அஞ்ஞானச் சிறுகதைகள் 07

March 22, 2015 at 11:16 pm Leave a comment

abstract 2

31. ஓவியன்

கதவை திறந்ததும் ”நீங்க தான் ஆர்டிஸ்ட் சந்தோஷா” என்றான் அவன். முகம்மெல்லாம் மயிர் மண்டியிருந்தது. தோளில் கேசம் அழகாய் புரண்டது. இடுப்புக்கு கீழே மட்டும் கசங்கலாக ஆடை.“ஆர்டிஸ்ட்னு சொல்ல முடியாது, ஏதோ கம்ப்யூட்டர்ல கொஞ்சம் வரைவேன்”என்ற சந்தோஷ் “நீங்க…” என்று கேள்வினான். “நான் முப்பதாயிரம் வருடங்கள் முன்பு பிரான்ஸின் ஷோவே குகை ஓவியங்கள் வரைந்தவர்களில் ஒருவன்”. சந்தோஷ் அதிர்ச்சியாக வில்லை பி.ஏ. கிருஷ்ணனின் ‘மேற்கத்திய ஓவியங்கள்’ புத்தகத்தை சில நாட்களாக படித்திருந்தான். மேஜை மீது தான் புத்தகம் திறந்து கிடந்தது. ஷோவே ஓவியனின் பக்கத்தில் இன்னொருவர் லேசாக தலைகுனிந்த படி நிற்பதை கவனித்தான். “இவர் உங்கள் முப்பாட்டன். தமிழகத்தில் கீழ்வாலை முதல் கொல்லூர் வரை பாறை ஓவியங்கள் வரைந்தவர்களில் ஒருவர்” என்றான் ஷோவே ஓவியன். அவர் கூச்சமாக தலை குனிந்து நின்றிருந்தார். கூந்தல் சோர்வாக முதுகில் படர்ந்திருந்தது.

சந்தோஷ் அவரை உற்று பார்த்தபோது தான் அதை கவனித்தான். கருமையான அவர் உடல் மீது தாறுமாறாக வார்த்தைகள் கிறுக்கப்பட்டிருந்தது. ரமேஷ் லவ் கவிதா, ஐ லவ் யூ பூஜா, மை நேம் இஸ் ராஜன், தலைவர் வாழ்க, இன்னும் என்னன்னமோ. சில கெட்ட வார்த்தைகள் கூட தெரிந்தது.

 

32. டீசர்

கடவுள் அந்த ரெஜிஸ்டர் தபாலை கையெழுத்து போட்டு வாங்கினார். இப்போதெல்லாம் பிரார்த்தனைகளை கொரியரில் அனுப்பி விடுகிறார்கள். ஆர்வத்துடன் பிரித்து படித்தார். “வணக்கம் கடவுள் சார்…” என்று ஆரம்பித்தது கடிதம். “உங்கள் கிருபையால் நாங்கள் பெற்றோர் ஆகப்போகிறோம் அதற்கு மிக்க நன்றி…” என்று தொடர்ந்தது “ எங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையை நினைத்து நாங்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். அந்த குழந்தை எப்படி வளரப்போகிறது, என்னவாகப்போகிறது, அதன் எதிர்காலம் எப்படி இருக்கும், என்று தினமும் யோசிப்பதே எங்களுக்கு வேலையாகப்போய் விட்டது” கடவுள் பெருமூச்சு விட்ட படி மேலும் படித்தார் “ அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கையின் முழு விபரங்களும் உங்களுக்கு தெரியும் என்பதால் நீங்கள் ஒரு விஷயம் பண்ண முடியுமா” கடவுள் புருவத்தை உயர்த்தியபடி அடுத்த வரியைப்படித்தார்.

”வி காண்ட் வெயிட். குழந்தையின் வாழ்க்கையை ஒரு டீசர் கட் பண்ணி எங்களுக்கு அனுப்ப முடியுமா ப்ளீஸ்”

 

33. இன்ஸ்யூரன்ஸ்

இன்ஸ்யூரன்ஸ் ராமலிங்கம் யாராவது மாட்டுவார்களா என்று பார்த்தபடி நின்றார். கட்டுமஸ்தாக ஒருவன் எதிரே வரவும் உற்சாகமானார். வந்தவன் “வணக்கம் சார் உங்களை தேடித்தான் வந்தேன். லைஃப் இன்ஸ்யூரன்ஸ் முடிஞ்சு போச்சு.”என்றான். ராமலிங்கம் குழப்பமாக “ஏற்கனவே நீ கட்டிருக்கியா ஞாபகம் இல்லியே” என்று இழுத்தார். அதிகமான பாலிஸிதாரர்களை சேர்த்து விட்டதால் சமயங்களில் முகங்கள் மறந்து விடுகிறது. “அது சரி ஒண்ணும் பிரச்சின்னை இல்ல ரினிவல் பண்ணிக்கலாம். இப்போ வாகனங்களுக்கு கூட நான் இன்ஸ்யூரன்ஸ் ரெடி பண்ணி தரேன். வாகனம் ஏதாவது வச்சிருக்கியா. ” என்று புன்னகைத்தார். “வாகனம் இதோ பக்கத்தில் தான் நிக்குது. வாங்க ” என்றான் அவன். ராமலிங்கம் எட்டி நடந்தார்.

”உங்களை தேடித்தான் வந்தேன். லைஃப் இன்ஸ்யூரன்ஸ் முடிஞ்சு போச்சு.”என்றான் மீண்டும் அவன். திருப்பத்தில் அவன் வாகனம் நின்றிருந்தது. கருப்பாக தலையில் இரு கொம்புகளுடன்.

 

 

34. அக்னி

”தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” ”ஹவ் இட் இஸ் பாஸிபிள் என்று கேட்டார் ப்ரொஃபசர் கெல்வின். எக்ஸோதெர்மிக் விதிகளின் படி எந்த பொருளும் ஆக்ஸிடேஷன் ஆகித்தானே தீரும். ஐ மீன் விரல் தீப்பற்றிக்கொள்ளும் அல்லவா.” இதற்கான விடை தேடித்தான் அவர் தன் பழைய கெமிஸ்டிரி ஆய்வு நண்பர் முகுந்தனின் வீட்டில் உட்கார்ந்திருந்தார். முகுந்தன் மடியில் இருந்த இரண்டு வயது மகன் சுப்ரு அந்த வெள்ளைக்கார அங்கிளை விசித்திரமாக பார்த்தான். மேஜை நடுவில் ஒரு சின்ன தீபம் சுடர் விட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. ”இந்த ஃப்ளேம் கூட அந்த ஆயில் ஆக்ஸிஜன் ரிச் காம்பவுன்டாகா செயல்படுவதால் தான் எரிகிறது. அதாவது இதில் கோக்கனட் ஆயில் தான் ஆக்ஸிடைசர். இதில் விரலை வைத்தால் ஸ்கின்னுடன் வேதியல் வினை புரிந்தே தீரும்” என்றார் கெல்வின். முகுந்தன் ஏதோ சொல்வதற்காக தீபத்தை நோக்கி குனிந்தான்.

குட்டி சுப்ரு தன் பிஞ்சு விரல்களை நீட்டி ஒரு கணம் சுடரை பிடித்தான். கெல்வின் பதறிவிட்டார். முகுந்தன் குழந்தையை பின்னுக்கு இழுத்தான். குட்டி சுப்ரு கெல்வின் மட்டுமே பார்க்கும்படியாக தன் பால் பற்களால் புன்னகைத்தான்.

 

35. வித்தை

வில்வித்தையில் இண்டெர்நேஷனல் கோல்ட் மெடலிஸ்டான நிஷாத், ஜர்னலிஸ்டு தனஞ்செயனிடம் “நாங்கள் தலைமுறையாக பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. வேடுவர்களான எங்கள் முன்னோர்கள் மகத நாட்டிலிருந்து கிளம்பி தேசம் தேசமாக அலைந்தோம். எத்தனை காலமானாலும் இந்த வித்தையை என்றைக்கும் நாங்கள் கைவிட மாட்டோம் என்பதே எங்கள் தந்தையருக்கு நாங்கள் கொடுக்கும் வாக்குறுதி.” என்றபடி ஃப்ரிட்ஜை திறந்து. ஃப்ரீசரிலிருந்து பனிபடர்ந்த சிறுகுடுவையை எடுத்தான்.

தனஞ்செயன் பின்கழுத்து ஜில்லிட அதற்குள் நோக்கினான். பல நூற்றாண்டுகளாக சுருங்கிய ஒரு கட்டை விரல். ”எனது முதுபாட்டனின் விரல் இது. அதற்குப்பிறகு எங்கள் குலத்தில் யாருக்கும் கட்டைவிரலே இல்லை தெரியுமா”. தனஞ்செயன் அப்போது தான் நிஷாதின் கைகளை கவனித்தான். பிளாஸ்டிக் பெருவிரல். “பிறகு எப்படி இவ்வளவு வெற்றிகள்” என்றான்.

”பெருவிரல் எங்கள் குலத்திற்கு கைகளிலில்லை, மனதிற்குள் இருந்தது” என்ற நிஷாத், தனஞ்செயனின் கண்களை ஒரு நொடி பார்த்தான்.

Advertisements

Entry filed under: tamil advertising. Tags: , .

அஞ்ஞானச் சிறுகதைகள் 06 அஞ்ஞானச் சிறுகதைகள் 08

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 71,377 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

March 2015
M T W T F S S
« Apr   Apr »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: