தேநீர் காதல்!

January 15, 2014 at 11:39 pm Leave a comment

 

Tea_love_by_lena483

1

”புல்ஷிட். டீ நல்லா போடுறான்னு ஒருத்தன லவ் பண்னுவியா” என்றாள் ஸ்ரீஜா. எல்லாரும் கிண்டலாக சிரித்தனர். மது என்ன செய்வதென்று தெரியாமல் எல்லாரையும் பார்த்தாள்.

“என்ன சொல்றீங்க எனக்கொண்ணும் புரியல” என்று தீபா தலையை சொறிந்தாள்.

“அட உனக்கு மேட்டரே தெரியாதா. மது நம்ம ஆப்பிஸுக்கு டீ சப்ளை பண்ற தினேஷை லவ் பண்றாளாம்” என்றாள் கிறிஸ் என்கிற கிறிஸ்டினா.

மதுவுக்கு முகம் சிவந்தது. கையில் கடிக்க எடுத்த பர்கரை அப்படியே பிளேட்டில் வைத்து விட்டு கத்துகிற தொனியில் சொன்னாள் “நிறுத்துங்க… என்ன காமெடி வேண்டி கிடக்கு. நான் சீரியசா தான் சொல்லுறேன். எனக்கு தினேஷ பிடிச்சிருக்கு. அவன் டீ போடுற ஆளு தான். எனக்கு அவன் போடுற டீ ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால அவன பிடிச்சிருக்கு. அந்த பிடிச்சிருக்கு இப்போ லவ்வா தோணுது. நான் நல்லா சம்பாதிச்சிட்டு இருக்கேன். அவன் டீ மட்டும் போட்டு குடுத்தா போதும் அவன் டீக்காகவே அவன் கூட வழ்வேன். ஒரு ஆள லவ் பண்றதுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். எனக்கு டீ. இதுல என்ன தப்பு”

எல்லாரும் ஏதோ அதிசயத்தைப்பார்ப்பது போல அவளைப்பார்த்து கொண்டிருந்தனர். “இல்ல மது நாங்க என்ன சொல்ல வரோம்னா…” என்று ஸ்ரீஜா இழுக்கவும். “தெரியும். நான் சொல்லுறது முட்டாள்தனமா கூட உங்களுக்கு தோணலாம். ஏண்டி கிறிஸ்டி நீ பிரசாத் பிரசாத்னு ஒருத்தன உருகி உருகி லவ் பண்றே இல்ல. எத வச்சு அவன லவ் பண்ற அவன் அழ்கா இருக்கான்னா. இல்ல நிறைய சம்பாதிக்கிறான்னா. எதாவது ஒரு காரணம் இருக்கும் இல்ல” கிறிஸ்டி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் குடித்த கோலாவை தொண்டையில் விழுங்கினாள்.

“நீ எதுவும் சொல்ல வேண்டாம். காரணத்தையும் நான் தெரிஞ்சுக்க விரும்பல. ஆனா ஒண்ணு மட்டும் தெரியும் எதாவது ஒரு காரணம் கண்டிப்பா ஒரு காரணம் நான் மேலே சொன்னதுல ஏதாவது ஒண்ணு இல்லன்னாலும் வேற ஏதாவது ஒரு காரணம் கண்டிப்பா இருக்கும். உங்க எல்லாருக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். நீங்க யாரையும் லவ் பண்ணலன்னாலும் அதுக்கும் ஒரு காரணம் இருக்கும் இல்ல அதுபோல தான் நான் தினேஷ லவ் பண்றதுக்கும் டீ தான் காரணம். என்னோட ஃப்யூச்சர் கீச்சர்னு எதாவது இனிமேலும் இந்த விஷயத்தில பேசினீங்கன்னா நான் இப்பவே கிளம்பிடுறேன்” என்று முடித்தாள் மது.

இவ்வளவு சீரியசா இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை போல எல்லாரும் வாயடைந்து உட்காந்திருந்தனர். அடுத்து என்ன பேசுவதென்றே யாருக்கும் தெரியவில்லை. அமைதியாக பர்கரை கடித்தும் கோலாவை குடித்தும் கொஞ்சம் நேரத்தை ஓட்டினார்கள்.

“சாரிடி. நீ இவ்வளவு சீரியசா இருக்கன்னு நாங்க நினைக்கல” என்று அமைதியை கலைத்தால் கிறிஸ். ஆமா என்பது போல மற்றவர்கள் தலையை அசைத்தனர்.

”சரி நீ தினேஷ் கிட்ட விஷயத்த சொல்லிட்டியா” என்றாள் தீபா.

”இல்லடி. நேத்து கூட அவன் கிட்ட விஷயத்தை சொல்லலாமுன்னு பக்கத்துல போனா. என்ன மேடம் டீயில சக்கர இல்லியான்கிறான்” என்றாள். யாரும் சிரிக்காமல் அவளையே பார்த்து கொண்டிருந்தனர்.

“அவன் மேடம்னு கூப்பிடவும் எனக்கு ஒரு மாதிரியா ஆயிடிச்சு. அப்படியே அறைஞ்சிடலாம் போல இருந்திச்சு. போடா லூசுன்னு கத்தலாம் போல இருந்திச்சு” என்றாள்.

“சரி அவனுக்கு எப்படி தெரியும் நீ எப்படியும் சொல்லி தானே ஆகணும். இல்ல நாங்க பேசவா” என்றாள் தீபா. மது முறைத்தாள்

“ஒண்ணும் வேண்டாம் என் லவ்வ எனக்கு சொல்ல தெரியும்”

மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

2

மது செல்லும்போது தினேஷ் பாலில் டிக்காஷனை விட்டு ஆற்றிக்கொண்டிருந்தான்.

“வாங்க மேடம். நீங்க கேபினில இல்ல அதான் டீய அங்க வைக்கல. மீட்டிங் கீட்டிங் போயிட்டீங்கன்னு நினச்சேன். சொல்லுங்க டீ எடுக்கவா” என்றான்

“தினேஷ் முதல மேடம்னு என்ன கூப்பிடாதீங்க. மதுன்னே சொல்லுங்க” என்றாள். தினேஷ் சட்டென்று புரியாமல் விழ்த்தான்.

“உங்க கிட்ட ஒரு விஷ்யம் சொல்லப்போறேன். எனக்கு உங்க டீ ரொம்ப பிடிச்சிருக்கு”

தினேஷ் சிரித்துக்கொண்டே சொன்னான் “எப்படி பிடிக்காம போவும் என் கைப்பக்குவம் அப்டி. யாருக்குப்பிடிக்காது சொல்லுங்க”

“லூசு மாதிரி பேசாதீங்க தினேஷ். நான் சொல்ல வரறத முழுசா கேளுங்க. என்னகு உங்க டீ மட்டும் பிடிக்கல உங்களையும் பிடிச்சிருக்கு. உங்கள கல்யாணம் பண்னிக்க விரும்புறேன்”

தினேஷுக்கு முகம் பீதியில் ஒரு கணம் வியர்த்தது. யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

“மேடம் நீங்க…”

“ஷட்அப் தினேஷ். மேடம்னு கூப்பிடாதீங்க”

கைய்லிருந்த டிக்காஷன் தவறி தரையில் கொட்ட லேசாக நடுங்கி விட்டான் தினேஷ்.

“யோசிச்சு சாயங்காலம் வரும்போது சொல்லிடுங்க” என்றபடி ஒரு ஏற்கனவே ஊற்றி வைத்திருந்த டீயை எடித்து கொண்டு ஒரு சிப் அங்கேயே சாப்பிட்டு விட்டு கேபினை நோக்கி நடந்தாள் மது.

3

பால் கேனை கழுவியபடி ஜெயன் கேட்டான் “லூசாடா அந்த பொண்னு. உன் பொழைப்பில மண்ணள்ளி போட்டுடுவா போல இருக்கு”

பால் பாக்கெட்டை கத்தரித்து அடுப்பிலிருக்கும் பாத்திரத்தில் ஊற்றியபடி தினேஷ் சொன்னான் “அதான் மச்சி எனக்கு ஒரு எளவும் புரியல. எனக்கே காய்ச்சல் வர மாதிரி இருக்கு. சாயங்காலம் திரும்பவும் ஆப்பிஸ் போறதுக்கே பயமா இருக்குடா”

ஜெயன் சிரித்தான் “மச்சி. ஒரு வேள சும்மா உன்ன கலாய்க்கிறதுக்காக சொல்லியிருப்பாளோ.”

“அப்டி தெரியலடா. அவ ரொம்ப பேசுற டைப் கிடையாது. எப்பவும் கொஞ்சம் சீரியசா வேலைபாத்துக்கிட்டு தான் இருக்கும். நான் டீ கொடுக்கும் போது கூட சிரிக்க கூட செய்யாம தான் டீயை வாங்கும்.” என்ற படி இன்னொரு அடுப்பில் வேறொரு பாத்திரத்தை தூக்கி வைத்தான் தினேஷ்.

”உன்னப்பத்தி அந்த பொண்னுக்கு ஒண்ணும் தெரியாது. ஊருல அத்தப்பொண்ன வேற நீ லவ் பண்னிட்டு இருக்கிற. நீயாவது காலையிலேயே அத அவ கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல”

“இல்ல மச்சி அந்த டென்ஷன்ல எனக்கு வாய்பேசவே வரல அப்புறம் எப்டி நான் இதெல்லாம் சொல்றது”

“உன்னோட டீ பிடிச்சிருக்கு அதுனால உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்றது எல்லாம் கொஞ்சம் ஓவர் மச்சி. ரொம்ப காமடியா தான் இருக்கு” என்றான் ஜெயன். தினேஷ் அப்பாவியாக அவனைப்பார்த்தான்

“சரி இப்போ சாயங்காலம் என்ன தான் சொல்லப்போற”என்றான் ஜெயன்.

”தெரியலடா” என்றான் தினேஷ்

“சரி நான் ஒரு ஐடியா சொல்லிறேன் பண்றியா” என்றான் ஜெயன்

“சொல்லுடா” என்று ஆர்வமானான் தினேஷ்

4

சாயங்காலம் ஆப்பிஸில் நுழையும் போதே கைகால் லேசாக உதறுவது போல இருந்தது. இருந்தாலும் தைரியத்த தக்கவைத்த படி பால்கேனை வைத்து விட்டு பையிலிருந்து டிக்காஷன், சக்கரை எல்லாம் மேஜை மேல் எடுத்து வைத்தான்.

பாலில் அளவே இல்லாமல் டிக்காஷனை ஊற்றினான். சக்கரையை கணக்கே இல்லாமல் கொட்டினான். அவன் வாழ்க்கையில் இது வரை இப்படி ஒரு மோசமான டீ போட்டத்தில்லை. ஒரு கப்பில் ஊற்றி கொண்டு மதுவின் கேபினைநோக்கி நடந்தான்.

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , , .

தேடிச்சோறு. முள் முடி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

January 2014
M T W T F S S
« Dec   Apr »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: