக்கலாம், விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் அதையும் தங்கள் வாசக அன்பிலிருந்தே விமர்சிக்கிறார்கள். நம்மவர்களை போல நாலு லைக்குக்காக தங்களுக்கு மொழியின் புட்டிப்பால் ஊட்டிய பேராசான்களையே எட்டி உதைக்கும் நிலைக்கு இறங்கிப்போவதில்லை.

நாப்பது ஐம்பது வருடப்போராட்டங்களுக்கு பிறகு இன்று தான் சில ஆயிரம் பேராவது சீரியசாக படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதையும் எள்ளி நகையாடி கொள்ளி வைத்து விடாதீர்கள் நண்பர்களே. இலக்கியமும், வாதிகளும் விமர்சனத்துக்கு அப்பார் பட்ட்வர்கள் அல்ல ஆனால் அதை விரிவாக எழுதி நிறுவுங்கள். அலுவலக வேலைகளுக்கு இடையில் கிடைக்கும் ஓசி இன்டெர்நெட் கனெகஷனில் ஈசியாக நாலு வரி எழுதி விட்டு ஓடாதீர்கள்.

இன்றைக்கும் நானூறு பிரதிகளுக்கு மேலே எந்த நல்ல புக்கும் விக்கிறதில்லை என்று எழுத்தாளனையே கதறடிக்க வைக்கும் சமூகத்தில் தான் நாமிருக்கிறோம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். சேதன் பகத் போன்றவர்கள் அடுத்த நாவலுக்கு அசால்ட்டாக சில கோடிகளை அட்வான்சாக வாங்க நமது எழுத்தாளர்களை இன்னும் ராயல்டியை நம்பி ஒரு சிங்கிள்டீ கூட வாங்கமுடியாத சோகத்தில் தான் நாம் வைத்திருக்கிறோம் என்கிற நிதர்சனத்தை உணருங்கள்.

இன்றைக்கு தான் நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறாது. வாராவாரம் வலைப்பூவில் ;பேருந்து சீட்’ கிறுக்கல்கள் போல எதையாவது எழுதிக்கொண்டு, வாழ்க்கையே எழுத்துக்காக அர்பணித்தவர்களின் தியாகத்தின் மீது திருவிளையாடல்கள் நடத்தாதீர்கள் நண்பர்களே.

நம்மை மொழி என்னும் ஏர் கொண்டு உழுது பக்குவப்படுத்தும் உழவர்கள் நம் எழுத்தாளர்கள். அவர்களை கொண்டாடுவோம், அவர்களின் எழுத்துகளை வாங்கி படிப்போம். அவர்களின் தேடலுக்கும், உழைப்புக்கும் மரியாதை செய்வோம் என்று வரும் பொங்கல் நன்னாளில் உறுதி ஏற்போம்.!

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , , , .

முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை! வெங்கலம்

9 Comments Add your own

 • 1. ranjani135  |  January 8, 2014 at 10:08 pm

  இன்றைக்கு மிகவும் தேவையான உறுதிமொழி இது! நானும் இந்த உறுதி மொழியை எடுத்துக் கொள்ளுகிறேன்.

 • 2. Pandian  |  January 9, 2014 at 5:20 am

  நான் இதை மீள்பதிப்பு செய்கிறேன்.

 • 3. Pandian  |  January 9, 2014 at 5:23 am

  Reblogged this on கடைசி பெஞ்ச் and commented:
  எதையும் பேசுவது சுதந்திரம் என்று நினைக்கும் சில தமிழிணைய மக்களின் கவனத்திற்கு.

 • 4. Krishnamuthysarma Venkatasubramanian  |  January 9, 2014 at 8:38 am

  உண்மை. எழுதிப் பாருங்கள். எழுதுகிறவர்களை ஏகடியம் பேசாதீர்கள். பொங்கல்வரை ஏன்? நன்றை இன்றே செய்யலாமே.

 • 5. rajeshkumar  |  January 9, 2014 at 11:35 am

  ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.எழுத்தாளர்களை / எழுத்துக்களை மட்டுமே ஸ்வாசிச்சு வாழ்ந்துட்டு இருக்கிறவங்களை நேசிக்கிரத்தை விட…நான் அவனை விட நல்லா எழுதுவேன் அப்படின்னு இன்னைக்கு நினைக்க ஆரம்பிச்சுடுறாங்க எல்லாரும் !

  நானே பெரிய எலக்கியவாதி – அப்படின்னு தமிழ்நாட்டுல இருக்கிற எழுத படிக்க தெரிஞ்சவங்க எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டதுனால வந்த விளைவுன்னு 🙂 நினைக்கிறேன் !

  அது மட்டுமில்லாம “தான் ஒரு Intelectual” அப்படின்னு எல்லாருக்கும் காட்டனும்ங்கிற வெறியே இங்க பெரும்பாலவங்க கிட்ட பரவலா இருக்கிறதா பாக்க முடியுது !

  கருத்து வேறுபாடுகளை பொறுமையா விவாதிக்காம, இடது கையால் அவங்கள ஒதுக்கி விட்டுட்டு, அசிங்கமா பேசிட்டு போறது மட்டுமில்ல்லாம, அதிக விளம்பரம் செய்யப்படும் தர குறைவான புத்தகங்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்க ஆரம்பிச்சுருக்காங்க.

  எழுத்துக்களையும் எழுத்தாளனையும் மதிக்க தெரியாத ஒரு சமூகமாதான் இன்னைக்கு நாம வளந்துட்டு இருக்கோம் அப்படின்னு எனக்கு தோணுது !

 • 6. மஞ்சூர் ராசா  |  January 9, 2014 at 11:49 am

  உண்மையிலெயே மிகவும் ஆத்மார்த்தமான பதிவு. நானும் மீள்பதிவு செய்கிறேன்.

 • 7. mahalakshmivijayan  |  January 9, 2014 at 12:50 pm

  நல்லா நறுக்குனு கொட்டு வைத்தது போல் இருக்கிறது பதிவு! வாழ்த்துக்கள்!

 • 8. guru udayakuar  |  January 9, 2014 at 12:55 pm

  நிறைய நாட்களாக என்னை உறுத்தி கொண்டிருந்த விஷயம் ,வாழ்த்துகள்

 • 9. வெளங்காதவன்  |  January 9, 2014 at 2:19 pm

  Well said.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

January 2014
M T W T F S S
« Dec   Apr »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: