தேடிச்சோறு.

January 14, 2014 at 7:01 pm Leave a comment

ico130205cvr copy

”வீக் எண்ட் ஆப்பிஸ் வர சொன்னாலே கடுப்பா இருக்குது மச்சி. மண்டேயிலருந்து ஃப்ரைடே வரைக்கும் முதுகெலும்பு தேய உழைக்கிறோம். …த்தா இந்த சனியும் ஞாயிறும் மட்டும் தான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கலாணு பாத்தா அர்ஜெண்ட் ப்ராஜெக்ட், டெட்லைன் மண்டே மார்னிங்ன்னு நம்ம மண்டைய காய வைக்கிறானுங்க” பாலாஜியின் முகம் கம்ப்யூட்டரின் பின்பக்கம் போலவே சூடாக இருந்தது.

நான் டீயை உறிஞ்சியபடி சொன்னேன் “என்ன பண்றது மச்சி. ஒண்ணாம் தேதியானா ஒரு லட்சம் ரூபா அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகுது. எவன் தருவான். இதுக்காக நம்ம முதுகெலும்பு இல்ல மூளையே கரைஞ்சு காணாம போனாலும் செஞ்சுதான ஆகணும்”

பாலாஜி வெறுப்பாக என்னை பார்த்தான். நான் தொடர்ந்தேன் “வீக் எண்ட்ல இஎ மால்ல ஷாப்பிங், அப்டியே எஸ்கேப்ல ஃபிலிம், திங்கிறதுக்கு கே.எஃப்.சி சிக்கன் குடிக்கிறதுக்கு கொகோகோலா, பெப்சி. உடுக்கிறதுக்கு லீவைஸ்ல ஜீன்ஸ், அடிடாஸ்ல அல்ட்ரா மாடர்ன் டி ஷர்ட், ஓட்டுறதுக்கு இம்போர்டட் பைக் இப்படி போட்டுக்கிட்டே போற லிஸ்டுக்கு இன்னும் வெள்ளைகாரனுக்கு என்னன்னெ டெடிகேட் பண்ணனுமோ அத்தனையும் பண்றோம். அதுக்காகதான மச்சி இந்த அசுர உழைப்பு. இதுல நொட்ட சொல்லிக்கிட்டு திரிஞ்சா உனக்கு பின்னாடி பாரு எத்தன பேரு கையில ரெஸ்யூமோட க்யூவில நிக்கிறானுங்க. அவ்ளவு தான் ஊருக்கு போய் உங்கப்பா நிலத்துல ஏரோட்டக்கூட முடியாது. அத்தனையும் பிளாட் போட்டு அலேக்கா வித்திட்டு இருக்கானுங்க ”  என்று முடித்தேன்.

பாலாஜி இப்போது என்ன சொலவது என்று தெரியாமல் விழித்தான். நான் சொன்னது அத்தனையும் அவனுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். ஆனாலும் மனுஷன் தானே. எவ்வளவுதான் கார்ப்பரேட் அடிமையாக இருந்தாலும் அவனுக்குள்ளும் தூங்கி கொண்டிருக்கும் அன்னியன் அவ்வப்பாது  விழித்துக்கொள்வான். வீடியோ கேமில் திக்கு தெரியாமல் மாட்டிகொண்ட கேரக்டர் போல நின்றிருந்தான் பாலாஜி. நாலாபக்கத்திலிருந்தும் வினோத மிருகங்கள் தாக்க வருகின்றன. என்ன பண்ணுவான் பாவம். இன்று பாலாஜி. சில சமயம் அவன் நிற்குமிடத்தில் நான். நான் இப்போது அவனுக்கு சொன்ன அதே டயாலாக்கை தான் அவன் எனக்கும் சொல்லுவான்.

” சரி எப்டியோ நாளைக்கு வரதுன்னு ஆயிடிச்சு. இன்னைக்கு நைட்டயாவது சந்தோஷமா கொண்டாடுவோம் மச்சி” என்றேன். பாலாஜி வண்டியை கிளப்பி பிரேக் அடித்த இடம் தண்டர் பார். பீரு கூலாவே இருக்காத டாஸ்மாக் பார்களுக்கும் கூலிங்கிற்கும் சேர்த்து லம்பா கொள்ளையடிக்கும் உயர்தர பார்களுக்கும் இடைத்தரத்தில் இருக்கும் பார் இது. கூலிங்கும் இருக்கும் கொள்ளையும் குறைவு.

ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பண்னிக்கொண்டு கொறிக்க வைத்திருந்த வறுகடலையை வாயில் தூக்கி தூக்கி போட்டபடி பேச ஆரம்பித்தான் பாலாஜி

“ஓகே மச்சி இந்த ஆப்பிஸ் கடுப்பு பத்தியெல்லாம் பேச வேண்டாம். ஏதோ கொஞ்சம் நேரமாவது சந்தோஷமா இருப்போம்ணு தான் இங்க வந்திருக்கோம் அந்த நேரத்தையும் ஆப்பிஸ் மேட்டர் பேசி நம்மள நாமே ஏன் கடுப்பேத்தணும். சொல்லு”

அதுவும் சரிதான் என்பதைப்போல நான் அவனைப்பார்த்தேன். “லைஃப்ல ஜாலியா இருக்கணும் மச்சி. அதுக்கு தான நாம பொறந்திருக்கோம். இப்படி எவனுக்கோ உழச்சி கொட்டி நம்ம வாழ்க்கைய ஓட்டுறதுக்கா இந்த பூமிக்கு வந்திருக்கோம். சொல்லு” பாலாஜி எப்படியும் சுற்றி இங்கே தான் வருவான் என்பது எனக்கு தெரியும்.

“நீ சொல்றது கரெக்ட் தாண்டா. ஆனா என்ன பண்றது நீயே சொல்லு” என்றேன்.

“அது தான் சரியா தெரியலையேடா. கொய்யால கம்ப்யூட்டர் படிச்சா நல்ல ஃப்யூச்சர்னு எங்க ப்ளஸ் டூ வாத்தியான் அன்னைக்கு சொல்லும் போதே நான் அவன் வாயக்கடிச்சிருக்கணும்” என்றான்.

“அப்டி பாத்தா நான் என்னோட அப்பா வாயத்தான் கடிச்சிருக்கணும்.

அவங்களுக்கெல்லாம் நம்ம மேல ஒரு அக்கற அதான் அப்டியெல்லாம் சொல்லியிருப்பாங்க. பாவம் அவங்களுக்கு என்ன தெரியும். பயபுள்ளைக படிச்சு நாலு காசு சம்பாதிச்சு நல்லா இருந்தா சரின்னு நினச்சுருப்பாங்க.”

“காசு மட்டுமே மேட்டர் இல்லன்னு இப்ப தெரியுது. ஆனா விட முடியல. எதாவது பண்ணனும் மச்சி. எவன் கீழயும் வேல பாக்கக்கூடாது. நம்ம டைம் நம்ம கைல இருக்கணும். இதெல்லாம் தான் மச்சி இப்போ முக்கியமா தோணுது.” என்றான். பேச்சுக்கு இடையில் மேஜைக்கு வந்துவிட்டிருந்த பீரில் சில சிப்கள் அடித்திருந்தோம்.

தம்மை பற்ற வைத்தபடி பாலாஜி சொன்னான் “இங்க பாரு மச்சி. நம்ம ஃபீல்டுக்கு யூனியன் கீனியன் எல்லாம் கிடையாது. அதெல்லாம் அறைகுறையாத்தான் இருக்கு. அதெல்லாம் வந்தாலும் நம்மள மாதிரி பயபுள்ளைகள வச்சிட்டு அவனுக என்னத்த பண்ணமுடியும். இழக்கிறதுக்கு ஒண்ணுமே இல்ல ஆனா பெறுவதற்கு இந்த உலகமே இருக்குன்னு சொல்லி தான் உழைக்குறவனுங்கள ஒரு காலத்துல ஒண்ணா சேத்தானுங்க. ஆனா இன்னைக்கு நமக்கு இழக்குறதுக்கு சில விஷயங்கள் இருக்கு ஆனா இழக்கவும் தயாரா இல்லை இதுல எங்கே ஒண்ணா சேக்கிறது” என்றான்.

கண்ட கண்ட புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருப்பதால் பாலாஜி அவ்வப்போது இப்படி சில அரிய கருத்துக்களையும் எடுத்து விடுவான் நமக்கு அந்த கருமமெல்லாம் தெரியாத காரணத்தால் அசந்து போய் பார்ப்பதோடு சரி. அவன் சொலவதை ஜீரணித்து கொள்ள இன்னொரு மிடறு பீரை தொண்டையில் இறக்கினேன். அவன் கையிலிருந்து தம்மை வாங்கி ஒரு பஃப் இழுத்து புகையை மூக்கு நுனிக்கு ஊதினேன். கண்கள் முன்னால் புகை கலைந்து மறைந்தது.

”மச்சி ஆப்பிஸ் விஷயம் பேசக்கூடாதுன்னு அதையே தாண்டா பேசிக்கிட்டு இருக்கோம்.”  இது நான். அதுக்குள்ளாக ஒரு பீரை காலி செய்துவிட்டு அடுத்ததிற்கு ஆர்டர் செய்து விட்டு என்னை நோக்கி திரும்பினான் பாலாஜி.

“இங்க பாரு மச்சி. இப்படியே போனா எல்லாம் ஒரு நாள் தலைய பிச்சுக்கிட்டு தெருவில அலையப்போறானுங்க பாரு” என்றான்.

“சரி மச்சி இப்போ என்ன தான் பண்றது நீயே சொல்லு” என்றேன்.

“எல்லாத்தையும் விடணும்டா. ஊருல போய் சொந்தமா நாலு மாடு வாங்கி மேச்சாலும் மேய்க்கணுமே தவிர இந்த மானக்கெட்ட கூட்டத்துக்கு கூட மாரடிக்கக்கூடாது. எப்போ பாரு டெட்லைனு, டார்கெட்டு, மார்கெட்டு டாய்லெட்டுன்னு.”

“எல்லாத்தையும் உடனே விட்டுர முடியாதுல்ல ம்ச்சி”

“த்தா பாரு ஒருத்தனுக்கும் தன்னம்பிக்கையே இல்ல. தன் சொந்த காலில நிக்கணும்கிற எண்னமே கிடையாது. உன் சொந்த ஊருல போய் பாரு எவனும் பிழக்கலையா. என்னமோ எல்லா பயகளும் கார்ப்பரேட் ஆப்பிஸ்ல வேல செஞ்சு தான் காலத்த ஓட்டுற மாதிரி சொல்லுற”

“நான் எப்போ மச்சி சொன்னேன்” என்றேன் கூடவே” எனக்கும் ஒரு எளவும் புரிய மாட்டேங்குது” என்று முடித்தேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை பக்கத்து டேபிளில் இருந்த ஒருத்தர் புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தார். நடுத்தர வயது. வெள்ளைச்சட்டை போட்டிருந்தார். நான் அவரைப்ப்பார்க்கவும் பாலாஜியும் திரும்பி அவரை பார்த்தான்.

சப்ளையர் பையன் பில் கொண்டு வந்தான். பாலாஜி நான் பே பண்ணுறேண்டா என்றவாறு பர்சிலிருந்து கிரெடிட் கார்டை எடுத்து பையனிடம் கொடுத்தான். பக்கத்து டேபிள் ஆசாமி இப்போதும் புன்னைகையுடன் கிரெடிட் கார்டை பார்த்து கொண்டிருந்தார்.

பில் சைன் பண்னிக்கொடுத்துவிட்டு டேபிளை விட்டு எழுந்து போது பாலாஜி பக்கத்து டேபிள் ஆசாமியிடம் சென்று கூறினான் “சார் இவ்வளவு பேசுறானுக. கடைசில ஏதோ ஒரு கார்ப்பரேட் பேங்கோட கார்ட தான் பில்லுக்கு பே பண்ண நீட்டுறன்னு நீங்க நக்கலா நினைக்கலாம். இது ஒரு சோகமான முடிவு தான். ஆனா என்ன பண்றது சார். இந்த பில்லுக்கும் சேத்து தான நான் நாளைக்கு அதுவும் சனிக்கிழம அதுவுமா வேலைக்கு போக வேண்டி இருக்கு” என்றான்.

அந்த ஆள் சிரிப்பதா வேண்டாமா என்பது போல பார்த்து கொண்டிருந்தார். பாலாஜி கடைசியாக சொன்னதின் அர்த்தம் எனக்கு சரியாக விளங்க வில்லை. ஆனால் ஏதோ சொல்ல வருகிறான் என்பது மட்டும் புரிந்தது!

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , .

மஞ்சள் நிழல் தேநீர் காதல்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

January 2014
M T W T F S S
« Dec   Apr »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: