வெங்கலம்

January 9, 2014 at 3:09 pm Leave a comment

Print

 

ரதீஷ் மாதவனின் வெங்கலம் ஒரு சமூக திரில்லர் நாவல். வெங்கலம் என்பது வெறும் உலோகமல்ல அது கட‌ந்து போன நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஒரு உருவகம் கூட என்பதை ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

நாவலின் மைய்யப்பாத்திரமான சசிதரன் ஆசிரியரே என்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது. இந்நாவல் குமரி மாவட்டத்தின் கடந்து போன வரலாற்றின் ஒரு பகுதியை ஒரு திரில்லர் வடிவில் நுட்பமாகப்பேசுகிறது. திருவாங்கூர் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்த தெங்கு வீட்டில் பத்மநாபன் என்கிற தன் தாய்வழித்தாத்தாவின் பழைய நிலவறைகளில் அவர் சேகரித்து வைத்திருந்த வெங்கல பாத்திரங்களை தேட‌தொடங்கும் சசிதரனின் சொல் வழியாக வளருகிறது நாவல்.

பழமையின் களிம்பு வீச்சமடிக்கும் அந்த வெங்கலப்பாத்திரங்களின் மடிப்புகள் வழியாக எழுந்து வரும் கதைமாந்தர்கள் அவர்களின் கதைகள் என்று விரிகிறது சசிதரனின் தேடல். வருடம் தோறும் ஓணத்திருநாளின் போது அந்த பாத்திரங்களை கழுவிக்கமழ்த்தும் நாரயணி அம்மச்சியின் ஞாபகங்களில் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் காலத்தின் படிவுகள் அவளின் நடுங்கும் பேச்சின் வழியாக உதிர்கிறது.

கரிய நிலவறைகளில் வெங்கலத்தை தேட உதவும் அம்மச்சியின் பேத்தி அம்பிளிக்கும் சசிதரனுக்கும் இடையில் உருவாகும் காதலும் காமமும் வெங்கலத்தின் தாமிர மணம் கொண்டது. நாவலின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் இதுவும் ஒன்று.

கட‌ந்து போன சமூகத்திற்கும் நடப்பு அரசியலுக்கும் இடையில் அல்லாடும் சோமன் குட்டி நாவலின் மற்றொரு முக்கியமான கதாபாத்திரம். அவனுடைய கிறுக்குத்தனங்கள் சசியின் வெங்கலத்தேடலை வேறொரு தளத்திற்கு நகர்த்தி விடுகிறது. வெங்கலப் பாத்திரங்கள் வழியாக சமூக அரசியலையும் நுட்பமாக பேசுகிறார் ஆசிரியர்.

நாவலின் பிற்பகுதியில் வரும் தொலைந்து போன வெங்கல கிண்டி ஒன்று கதையை நகர்த்துகிறது. நகர்த்துவது என்ன விரட்டுகிறது என்றே சொல்லலாம். அந்த வெங்கல கிண்டியின் வாயில் எழுதப்பாட்டிருக்கும் ஒரு சொல் அரசாங்க ரகசியச்சொல் என்றும், அதன் வழியாக அவிழப்போகும் முடிச்சுகள் முக்கியமானவை என்றும் சசிதரன் உணரும் போது நாவல் திரில்லர் வடிவத்தின் முழுமையை எட்டுகிறது.

இவ்வளவு விறுவிறுப்பாக வட்டார திரில்லர் நாவல் என்பது நான் வாசிக்காதது. த்ரில்லர் என்கிற பெயரில் சமூக மாற்றத்தையும், அரசியலையும், சுவராஸ்யமாக புனைந்துள்ளார் ரதீஷ் மாதவன்.

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , .

இலக்கியப் ‘பொங்கல்’! பயமே வணக்கம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 61,507 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

January 2014
M T W T F S S
« Dec   Apr »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: