அஞ்ஞானச் சிறுகதைகள் 04

tamil advertising

santhosh narayanan 2

16. மேட்ச்

காலம் கி.பி. 2100

” சார் டி.என்.ஏ மேட்ச் ஆகுது. இது சரியா இருக்கும்”என்றார் டாக்டர்.கோவர்த்தன்.

“இதுல கிராஸிங் கோட் எதுவும் இல்லியே”என்றார் சீத்தாரமன்.

“சுத்தமா இல்ல.ப்யூரா இருக்கு. எல்லா கோடோன்ஸிலயும் சிஸ்டோசின்லருந்து தைமின் வரைக்கும் ஆராய்ஞ்சாச்சு. 2000 வருஷ ஹிஸ்டரிய நானோ மில்லிமீட்டர்ல படிச்சிட்டேன். நத்திங் டு ஒர்ரி” என்றார் டாக்டர்.கோவர்த்தன்.

சீத்தாராமன் திருப்தியாக“ஓகே பண்ணிடலாம் இல்ல”என்றபடி மொபைலை எடுத்து டயல் செய்து காதுக்கு கொண்டு போனார். பூரிப்புடன் சொன்னார் “ஐ காஸ்ட் மேட்ரிமோனியலா. எங்களுக்கு இந்த பையன் ஓகே சார்”.

 

  1. ரிவெஞ்ச்

”வேலைக்குன்னு வெளியப்போன ஆயிரக்கணக்கான பேர் வீடு திரும்பும் பாதையை மறந்து தெருவில சுத்துறாங்க. கூட்டம் கூட்டமா தற்கொலை பண்ணிக்கிறாங்க.எனக்கு பி.எம்க்கு பதில் சொல்லியாகணும்” அரசு தலைமை விஞ்ஞானி அனில் மிட்டல் ஆவேசமாக கத்தினார்.

இளம் ஆராய்ச்சியாளர் பார்த்தி எழுந்து “வெவ்வேறு இடங்களிலிருந்து ரிப்போர்ட் வந்திருக்கு சார். கோடிக்கணாக்கான தேனீக்கள் செல்போன் டவர் ரேடியோ டிரான்ஸ்மீட்டர்கள் மீது அப்பிக்கொண்டு தாங்கள் ரீங்கரிக்கும் ஃப்ரீக்வன்ஸியை செல்போன் ரேடியோ ஃப்ரீக்வன்சில கலந்திட்டே இருக்கு. அது செல்போன் உபயோகிக்கிறவங்க மூளையில ஊடுருவி அவங்க வீடு திரும்பும் பாதைகள் எல்லாம் மறந்து…திசை தவறி…ஒரே குழப்பம். இவ்வளவு தேனீக்கள் எங்கிருந்து வருதுன்னு கண்டுபிடிக்க முடியல சார்” என்று நிறுத்தாமல் பேசினான்.

“புல்ஷிட். என்ன விளையாடுறீங்களா” கத்திய அனில் மிட்டல் ஜன்னலை நோக்கி எதேச்சையாக திரும்பினார். அங்கே தூரத்திலிருந்து கருமேகம் ஒன்று தாழ்வாக பறந்து வருவது போல மங்கலாக தெரிந்தது. மெல்ல ரீங்கரிக்கும் சத்தம் அதிகரித்தபடி வந்தது.

 

  1. யின் யாங்

”எல்லா நல்லவனுக்குள்ளயும் ஒரு கெட்டவன் இருக்கிறான். இந்த டிவைட் மெஷின் அந்த நல்லவனையும் கெட்டவனையும் தனிதனியா பிரிச்சி கொடுத்திடும். அப்புறம் அந்த கெட்டவனை அழிச்சிடலாம். நீ தைரியமா உள்ள போ” என்றார் இன்வென்டர் கிருஷ். அர்ஜுன் உள்ளே நுழைந்தான். கிருஷ் ஸ்விட்ச் ஆன் பண்ணினார். பீப் பீப் பீப். ப்ராஸஸ் சக்சஸ். ரெண்டு அர்ஜுன் வெளியே வந்தார்கள். கிருஷ் துப்பாக்கியை கையிலெடுத்து “இப்போ நல்லவன் கெட்டவனை சுட்டு விடலாம். இதோ துப்பாக்கிய வாங்கிக்கோ” என்றார். ரெண்டுபேருமே துப்பாக்கியை வாங்க கை நீட்டினார்கள்.

 

 

  1. நியோ

உலக பங்கியின் தலைவர் ஜிம் கிம். மூன்றாமுலக நாடுகளின் பொருளாதார திட்டங்கள் குறித்த ஒரு ரகசிய மீட்டிங்கை முடித்து கொண்டு, இப்போது தான் அறைக்கு வந்திருந்தார். பரிசாக வந்த அந்த சிறிய சிகப்பு நிற பெட்டியை சந்தேகத்துடன் பார்த்தார். யார் தந்தது என்று ஞாபகம் வரவில்லை. ஆவலுடன் பிரித்தார். ஒரு கண்ணாடிப்பெட்டிக்குள் சிறிய மிகச்சிறிய கார்ல் மார்க்ஸ் உட்கார்ந்திருந்தார். முதலில் பொம்மை என்று நினைத் ஜிம் கிம் உற்றுபார்த்த போது தான் மார்க்ஸ் அசைவதை கவனித்தார். அதிர்ச்சியில் பெட்டியை கீழே போட்டார். கண்ணாடியுடன் மார்க்ஸ் பொம்மையும் உடைந்து சிதறியது. அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்ட அடுத்த கணம் அதை கவனித்தார். சிதறிய மார்க்ஸ் பொம்மையின் ஒவ்வொரு உடைசலும் ஒவ்வொரு மார்க்ஸாக உருமாறி அசைய ஆரம்பித்தது. ஜிம் கிம் கையில் கிடைத்த ஏதோ ஒன்றை எடுத்து வரிசையாக ஒவ்வொரு மார்க்ஸையும் உடைக்க ஆரம்பித்தார். மீண்டும் அந்த ஒவ்வொரு உடைசல்கள்ளும் ஒவ்வொரு…

 

 

  1. ஊடுருவல்

“ஒருத்தன் மூளைக்குள்ள இந்த ட்ரான்ஸ்மீட்டர் சிக்னல அனுப்பி அவன் வாங்க வேண்டிய ப்ராடக்டுகளையும், பிராண்டையும் பெனிடிரேட் பண்ணி, அவனை கன்ஸ்யூம் பண்ண தூண்ட முடியும். டிவியோ, ரேடியோவோ தேவை இல்லை. இது பயோ அட்வெர்டைசிங். அவன் மூளை அந்த பிராண்ட் பேரை சொல்லி கிட்டே இருக்கும். அவன் வாங்கியே தீருவான்” என்றான் அந்த ட்ராண்ட்ஸ்மீட்டரை உருவாக்கிய திவாகர். அசந்து போன இந்தியாவின் பிரபல தொழிலதிபரான கிஷோர் ரத்தனி உடனடியாக அந்த ட்ரான்ஸ்மீட்டர்களை வாங்க ஆர்டர் கொடுத்தார். விளம்பரத்துகென்று கோடிகள் கொட்டி கொடுப்பது இனி மிச்சம். “காலையிலிருந்தே பகவான் பெயர் தான் மனசுல ஓடிட்டே இருந்தது. ஏதோ நல்லது நடக்க போகுதுன்னு நினைச்சேன். நடந்திடிச்சு பாத்தீங்களா” என்று வாய் நிறைய பல்லாக சிரித்து விட்டு ”ஆமா உங்களோட இந்த ட்ரான்ஸ்மீட்டருக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க” என்றார். ராகவன் புன்னகையுடன் சொன்னான் “பகவான்”.

Leave a comment