ஒன்லைன் விமர்சகர்கள்!

tamil advertising

oneline

 

இணையத்தில் அதுவும் குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இன்னபிற சமூக வலைத்தளங்களில் சினிமா விமர்சனங்களை உடனுக்குடன் படிப்பதில் சில அனுகூலங்களும் சில பிரச்சினைகளும் இருக்கின்றன.

முதலில் அனுகூலம்.

வெள்ளிக்கிழமை முதல் ஷோ ஆரம்பித்து இண்டெர்வெல் விடும் போதே, ஒன் பாத்ரூம் போயிட்டே ஒன்லைனில் ஸ்டேட்டஸ்மெசேஜையும், டீ,சமோசா சாப்பிட்ட படி ட்விட்டரில் ஒரு கீச்சையும் தட்டி, ஓபனிங் ஷோ முடியுறதுக்குள்ளே ஒபீனியன் கிரியேட் பண்ணி விடுகிறார்கள்.

படம் பார்க்காத சக நெட்டிசன்கள் கூட ஆப்பிஸ் வேலைக்கு மத்தியிலும் ’கர்மவீரனே…’கணக்காக இதை லைக்கிட்டும் ஷேர் செய்தும், மேட்னி ஷோ முடிவதற்குள் இணையத்தை மெர்சலாக்கி படம் எடுத்தவர்களை பதைபதைக்க வைக்கிறார்கள்.

நல்ல படமென்றால் கொண்டாட்ட ஸ்டேட்டஸ் போட்டு கும்மி அடிக்கவும், மொக்கை என்றால் காமெடி மீமி போட்டு அம்மி மிதிக்கவும் செய்வதால், இது வரை பார்க்காதவர்களும் ஆறின கஞ்சி பழங்கஞ்சி ஆகுறதுக்குள் பிளாக்கில் டிக்கட் எடுத்தாவது படத்தை பார்க்கவோ, தலை தப்பியது ட்விட்டர் புண்ணியம் என்று எடுத்த டிக்கட்டையே இலவசமாக கொடுக்கவோ தயாராகி விடுகிறார்கள். மற்றவர்களயும் வீக் எண்டில் படம் பர்க்கலாமா அல்லது பர்சை பத்திரப்படுத்தலாமா என்று ஒரு முடிவுக்கு வர வைக்கிறார்கள்.

இனி பிரச்சினை.

என்னவென்றால், ஒரு படத்தை கொஞ்சம் ஓவராகவே கொண்டாடி விடுவதால் அடுத்த வாரம் படம் பார்ப்பவர்களை ’கொடுத்த பில்ட் அப் அளவுக்கு ஒர்த் இல்லையோ’ எனவும், கதறக் கதற கமெண்ட் போட்டு கலாய்த்த ஒரு படத்தை பார்க்கும் போது ’அந்த அளவுக்கு மரண மொக்கை இல்லியே’ எனவும் யோசிக்க வைத்து விடுவது தான்.

சோ, இந்த அவசர விமர்சகர்கள், எதையும் சற்று ஓவராக பண்ணி விடுவதால், நல்ல படத்துக்கு கெட்டது செய்கிறார்களா? அல்லது மோசமான படத்துக்கு நல்லது செய்கிறார்களா? என்ற குழப்பங்களையே தலைக்குள் தட்டாமாலையாக சுற்ற விடுகிறார்கள்.

உடல் ஒரு மீடியம்

tamil advertising

tmagArticle

 

கொடுத்த ஒவ்வொரு காசுக்கு ஒரு ஜோக் என்று சிரித்து விட்டு வீட்டுக்கு நடையைக்கட்டும் சபா நாடகங்கள் முதல் புதிய பரிமாணங்களை காட்டும் நவீன நாடகங்கள் வரை இன்று நமக்கு அறிமுகம் உண்டு . நிகழ்த்து கலையும் (பெர்ஃபார்மன்ஸ் ஆர்ட்) ஒரு வகையான விஷுவல் ஆர்ட் தான். உலகெங்கும் அதற்கு பல்வேறு வடிவங்கள்.

இதில் பல சோதனை முயற்சி செய்யும் கலைஞர்கள் இருக்கிறார்கள். சோதனை கலைஞர்களுக்கா? பார்வையாளர்களுக்கா என்பது பார்க்கும் நமது புரிதலை பொறுத்தது.

மரினா அப்ரமோவிக். (Marina abramovic என்று கூகிளில் தேடவும்) செர்பியா நாட்டு நிகழ்த்து கலைஞர். ’நிகழ்த்து கலையின் மூதாட்டி’ என்று இவரை செல்லமாக சொல்கிறார்கள். மரினா தன் உடலையே ஒரு சோதனைக்கருவியாக கொண்டு பல நிகழ்த்துகளை நடத்துகிறார்.

ஒரு முறை தன் முன்னால் ஒரு டேபிளில் ஆலிவ் ஆயில், ரோஜா செடி முதல் கத்தி, லோட் செய்யப்பட்ட துப்பாக்கி உட்பட 72 பொருட்களை பரப்பி விட்டு, ஆறு மணி நேரமாக அசையாமல் உட்கார்ந்திருந்தார். லிஸ்டிலுள்ள எந்த பொருளை வேண்டுமானாலும் தன் மீது பிரயோகிக்கலாம் என்பதே பார்வையாளர்களுக்கான சவால். மனிதர்களின் நம்பிக்கை மீதான ஒரு சோதனை முயற்சி. அன்பா வன்முறையா என்பது தான் மரினா காண விரும்பிய ரிசல்ட்.

முதலில் பார்வையாளர்கள் அமைதியாக பார்த்துவிட்டு தான் சென்றார்கள் பிறகு கூட்டம் சேர சேர மெல்ல வன்முறையை நோக்கி மனிதர்கள் சென்றதாக சொல்லும் மரினா “ அவர்கள் எனது கூந்தலை வெட்டவும், பிறகு ரோஜா செடியின் முட்களை எனது நிர்வாணமான வயிற்றில் அழுத்தவும் செய்தார்கள். ஒருவன் துப்பாக்கியை எடுத்து என் தலைக்கு குறி வைக்க இன்னொருவன் அதை தடுக்கவும் செய்தான். எப்போதும் முடிவை கூட்டத்திடம் விட்டு விடும்போது நீங்கள் கொல்லப்படும் சாத்தியம் கூட உண்டு” என்கிறார்.

அன்பிற்கும் வன்முறைக்கும் இடையே உறைந்திருக்கும் மனிதர்களின் சைக்காலஜியை தனது பெரும்பாலான நிகழ் கலையின் வழியாக சோதித்து பார்த்த மரினா, ”எனது உடலின் எல்லையையும் மனதின் விரிவையும் அதற்கு பயன்படுத்திக்கொள்கிறேன்” என்று கவித்துவமாக சொல்கிறார்.

நம்மூரில் முன்பு அல்லயன்ஸ் ஃப்ராங்கைஸிலும், மேக்ஸ் முல்லர் பவனிலும், பெசண்ட்சகர் பீச்சை ஒட்டி இருக்கும் டான்சர் சந்திரலேகாவின் ஸ்பேஸசிலும் வேறு சில கலைஞர்களின் சோலோ பெர்ஃபார்மன்ஸ்களை பார்த்து வியந்திருக்கிறேன். மரினா இந்தியாவிற்கு வந்திருக்கிறாரா என்று தெரியவில்லை, அப்படி வந்து இது மாதிரியான நிகழ்வுகளை நடத்தி இருந்தால், நினைக்கவே படபடப்பாக இருக்கிறது.

மினி மியூசியம்

tamil advertising

mini musuem

பள்ளி பிராயத்தில் மியூசியத்திற்கு போய் இருப்பீர்கள். ஒரு ஆதிகாலத்து விலங்கின் பயமுறுத்தும் எலும்பு கூடோ? காலங்கள் பாசியாக படர்ந்த ஒரு கல்வெட்டோ? பாடம் செய்யப்பட்ட பழங்காலத்து பறவையின் பஞ்சடைக்கப்பட்ட இறகுடலோ? புரியாத ஜிலேபி மொழியில் கதை பேசும் கல்வெட்டோ? ஏதோ ஒன்ற கைகட்டி அடக்கமாக வியந்து பார்த்திருப்பீர்கள் அல்லவா.

ஒரு மியூசியம் உங்கள் கைக்குள்ளேயே அடக்கமாக இருந்தால் எப்படி இருக்கும். எதோ ஸ்மார்ட்போன் ஆப் என்று நினைத்து விடாதீர்கள். நிஜமாகவே ஒரு குட்டியூண்டு மியூசியம். நினைக்கவே சுவராஸ்யமாக இருக்கிறதல்லவா? அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார் வர்ஜீனியாவை சேர்ந்த ஹான்ஸ் ஃபெக்ஸ்.

ஆய்வு விஞ்ஞானியான தன் தந்தை டாக்டர். ஜோர்கன் ஃபெக்ஸ், மால்டா தீவிலிருந்து கொண்டு வந்த உறைய வைக்கப்பட்ட ’ரெசினி’ல் ஒட்டிய சில ஆராய்ச்சி துணுக்குகள் தன்னை கவர்ந்ததாக சொல்லுகிறார் ஹான்ஸ். அப்போது அவருக்கு வயது ஏழு. இம்முறைய பின்பற்றி ஏன் குட்டி குட்டியாக ம்யூசியம் உருவாக்கக்கூடாது என்கிற ஐடியா அப்போதே அவருக்குள் தோன்றியதாம்.

கட்ந்த 35 வருட தேடலில், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் முதல் ம்யூசியம் ஆராய்ச்சியாளர்கள் வரை பலரது உதவியையும் நாடிய ஹான்ஸ் இப்போது இதை சாத்தியாமாக்கி விட்டார்.

டைனோசர் முட்டையின் சிறு துண்டு முதல் நிலாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ’லுனார் ராக்’ வரை கிட்டத்தட்ட பூமியின் வரலாற்றையே சின்ன சின்ன ’சாம்பிள் பீஸ்களாக’ உறைந்த ரெசின் என்கிற கண்ணாடிப்பேழைக்குள் பதித்து இன்று விற்பனைக்கும் கொண்டு வந்து விட்டார்.

மேலே இருக்கும் புகைப்படத்தில் குட்டி குட்டியாக என்னவெல்லாம் இருக்கிறது என்பதை பார்த்தால் வியக்காமல் இருக்க முடியாது. அறிவியலிலும் வரலாற்றிலும் ஆர்வமுள்ளவர்கள் ஒன்றை வாங்கி படுக்கைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டால், இண்டியானா ஜோன்ஸில் வரும் ’ஹாரிசன் ஃபோர்ட்’ மாதிரி தொல்பொருள் ஆராய்ச்சியாளனாக கனவில் ஃபீல் பண்ணலாம்.

இண்டெராக்டிவ் ஆர்ட்

tamil advertising

Iris-by-Hybe-3

 

சினிமா பார்க்கபோவது போல நவீன ஓவிய கண்காட்சிக்கு நம்மூரில் யாரும் குடும்பத்துடன் போவதில்லை. ஆனால் பிற ஊர்களில் போகிறார்கள். குடும்பத்துடன் வேண்டாம் தனியாக போகிறீர்களா? போனாலும் அமைதியாக வேடிக்கை பார்த்து விட்டு திரும்பி விடுவீர்கள் தானே. நவீன ஓவியங்கள் புரிவதில்லை என்பது கிளிட்சேவான ஒரு குற்றச்சாட்டு

எப்படி புரிந்து கொள்வது. சிம்பிள். புரிந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள் அனுபவியுங்கள் என்பதே பதில். சிறு குழந்தை சிரிக்கும் காட்சி, ஒரு சூரிய உதயத்தின் காட்சி, ஒரு கொசுவை அடித்தால் சிதறிய ரத்தத்துடன் அது ஒட்டியிருக்கும் காட்சி. இப்படி எதை பார்த்தாலும், பார்க்கும் நமது அனுபவத்தை ஒட்டி ஏதோ ஒன்று நமது மனதில் விரியும் அல்லவா. அதே தான். நவீன ஓவியம் ஓவியர் என்ன வரைந்திருக்கிறார் என்பதை விட பார்வையாளர் எப்படி எடுத்து கொள்கிறார் என்பதே முக்கியம் என்கிறது.

அதிலும் பார்வையாளரும் ஆர்ட்டில் ஒரு பகுதியாகி விட்டால் எவ்வளவு சுவராஸ்யமாக இருக்கும் என்று யோசித்ததின் விளைவே ”இண்டெராக்டிவ் ஆர்ட்” என்று சொல்லபடும் ஒரு வகையான நவீன டிஜிடல் ஆர்ட்.

இன்று நம்மை சுற்றி எல்லாமும் டிஜிடல் மயம். இண்டெராக்டிவ் ஆர்ட்டும் தொடுதிரை முதல் சென்சார் வரை டிஜிடலையே தன் மீடியமாக பயன் படுத்துகிறது. நீங்கள் இண்டெராக்டிவ் ஆர்ட் முன்பாக நின்றால் உங்கள் பிம்பமும் அந்த ஆர்ட்டின் ஒரு பகுதியாக மாறலாம், அல்லது உங்கள் அசைவே அந்த ஆர்ட்டை ஒரு அனிமேட்டட் கேன்வாஸாக மாற்றலாம், உங்கள் கண்சிமிட்டல் கூட அந்த ஆர்ட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம், அல்லது உங்கள் கைதட்டல் அந்த ஆர்ட்டில் ஒரு வண்ணத்தை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இப்படி உங்கள் பங்களிப்பே அந்த ஆர்ட்டுக்கு புது புது வடிவத்தை கொடுக்கலாம்.

மவ்ரிஸ் பெனாயுன் முதல் தோமஸ் சார்வெரியத் வரை நிறைய நவீன ஆர்டிஸ்டுகள் இம்முறையில் இண்டெராக்டிவ் ஆர்ட்டை உருவாக்குகிறார்கள்.

Interactive art என்று கூகிளில் தேடினால் படங்களும், தகவல்களும் உங்கள் முன் விரியும். அதன் வழியாக ஆர்வமுள்ளவர்கள் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் டிஜிடல் மயமாகும் கொஞ்ச காலத்தில் அட்டையிலிருக்கும் விகடன் தாத்தா நீங்கள் ஹலோ சொன்னால் திருப்பி ஹலோ என்று பதிலுக்கு கைகளை ஆட்டினாலும் வியக்கமாட்டீர்கள் தானே.

அஞ்ஞானச் சிறுகதைகள் 09

tamil advertising

5

41. வண்ணம்

பிரம்மாண்டமாக, அசையாமல் நின்று கொண்டிருந்த ரோபோவை காட்டி ப்ரொஃபசர் மனாஸ் “இதன் பெயர் ப்ரஹ். இது வெறும் ரோபோ இல்லை. உன்னை மாதிரி ரோபோக்களை உருவாக்கும் மதர் சிஸ்டம் இது.” என்றார் தன் பக்கத்தில் நின்றிருந்த குட்டி மஞ்சள் நிற ரோபோவிடம். “இதன் ஹெட் பகுதியிலிருந்து உருவானவன் நீ…” என்றார். மஞ்சள் ரோபோ ப்ரொஃபசரை ஏறிட்டு பார்த்தது.

“தெரிகிறது. இதன் ஜெஸ்டிலிருந்து கருஞ்சிவப்பு, ஸ்டொமகிலிருந்து வெள்ளை, காலிலிருந்து கடும்நீலம் என்று வெவ்வேறு வண்ணங்களில் ரோபோக்கள் உருவாகின்றன அல்லவா” என்றது மஞ்சள் ரோபோ. ஆமென்று தலையசைத்தார் மனாஸ். “ஆனால் எங்கள் எல்லாருடைய பாடி மெடபாலிஸமும் ஒன்று தான். இப்படி வண்ணங்களை மாற்றி எங்களை ஏமாற்றி நீங்கள் அடைவது என்ன”

ப்ரொஃபசர் மஞ்சள் ரோபாவை உற்று“ என்னுடைய இந்த அறிவியல் நகரம் என் கண்ட்ரோலில் இருக்க இந்த வகைப்பாடுகள் எனக்கு தேவையாக இருக்கிறது. ஒரு உண்மையை சொல்லட்டுமா இந்த ப்ரஹ் இல்லையென்றாலும் நீங்கள் உருவாகி வருவீர்கள். வெறும் வண்ணமடிக்கும் வேலையைத்தான் இந்த ப்ரஹ் செய்கிறது. நீ மஞ்சள் ரோபாவாக இருப்பதால் உன்னிடம் இதை சொல்கிறேன். ஆமாம் உனக்கு என்ன குறை? ஏன் இந்த கேள்விகள்? எல்லா அழுத்தங்களும் கடும்நீல நிற ரோபோக்களுக்கு தானே” என்றார்.

சட்டென்று மஞ்சள் ரோபோ, ப்ரஹ் என்னும் அந்த பிரமாண்ட ரோபோவை அசைத்து தள்ளியது. அது ஒரு பெரிய கட்டிடம் போல விழுந்து நொறுங்கிய அதிர்வு காற்றாய் அடித்தது. ப்ரொ. மனாஸ் செய்வதறியாது மஞ்சள் ரோபோவை பார்த்தார். அதன் மஞ்சள் நிற சிலிக்கான் ஸ்கின் அடித்த காற்றின் அதிர்வில் இளகி உதிர்ந்தது.

 

உள்ளே கடும்நீல நிறம் தெரிந்தது.

 

42. யார்?

 

“இந்த பூமியில எங்கும் மனிதர்களே. இல்ல” என்றது அடியாள் ஏலியன்.

“அப்படி சொல்ல முடியாது” என்றது மாஸ்டர் ஏலியன்.

“அண்டார்டிகா உள்பட ஏழுகண்டங்கள், அதுல இருக்கிற நாடுகள், தெருக்கள், வீடுகள் இப்டி பூமியின் மூலை முடுக்கெல்லாம் லேசர் கற்றைகளால் சல்லடையாக தேடியாகிவிட்டது. எங்கும் மனிதர்களே இல்லை” என்றது அடியாள் ஏலியன்.

“நான் நம்ப மாட்டேன்..” என்றது மாஸ்டர் ஏலியன்.

”இல்ல மாஸ்டர். நான் ஊரெல்லாம் தேடிட்டு வந்து சொல்கிறேன். நீங்கள் உட்காந்த இடத்தில் இருந்து கொண்டே எப்டி சொல்றீங்க. பூமியில் மனிதர்களே இல்லை” என்று மீண்டும் சொன்னான் அடியாள் ஏலியன்.

“இருக்காங்க.” என்றது மாஸ்டர்.

“இல்ல” அடியாள்

“இருக்காங்கனு சொல்றேன்.” மாஸ்டர்.

“இல்லவே இல்ல” அடியாள்

“இருக்காங்கனு அடிச்சு சொல்றேன்.” என்றார் மாஸ்டர் சத்தமாக.

“எப்டி சொல்றீங்க” என்றான் அடியாள் எரிச்சலாக

”நல்லா பாரு. இந்த கதையை இப்போ படிச்சிட்டு இருக்கிறது யாரு, கீழே லைக், கமெண்ட் எல்லாம் போட்டுட்டிருக்கிற இவங்க எல்லாம் யாரு” என்றார் மாஸ்டர் கோபமாக.

 

43. எலி

நாளை நடக்கப்போகும் விருது விழாவை நினைத்தபடி தன் கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் விஞ்ஞானி ராபர்ட்.

மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதியின் பிலேஸ் செல்கள் தான் மனிதன் உட்பட விலங்குகள் தங்கள் வழிகளை அறிவதற்கான காரணம். இயற்கையாக மூளையில் இருக்கும் ஜி.பி.எஸ். தன் ஆராய்ச்சி கூடத்தில் ஆயிரக்கணக்கான எலிகளின் மூளைகளை திறந்து சென்சார்களை பதித்து, அவை எல்லாவற்றையும் ஒரு மானிட்டரில் இணைத்திருந்தார்.

எலிகளின் மூளைகளின் கிரிட் செல்களில் உருவாகும் சிக்னல்களை கொண்டு ஒரு டிஜிட்டல் மேப்பை உருவாக்கி நாளைய நிகழ்வில் உலகத்தை வாயடைத்து போக செய்ய வேண்டும். மானிட்டரில் விரிந்த வரைபடத்தில் வழிகள் துல்லியமாக அம்புகுறியிட்டு காட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாக பார்த்து கொண்டே வந்த ராபர்ட் ஒரு சிகப்புநிற அம்புகுறி காட்டிய வாசகத்தை உற்றுபார்த்தார். வே டு ஹெல் என்று எழுதி இருந்தது.

கூடத்தின் மூலை முடுக்கெல்லாம் ஆயிரக்கணக்கான கீச்சொலிகள் ஒன்றாக எழுந்து காதை அடைத்தது.

 

 

44. ஸ்டிக்கர்

“டாக்டர். இது என் பையன். நேத்திலிருந்து இவனுக்கு ஒரு பிரச்சினை.”

“என்ன சொல்லுங்க”

“நேத்து காலையில நான் இவனுக்கு ஒரு அட்வைஸ் பண்ணினேன். உடனே அத நக்கல் பண்ணினான்”

“பசங்க அப்டி தான். அது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே”

“இல்ல டாக்டர். நக்கல் பண்ணின பிறகு அவன் ஒண்ணு பண்ணினான் அது தான் பிரச்சினை”

டாகடர் இளைஞனை பார்த்தார். அவன் புன்னகைத்து கொண்டிருந்தான்.

”அப்டி என்ன பண்ணினான்”

“திடீருன்னு எங்கிருந்து வந்திச்சின்னு தெரியல் அவன் கையில ஒரு பூனைக்குட்டி கார்ட்டூன் ஸ்டிக்கர். அதை அப்டியே என் மூஞ்சியில ஒட்டினான். அப்புறம் என் பொண்டாட்டி எதுவோ சொன்னதுக்கு ஒரு ஸ்மைலி அழுற மாதிரி ஒரு ஸ்டிக்கர ஒட்டினான். அப்புறம் யாரு எது பண்ணினாலும் அதுக்கெல்லாம் ஒரு கார்ட்டூன் ஸ்டிக்கர் ஒட்டினான். அது எங்கேருந்து அவன் கைக்கு வருதுன்னு தெரியல. யாரு என்ன சொன்னாலும் இப்படி விதவிதமா கார்ட்டூன் ஸ்டிக்கர்களை ஒரு நொடியில ஒட்டிடுறன். வீட்டுல வால் எல்லாம் ஒரே ஸ்டிக்கர் மயமா இருக்கு டாக்டர்”

டாக்டர் திரும்பி அவனை பார்த்தார் “இதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை சரி பண்ணிடலாம்” என்றார்.

அவன் சடாரென்று டாக்டரின் நெற்றியில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டினான். அதில் ஒரு குட்டிபாப்பா கார்ட்டூனுனும் மூணு லவ் சிம்பலும் இருந்திச்சு.

 

 

45. கோபம்

 

”பூமா தேவிக்கும் விஷ்ணுவின் வராக அவதாரத்திற்கும் பிறந்தவன் தான் நரகாசுரன். ஸ்ரீமத் பாகவதத்தில் இருக்கிறது”என்றார் தாத்தா திண்ணையில் இருந்தபடி..

“அப்புறம் எதுக்கு விஷ்ணுவோட இன்னொரு அவதாரமான கிருஷ்ணரே அவரை கொலை செய்யணும்”என்ற படி பட்டாசு பார்சலை பிரித்தான் அபி.

”கிருஷ்ணர் மட்டுமில்ல, காளியும், சத்ய பாமாவும் கூட நரகாசுரன கொன்னதா வெவ்வேறு கதைகள் இருக்கு. ஆனா கிருஷ்ணர் கொன்னத தான் நான் நம்புறேன். அது பெரிய கதை. ”என்றார் தாத்தா

“அப்போ பூமாதேவிக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் இல்ல தாத்தா” என்ற அபி ஒரு வெடி பாக்கட்டை எடுத்து முற்றத்தில் இறங்கினான்

“இருந்திருக்கலாம். ஆனா அது தான் விதி.” என்ற தாத்தாவை பார்த்துக்கொண்டே அபி ஒரு வெடியை உருவி தரையில் நிக்க வைத்தான்.

”அப்போ பூமாதேவிக்கு கோபமே வந்திருக்காதா. அவங்க கோபத்த எப்டி காட்டி இருப்பாங்க.” என்றான் ஊதுவத்தியின் கனலை பார்த்தபடி.

பிறகு குனிந்து வெடியின் திரியை பற்ற வைக்கும் போது தான் வெடியின் மீது அச்சிடப்படிருந்த லக்‌ஷ்மியின் உருவத்தை பார்த்தான். அவளது சிறு கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வழிவது போல தோன்றியது. மறுகணம் லக்‌ஷ்மி சுக்குநூறாக பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறினாள்.

“பூமாதேவி லக்‌ஷ்மியின் ஒரு அவதாரம் தான்”என்று தாத்தா சொன்னது வெடிச் சத்தத்தில் அவன் காதில் விழவில்லை.

அஞ்ஞானச் சிறுகதைகள் 08

tamil advertising

Log in Anjanasirukathai

36. லாக் இன்

‘இன்னைக்கு ரெண்டு வாழ்க்கை வாழுறாங்க. ஒன்று நிஜ உலகில் மற்றது ஃபாஸ்புக்கில். இதற்கான தீர்வு என்ன‘ இது தான் உங்களுக்கு தந்த ப்ராஜக்ட், அப்டிதானே”என்றான் மார்க். தலையை அசைத்த விவேகானந்த் ”இந்திய தத்துவங்களின் படி ஒன்று ஸ்தூல சரீரம் அதாவது நிஜம் மற்றது சூக்‌ஷ்ம சரீரம் அதாவது வர்சுவலாக ஃபேஸ்புக்கில். இந்த எல்லைகளை அழித்து ஒரே வாழ்க்கையை தருவது தான் என் ஆய்வின் முடிவு” என்றான். எப்படி என்பது போல பார்த்தான் மார்க்.

“ப்ரோக்கிராமிங்கில் சில மாற்றங்களை செய்திருக்கிறேன். முதலில் நீங்களே லாக் இன் பண்ணுங்கள்” என்ற படி லேப்டாப்பை நீட்டினான் விவேகானந்த். மார்க் லாக் இன் பண்ணி ஃபேஸ்புக்கில் நுழைந்தான். அவன் உடல் இப்போது வெளியில் இல்லை என்பதை அறிந்து ஒரு கணம் திகைத்தான். ப்ரொஃபல் பிக்சருக்குள் இருந்தபடி விவேகானந்தை பார்த்தான். விவேகானந்த் லேப்டாப்பை நோக்கி குனிந்தான் “நீங்கள் லாக் இன் பண்ணும் போது உங்கள் ஸ்தூல சரீரத்துடன் உள்ளே நுழைந்து விடுவீர்கள். அதாவது நிஜ உடலுடன்.” “எப்படி வெளியே வருவது. இங்கே லாக் அவுட் ஆப்ஷனே காணாமே” என்றான் மார்க் உள்ளிருந்தபடி.

”லாக் அவுட் ஆப்ஷனை டிஸ்ட்ராய்ட் செய்து விட்டேன். இனி நீங்கள் வெளியே வரவே முடியாது. இந்திய தத்துவத்தில் இதை ’விதேக முக்தி’ என்று சொல்வார்கள்” என்ற படி லேப்டாப்பை மூடினான்.

 

37 இனம்

”நீ பார்க்கப்போவது, காலபகோஸ் தீவுகளிலிருந்து நான் கொண்டு வந்த அழியப்போகும் பூச்சி இனத்தின் கடைசி ஒரே ஒரு பூச்சி. இந்த ஒரு பூச்சியும் செத்துப்போனால் இனி அந்த இனமே இல்லை. பெயர் பெயசிலிதோரியா எண்டி. எட்டுகாலி டாரண்டுலா ஃபேமிலி. அதாவது சிலந்தி இனம். டார்வின் தன் காலபகோஸ் தீவு டைரியில் இந்த பூச்சியை பற்றி பதிவு செய்திருக்கிறார். ஒரு சிறு பாறைத்துண்டில் பல நூறு வருடங்களுக்கு முன்பு செத்துபோன ஒரு ஆண் பூச்சியின் படிவத்தையும் அப்போது கண்டெடுத்தார்” லேபிற்கு போகும் வராந்தாவில் நடந்தபடி தன் தோழி லின்சியிடம் சொன்னான் கிறிஸ். இளம் எண்டமோலஜிஸ்ட். பூச்சியியல் ஆய்வாளன்.

“நேற்று இரவு முழுக்க டார்வினின் பாறைத்துண்டு படிவத்தையும், அந்த பூச்சியையும் வைத்துகொண்டு உடலியலை ஆராய்ந்து கொண்டிருந்தேன். வித்தியாசத்தை கடைசியில் தான் கண்டேன். நம்மிடமிருப்பது பெண் பூச்சி.” என்றபடி லேபின் கதவை திறந்தான். லின்ஸி லேசாக புன்னகைத்தபடி பின் தொடர்ந்தாள்.

பூச்சி இருந்த கண்ணாடி பாட்டில் வெறுமையாய் திறந்து கிடந்தது. அதிர்வுடன் மேஜையை நெருங்கிய கிறிஸ் அப்போது தான் பக்கத்தில் கிடந்த பாறைத்துண்டை கவனித்தான். அதில் டார்வினின் படிவமும் இல்லை.

தூசிபடிந்த மேஜையிலிருந்து ஜன்னலை நோக்கி பதினாறு கால்கள் ஊர்ந்து போனதற்கான மிக மெல்லிய தடயத்தை லின்சி மட்டுமே முதலில் பார்த்தாள்.

 

38. ….

 

”ஆதியிலே வார்த்தை இருந்தது, என்று பைபிளில் யோவான் அதிகாரம் ஒன்று முதல் வசனம் ஆரம்பிக்கிறது. விழிப்பு கனவு தூக்கம் இதை தாண்டிய நான்காவது நிலையாக அந்த ஒலியை மாண்டூக்கிய உபநிஷத் கூறுகிறது. அந்த வார்த்தையை, அதாவது அந்த ஒலியை பதிவு பண்ணவே இந்த பயணம். காலத்தில் பின்னோக்கி நாம் அனுப்பிய ’நானோ சோனிக் ரிகார்டர்”தாங்கிய விண்கலம் அதை பதிவு செய்து நமக்கு இப்போது அனுப்பும்” என்றார் அகவுஸ்டிக் எஞ்ஜினியர் அனந்தகிருஷ்ணன் தன் குழுவினரிடம்.

அவர்களின் முன்னால், விண்கலம் அனுப்பும் ரேடியோ வேவ்ஸை எலெக்ட்ரான்களின் உதவியுடன் சவுண்ட் வேவ்ஸாக மாற்றி ஒலிபரப்பும் நியோனிய ஸ்பீக்கர்கள் தயாராக இருந்தன. ” இந்த நீல நிற எல்இடி லைட் ஒளிரும் போது நாம் அந்த ஆதி ஒலியை ஐந்து நிமிடங்களுக்கு கேக்கப்போகிறோம். இன்னும் சில நொடிகள் தான். இப்போதே அனைவரும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்” என்ற படி அனந்தகிருஷ்ணன் இமைகளை மூடினார். குழுவினரும் அதையே செய்தனர். சில கணங்களில் ஆழமான அமைதியை உள்ளுக்குள் கேட்டனர்………………………..ஐந்து நிமிடங்களுக்கு பிறகு வார்த்தைகளில் சொல்ல முடியாத பரவசத்துடன் கலைந்து சென்றனர்.

அந்த நீல நிற லைட் ஒளிரவே இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க வில்லை.

 

 

39. விதை

”இந்த ஒரு லட்சம் கர்ப்பிணி பெண்கள் எல்லாம் நாட்டின் பின்தங்கிய பிராந்தியங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவங்க. சிசுக்களின் ரைட் பிரயினில் இருக்கிற, சமூக அநீதியை எதிர்க்கிற, புரட்சி செய்ய தூண்டுகிற நியூரான்களை அல்ட்ரா லேசரால் அழிக்கிறது, அதுக்கு பதிலா நம்ம கம்பெனியோட ரூட்மேப்பை அதுல பதிய வைக்கிறது. இது தான் நாம செய்ய வேண்டிய வேலை. இன்னும் இருபது வருஷத்துல கேள்வி கேக்காத லட்சம் அடிமைகள் தானா வந்து நம்ம கம்பெனில ஜாயின் பண்ணுவாங்க. இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி இதுக்காகத்தான் இந்த லேப ஆரம்பிச்சி நம்மள அப்பாயின்மெண்ட் பண்ணியிருக்கு” என்றார் சீஃப் மெடிகல் ஆப்பிஸர் சிதம்பரம். அவர் முன்னால் இருந்த இரண்டு இளம் மருத்துவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“இன்னையிலிருந்து நம்ம வேலை ஆரம்பிக்கிறது. சரியாக பத்து நாட்களில் இந்த ஃபர்ஸ்ட் பேட்சை முடித்து அனுப்பணும்” “ஒகே சார்.”என்றனர் இளம் மருத்துவர்கள். பத்து நாட்களில் வேலை முடிந்தது. சிதம்ப்ரம் திருப்தியாக சிரித்த படி மேலிடத்திற்கு அழைத்தார்.

வெளியே வந்த ஒரு இளம் மருத்துவன் மற்றவனிடம் “நான் ஒரு சிசுவிற்கு மட்டும் எதுவும் பண்ணல. ஃபேக் ரிப்போர்ட் தான் கொடுத்தேன்.” என்றான்.

மற்றவன் அதிர்ச்சியுடன் “ஏன் இப்டி பண்ணினீங்க சுபாஷ்சந்திரன்” என்றான்.

”ஒரு விதை இருந்தாலும் போதும்” என்றான் கண்கள் சிவக்க. மற்றவனுக்கு முதலில் புரியவில்லை.

 

40. சிகரெட்

”உங்களை போன்ற செயின் ஸ்மோக்கர்கள் சிகரெட் பழக்கத்தை விட்டொழிப்பதற்காகதான் இந்த சிகரெட் இன்வென்ஷன். மரண பயம் காட்டணும் ” என்று சொன்ன தன் மாணவன் டேவிட்டை கோணல் சிரிப்புடன் பார்த்தார் ப்ரொபசர். அவன் உள்ளங்கையில் ஒரு சிகரெட் இருந்தது. ”மூன்று தியரிகளின் படி இதை தயாரித்திருக்கிறேன். நியூட்டனின் தேர்ட் லாவ், கொஞ்சம் பிளாக் ஹோல், நான் வணங்கும் கிறிஸ்துவிடமிருந்து மூன்றாவது” என்றான். ப்ரொபசர் நெற்றியை சுருக்கியபடி அந்த சிகரெட்டை எடுத்து தன் உதடுகளில் பொருத்தினார். கிண்டலாக புன்னகைத்து கொண்டே பற்றவைத்தார்.

முதல் முறை புகையை உறிஞ்சி வெளியே விட்டார். இரண்டாவது முறை சிகரெட்டை வாயில் வைத்ததும் சிகரெட் அவரை உறிஞ்ச தொடங்கியது. ”ஒரு வினைக்கு எதிர்வினை உண்டு” என்றான் டேவிட்.

சுதாரிப்பதற்குள் ப்ரொபசரின் மொத்த உடலையும் சுருக்கி சிகரெட் உள்ளிழுத்துக் கொண்டது “தனது நிறையை விட அதிக நிறையை உள்ளிழுத்துக்கொள்ளும் பிளாக் ஹோல்” என்றான்.

அஞ்ஞானச் சிறுகதைகள் 07

tamil advertising

abstract 2

31. ஓவியன்

கதவை திறந்ததும் ”நீங்க தான் ஆர்டிஸ்ட் சந்தோஷா” என்றான் அவன். முகம்மெல்லாம் மயிர் மண்டியிருந்தது. தோளில் கேசம் அழகாய் புரண்டது. இடுப்புக்கு கீழே மட்டும் கசங்கலாக ஆடை.“ஆர்டிஸ்ட்னு சொல்ல முடியாது, ஏதோ கம்ப்யூட்டர்ல கொஞ்சம் வரைவேன்”என்ற சந்தோஷ் “நீங்க…” என்று கேள்வினான். “நான் முப்பதாயிரம் வருடங்கள் முன்பு பிரான்ஸின் ஷோவே குகை ஓவியங்கள் வரைந்தவர்களில் ஒருவன்”. சந்தோஷ் அதிர்ச்சியாக வில்லை பி.ஏ. கிருஷ்ணனின் ‘மேற்கத்திய ஓவியங்கள்’ புத்தகத்தை சில நாட்களாக படித்திருந்தான். மேஜை மீது தான் புத்தகம் திறந்து கிடந்தது. ஷோவே ஓவியனின் பக்கத்தில் இன்னொருவர் லேசாக தலைகுனிந்த படி நிற்பதை கவனித்தான். “இவர் உங்கள் முப்பாட்டன். தமிழகத்தில் கீழ்வாலை முதல் கொல்லூர் வரை பாறை ஓவியங்கள் வரைந்தவர்களில் ஒருவர்” என்றான் ஷோவே ஓவியன். அவர் கூச்சமாக தலை குனிந்து நின்றிருந்தார். கூந்தல் சோர்வாக முதுகில் படர்ந்திருந்தது.

சந்தோஷ் அவரை உற்று பார்த்தபோது தான் அதை கவனித்தான். கருமையான அவர் உடல் மீது தாறுமாறாக வார்த்தைகள் கிறுக்கப்பட்டிருந்தது. ரமேஷ் லவ் கவிதா, ஐ லவ் யூ பூஜா, மை நேம் இஸ் ராஜன், தலைவர் வாழ்க, இன்னும் என்னன்னமோ. சில கெட்ட வார்த்தைகள் கூட தெரிந்தது.

 

32. டீசர்

கடவுள் அந்த ரெஜிஸ்டர் தபாலை கையெழுத்து போட்டு வாங்கினார். இப்போதெல்லாம் பிரார்த்தனைகளை கொரியரில் அனுப்பி விடுகிறார்கள். ஆர்வத்துடன் பிரித்து படித்தார். “வணக்கம் கடவுள் சார்…” என்று ஆரம்பித்தது கடிதம். “உங்கள் கிருபையால் நாங்கள் பெற்றோர் ஆகப்போகிறோம் அதற்கு மிக்க நன்றி…” என்று தொடர்ந்தது “ எங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையை நினைத்து நாங்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். அந்த குழந்தை எப்படி வளரப்போகிறது, என்னவாகப்போகிறது, அதன் எதிர்காலம் எப்படி இருக்கும், என்று தினமும் யோசிப்பதே எங்களுக்கு வேலையாகப்போய் விட்டது” கடவுள் பெருமூச்சு விட்ட படி மேலும் படித்தார் “ அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கையின் முழு விபரங்களும் உங்களுக்கு தெரியும் என்பதால் நீங்கள் ஒரு விஷயம் பண்ண முடியுமா” கடவுள் புருவத்தை உயர்த்தியபடி அடுத்த வரியைப்படித்தார்.

”வி காண்ட் வெயிட். குழந்தையின் வாழ்க்கையை ஒரு டீசர் கட் பண்ணி எங்களுக்கு அனுப்ப முடியுமா ப்ளீஸ்”

 

33. இன்ஸ்யூரன்ஸ்

இன்ஸ்யூரன்ஸ் ராமலிங்கம் யாராவது மாட்டுவார்களா என்று பார்த்தபடி நின்றார். கட்டுமஸ்தாக ஒருவன் எதிரே வரவும் உற்சாகமானார். வந்தவன் “வணக்கம் சார் உங்களை தேடித்தான் வந்தேன். லைஃப் இன்ஸ்யூரன்ஸ் முடிஞ்சு போச்சு.”என்றான். ராமலிங்கம் குழப்பமாக “ஏற்கனவே நீ கட்டிருக்கியா ஞாபகம் இல்லியே” என்று இழுத்தார். அதிகமான பாலிஸிதாரர்களை சேர்த்து விட்டதால் சமயங்களில் முகங்கள் மறந்து விடுகிறது. “அது சரி ஒண்ணும் பிரச்சின்னை இல்ல ரினிவல் பண்ணிக்கலாம். இப்போ வாகனங்களுக்கு கூட நான் இன்ஸ்யூரன்ஸ் ரெடி பண்ணி தரேன். வாகனம் ஏதாவது வச்சிருக்கியா. ” என்று புன்னகைத்தார். “வாகனம் இதோ பக்கத்தில் தான் நிக்குது. வாங்க ” என்றான் அவன். ராமலிங்கம் எட்டி நடந்தார்.

”உங்களை தேடித்தான் வந்தேன். லைஃப் இன்ஸ்யூரன்ஸ் முடிஞ்சு போச்சு.”என்றான் மீண்டும் அவன். திருப்பத்தில் அவன் வாகனம் நின்றிருந்தது. கருப்பாக தலையில் இரு கொம்புகளுடன்.

 

 

34. அக்னி

”தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” ”ஹவ் இட் இஸ் பாஸிபிள் என்று கேட்டார் ப்ரொஃபசர் கெல்வின். எக்ஸோதெர்மிக் விதிகளின் படி எந்த பொருளும் ஆக்ஸிடேஷன் ஆகித்தானே தீரும். ஐ மீன் விரல் தீப்பற்றிக்கொள்ளும் அல்லவா.” இதற்கான விடை தேடித்தான் அவர் தன் பழைய கெமிஸ்டிரி ஆய்வு நண்பர் முகுந்தனின் வீட்டில் உட்கார்ந்திருந்தார். முகுந்தன் மடியில் இருந்த இரண்டு வயது மகன் சுப்ரு அந்த வெள்ளைக்கார அங்கிளை விசித்திரமாக பார்த்தான். மேஜை நடுவில் ஒரு சின்ன தீபம் சுடர் விட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. ”இந்த ஃப்ளேம் கூட அந்த ஆயில் ஆக்ஸிஜன் ரிச் காம்பவுன்டாகா செயல்படுவதால் தான் எரிகிறது. அதாவது இதில் கோக்கனட் ஆயில் தான் ஆக்ஸிடைசர். இதில் விரலை வைத்தால் ஸ்கின்னுடன் வேதியல் வினை புரிந்தே தீரும்” என்றார் கெல்வின். முகுந்தன் ஏதோ சொல்வதற்காக தீபத்தை நோக்கி குனிந்தான்.

குட்டி சுப்ரு தன் பிஞ்சு விரல்களை நீட்டி ஒரு கணம் சுடரை பிடித்தான். கெல்வின் பதறிவிட்டார். முகுந்தன் குழந்தையை பின்னுக்கு இழுத்தான். குட்டி சுப்ரு கெல்வின் மட்டுமே பார்க்கும்படியாக தன் பால் பற்களால் புன்னகைத்தான்.

 

35. வித்தை

வில்வித்தையில் இண்டெர்நேஷனல் கோல்ட் மெடலிஸ்டான நிஷாத், ஜர்னலிஸ்டு தனஞ்செயனிடம் “நாங்கள் தலைமுறையாக பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. வேடுவர்களான எங்கள் முன்னோர்கள் மகத நாட்டிலிருந்து கிளம்பி தேசம் தேசமாக அலைந்தோம். எத்தனை காலமானாலும் இந்த வித்தையை என்றைக்கும் நாங்கள் கைவிட மாட்டோம் என்பதே எங்கள் தந்தையருக்கு நாங்கள் கொடுக்கும் வாக்குறுதி.” என்றபடி ஃப்ரிட்ஜை திறந்து. ஃப்ரீசரிலிருந்து பனிபடர்ந்த சிறுகுடுவையை எடுத்தான்.

தனஞ்செயன் பின்கழுத்து ஜில்லிட அதற்குள் நோக்கினான். பல நூற்றாண்டுகளாக சுருங்கிய ஒரு கட்டை விரல். ”எனது முதுபாட்டனின் விரல் இது. அதற்குப்பிறகு எங்கள் குலத்தில் யாருக்கும் கட்டைவிரலே இல்லை தெரியுமா”. தனஞ்செயன் அப்போது தான் நிஷாதின் கைகளை கவனித்தான். பிளாஸ்டிக் பெருவிரல். “பிறகு எப்படி இவ்வளவு வெற்றிகள்” என்றான்.

”பெருவிரல் எங்கள் குலத்திற்கு கைகளிலில்லை, மனதிற்குள் இருந்தது” என்ற நிஷாத், தனஞ்செயனின் கண்களை ஒரு நொடி பார்த்தான்.

அஞ்ஞானச் சிறுகதைகள் 06

tamil advertising

4

26. பொம்மைகள்

குட்டி கிச்சா பொம்மை துப்பாக்கியை கிஷோரின் நெஞ்சுக்கு நேராக நீட்டியபடி ’’ஹேண்ட்ஸ் அப் அப்பா’’ என்றான். கிஷோர் சிரித்து கொண்டே சிணுங்கிய செல்போனை அழுத்தி காதுக்கு கொண்டு போனான்.

“கடந்த பல வருடமாக இந்தியாவில் விற்கப்பட்ட சீனா பொம்மைகள் எல்லாம் வெறும் பொம்மைகள் அல்ல. ரகசிய ஆயுதங்கள். இது ஒரு சீக்ரெட் ஆப்ரேஷன். இந்தியாவில் ஒரு கோடி குழந்தைகளுக்கு மேல் சீனா பொம்மை வைத்திருக்கிறார்கள். அதாவது சீனாவுக்கு இந்தியாவுக்குள்ளேயே ஒரு கோடிக்கு மேல சோல்ஜர்ஸ் இருக்காங்கன்னு அர்த்தம். இன்னையிலிருந்து அந்த ஆப்ரேஷன் ஆக்டிவ் ஆகுது… ” உயரதிகாரியின் எமெர்ஜென்சி மெசேஜ் இண்டெலிஜன்ஸ் துறையின் இளம் அதிகாரி கிஷோருக்கு மண்டைக்குள் அலாரமாய் இற‌ங்கியது.

நெஞ்சுக்கு நேராய் நீட்டிக்கொண்டிருந்த கிச்சாவின் பொம்மை துப்பாக்கியை பதட்டமாக திரும்பி பார்த்தான். மேட் இன் சீனா என்ற சின்ன வாசகம் கண்ணில் பட்டது.

 

  1. ரிவைண்ட்

”காலம் வளைந்து செல்லுமா. அதற்கான ப்ரூஃப் இருக்கிறதா” என்றார் ஹார்வார்ட் யுனிவெர்சிடியின் ப்ரொபசர் ஹென்றி. மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். செந்தில் மட்டும் கையைத்தூக்கினான். “காலம் வளைந்து செல்லுவது மட்டுமல்ல, யூ டர்ன் கூட அடித்து பின்னோக்கி செல்லக்கூடியது.” என்றான். “நிரூபிக்க முடியுமா” என்றார் ப்ரொபசர். “ஐன்ஸ்டீனின் தியரி ஆஃப் ரிலேடிவிடி படி தான் இதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதாவது இந்த காலம் யூ டர்ன் அடித்து பின்னோக்கி செல்வதை அறிய நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்திருக்க வேண்டும்.” ப்ரொஃபசர் ஆச்சரியமாக “எப்படி” என்று செந்திலை பார்த்தார்.

செந்தில் ஒரு சின்ன மவுனத்திற்கு பிறகு சொன்னான் “குறிப்பாக நீங்கள் இளையராஜா ரசிகராக இருக்க வேண்டும்”.

 

 

  1. வைல்ட் லைஃப்

”வைல்ட் லைஃப் போட்டோகிராஃபராகணும். அந்த குறிப்பிட்ட விலங்குகள் உண்பதை, உறங்குவதை, உறவு கொள்வதை போட்டோவா எடுக்கணும்” வெறியுடன் சொன்னான் மாருதி . கேமராவும் கையுமாக இருந்த மாருதியை அம்மாவும் அப்பாவும் கவலையாகப்பார்த்தார்கள் “தம்பி இது ரொம்ப ஆபத்தான விஷயம்.” என்றார்கள். “அவை இங்கே வந்து ஒரு பிரச்சினையும் இல்லாமல் திரும்பி போகின்றன, ஆனால் நாம் அங்கு போக ரொம்ப யோசிக்க வேண்டும். விலங்கினங்களிலேயே மிக கொடியவை அவை தான் என்பது நம் மூத்தோர் அனுபவம்” என்றாள் அம்மா.

“இருந்தாலும் உன் ஆர்வத்திற்கு எங்கள் ஆசிகள்” என்ற பெற்றோரை வணங்கி கேமராவுடன் கிளைக்கு கிளை தாவியபடி புறப்பட்டான் மாருதி. காட்டிலிருந்து தொலைவில் தெரியும் நகரத்தை நோக்கி.

 

29. அகதிகள்

 ’’எல்லா சொந்தங்களையும் இழந்த இந்த பூமியில் இனியும் வாழமுடியாது. எதற்காகத்தான் இத்தனை வெறுப்புகள், ஆயுதங்கள், மரணங்கள்” சேபியன் மனதிற்குள் அழுத படி விண்வெளி கலத்தை கிளப்பத்தயாரானான். யாராவது கூட வருவதாக இருந்தால் கூட கூட்டிக்கொண்டு போய் விடலாம். எட்டிய தொலைவில் பிணங்களை தவிர வேறு யாருமில்லை. சேபியன் பட்டனை அழுத்தவும் வெளியே ஒரு குரல் கேட்டது. ஒரு வயதான தாத்தா கைகள் நடுங்க நின்றுகொண்டிருந்தார். கதவை திறந்து அவரை ஏற்றிக்கொண்டான். கலம் புறப்பட்டது. “எங்கே செல்லுகிறோம்” என்றார் தாத்தா. “எனக்கே தெரியாது இது வரை ஸ்பேசில் நான் பயணித்ததில்லை” என்றான் சேபியன்.

“எனக்கு வழி தெரியும். இடப்பக்கமாக திரும்பி செங்குத்தாக மேல் நோக்கி போ” என்றார் தாத்தா. “நீங்களும் அகதி தானா” என்றான் “ஆம்” “உங்கள் பெயர்” நடுங்கும் உதடுகளால் சொன்னார் “ஒவ்வொரு நாட்டிலும் எனக்கு ஒவ்வொரு பெயர். இந்த யுத்தங்களே எனது பெயரால் தான்”.

 

30. ஐஸ் க்யூப்ஸ்

”சொல்லாமல் மறைத்த காதலின் நினைவுகள் எல்லாம் சப் கான்ஷியஸ் மைண்டின் அடி ஆழத்தில் தண்ணீர் மாதிரி தேங்கி விடும். வாழ்க்கை முழுக்க உள்ளே தழும்பிக்கிட்டே தொந்தரவு செய்யும். அந்த தண்ணீரை ஐஸ் க்யூப்களாக மாற்றி, சேமிக்கப்போறோம். அது தான் இந்த ப்ரோஜக்டின் திட்டம். மனித குலத்திற்கே இது ஒரு வரப்பிரசாதம்” என்றான் மைண்ட் எஞ்ஜினியரீங் துறையின் ஆராய்ச்சியாளன் இந்திரன். கலைந்த முடி உறக்கமில்லாத கண்களுடன் சிரித்தான். தன் வெளிறிய லேபின் நூற்றுக்கணக்கான ஃப்ரீசர்களில் இருக்கும் ஐஸ்க்யூப்களை பழைய யுனிவெர்சிடி நண்பர்களுக்கு காட்டி கொண்டிருந்தான். ஒவ்வொரு ஃப்ரீசரும் பெயர் எழுதப்பட்டு சீல் செய்யப்பட்டிருந்தது. எல்லாரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றனர். “எதுக்கு சேமிக்கணும்” என்றாள் சவுமியா, அதே பழைய துடுக்குடன். இந்திரன் புன்னகைத்தான்.

சட்டென்று அருகிலிருந்த ஃப்ரீசரிலிருந்து ஐஸ் க்யூப் உருகி ஒரு கோடாக கீழிறங்கி சவுமியாவின் பாதங்கள் வழியாக மேலே ஏற ஆரம்பித்த்து. அந்த ஃப்ரீசரின் மீது எழுதி இருந்த பெயரை கவனித்தாள். இந்திரன்.

அஞ்ஞானச் சிறுகதைகள் 05

tamil advertising

3

21. நான்

நான் இப்போ இந்த நிமிஷம், இந்த நொடி, சந்தோஷ் நாராயணன் எழுதிய இந்த அஞ்ஞானச்சிறுகதையை பிளாகில் படித்து கொண்டிருக்கிறேன். அதில் ஒரு குறிப்பு வருகிறது. ஆல்டெர்நேடிவ் யுனிவெர்ஸ் பற்றி. அதாவது என்னைப்போலவே இன்னொரு யுனிவெர்ஸில் இன்னொரு நான் இதே போலவே படித்துக்கொண்டு இருப்பான் என்று. சில நொடிகள் முன் பின் இருக்கலாம். ஆச்சரியமாக இருக்கிறது.

 

நான் இப்போ இந்த நிமிஷம், இந்த நொடி, சந்தோஷ் நாராயணன் எழுதிய இந்த அஞ்ஞானச்சிறுகதையை பிளாகில் படித்து கொண்டிருக்கிறேன். அதில் ஒரு குறிப்பு வருகிறது. ஆல்டெர்நேடிவ் யுனிவெர்ஸ் பற்றி. அதாவது என்னைப்போலவே இன்னொரு யுனிவெர்ஸில் இன்னொரு நான் இதே போலவே படித்துக்கொண்டு இருப்பான் என்று. சில நொடிகள் முன் பின் இருக்கலாம். ஆச்சரியமாக இருக்கிறது.

 

22. தூரம்

”ஸ்மார்ட்ஃபோனில் இது ஒரு புரட்சி. உங்களால் இந்த ஃபோன் மூலமாக உலகின் எங்கோ ஒரு மூலையில் எதிர்முனையில் இருப்பவரின் அறையில் நுழைந்து, அவர் அருகில் அமர்ந்து, தொட்டு பேச முடியும். தூரம் என்பது தொழில்நுட்பம் முன் ஒரு மாயை. இதை டெமோவாக இங்கே காட்ட இருக்கிறார் நம் இந்திய சீஇஓ மணிமாறன். சென்னையிலிருக்கும் தன் மனைவியுடன் பேசப்போகிறார்” பலத்த கரவொலியுடன் மும்பையில் அந்த ஃபோனை அறிமுகம் செய்து பேசினார் நோக்சங் நிறுவனத்தின் தலைவன் ஷிஹிமோட்டா.

மேடையில் வீடியோ திரை ஒளிர்ந்தது. மனைவி திரையில் தெரிந்தாள். “ஏங்க நேத்திலிருந்தே ஒரே குளிர் ஜுரம்” என்றாள்.“சென்னைக்கு அடுத்த ஃப்ளைட் எப்போ” என்று யோசிக்க ஆரம்பித்தான் மணிமாறன்.

 

23. ஆப்

“மச்சி இந்த ஆப் பேரு கிராவிடி. என்னோட இன்வென்ஷன். இத இன்ஸ்டால் பண்ணினேனா நீ கேக்குற எதையும் ஏராளமா, ஏராளமா உன்னை நோக்கி கவர்ந்து இழுக்கலாம்”  கடற்கரையில் உட்கார்ந்தபடி சொன்னான் தாணு. “இத எப்படி மச்சி ஃபோன்ல இன்ஸ்டால் பண்ணுறது வழக்கம் போல தானா” என்றான் ஷிவ். இருவரும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் சயின்ஸ் மாணவர்கள்.  “அட லூசு இத ஃபோனுக்காக நான் பண்ணல. இது ஒரு ஹ்யூமன் பாடி ஆப். இத அப்டியே விழுங்கிடணும். அது உன் உடம்புக்குள்ள போய் ஆட்டோமேட்டிகா இன்ஸ்டால் ஆகிடும் என்றான் தாணு.” “சூப்பர் மச்சி ” என்றபடி விழுங்கினான் ஷிவ். தொண்டையில் சூடாக உரசிக்கொண்டு இறங்கியது. உடலில் அசாதாரண மாற்றத்தை உணர்ந்தான். மூச்சு இரைத்தது. தொண்டை வறண்டு போனது போல இருந்தது.

தண்ணி தண்ணி என்று கேட்டான் ஷிவ். வழக்கத்துக்கு மாறான பேரிரைச்சல் கேட்கவும் தாணு திரும்பி ஒரு கணம் கடலை பார்த்தான். ஒரு கணம் தான் பார்த்தான்.

 

 

24. கடவுள் துகள்

ப்ரொஃபசர் பீதாம்பரம் கடவுள் துகளை தன் மாணவர்களுக்கு காட்டினார். கண்ணாடிபுட்டியில் பெப்பர் தூள் போல இருந்தது அது. இந்த வருட நோபல் தனக்குத்தான். கடவுளையே துகளாக சிறைபிடித்த கர்வம் குரலிட “இந்த வெற்றியை கொண்டாட இன்றிரவு என்னுடன் மது விருந்து” என்றார் தன் மாணவர்களை பார்த்து. இரவு கொண்டாட்டமாக கழிந்தது. ஹேங் ஓவருடன் விடிந்த காலையில் அந்த கண்ணாடிப்புட்டி காலியாக இருந்தது. ஏப்பம் விட்ட படி அதிர்ச்சியாக தன் உதவி மாணவனை அழைத்து புட்டியை காட்டினார். “நேற்று நீங்கள் போதையில் ஆம்லேட்டுக்கு அதிகமாக பெப்பர் போட்டீர்கள்” என்றான் அவன்.

 

 

25. செல்ஃபி

 கடவுள் உலகை படைத்தார், மரம், செடி, கொடி, பூச்சிகள், விலங்குகள் எல்லாவற்றையும் படைத்தார். ஓய்வாக இருந்த ஒரு கணத்தில் தன் கையிலிருந்த ஸ்மார்ட் ஃபோனை பார்த்தார். அவருக்கு செல்ஃபி எடுக்கணும் என்று ஒரு ஆசை வந்தது. தான் படைத்த இந்த உலகை பின்னணியாக வைத்து ஒரு செல்ஃபி எடுத்தார். ஃபோனில் என்ன பிரச்சினையோ செல்ஃபி சரியாக வரவில்லை. அப்படியே ஃபோனை தூக்கி போட்டுவிட்டு அவர் அடுத்த பிரபஞ்சத்தை படைக்க போய்விட்டார்.

தூக்கி போட்ட அந்த ஃபோனிலிருந்த அவருடைய செல்ஃபி உருவம் வளைந்து நெளிந்து வெளியே வந்தது. இந்த உலகம் எனக்குதான் என்றது. தனக்கு தானே பெயர் வைத்து கொண்டது. ’நான் மனிதன்.’

அஞ்ஞானச் சிறுகதைகள் 04

tamil advertising

santhosh narayanan 2

16. மேட்ச்

காலம் கி.பி. 2100

” சார் டி.என்.ஏ மேட்ச் ஆகுது. இது சரியா இருக்கும்”என்றார் டாக்டர்.கோவர்த்தன்.

“இதுல கிராஸிங் கோட் எதுவும் இல்லியே”என்றார் சீத்தாரமன்.

“சுத்தமா இல்ல.ப்யூரா இருக்கு. எல்லா கோடோன்ஸிலயும் சிஸ்டோசின்லருந்து தைமின் வரைக்கும் ஆராய்ஞ்சாச்சு. 2000 வருஷ ஹிஸ்டரிய நானோ மில்லிமீட்டர்ல படிச்சிட்டேன். நத்திங் டு ஒர்ரி” என்றார் டாக்டர்.கோவர்த்தன்.

சீத்தாராமன் திருப்தியாக“ஓகே பண்ணிடலாம் இல்ல”என்றபடி மொபைலை எடுத்து டயல் செய்து காதுக்கு கொண்டு போனார். பூரிப்புடன் சொன்னார் “ஐ காஸ்ட் மேட்ரிமோனியலா. எங்களுக்கு இந்த பையன் ஓகே சார்”.

 

  1. ரிவெஞ்ச்

”வேலைக்குன்னு வெளியப்போன ஆயிரக்கணக்கான பேர் வீடு திரும்பும் பாதையை மறந்து தெருவில சுத்துறாங்க. கூட்டம் கூட்டமா தற்கொலை பண்ணிக்கிறாங்க.எனக்கு பி.எம்க்கு பதில் சொல்லியாகணும்” அரசு தலைமை விஞ்ஞானி அனில் மிட்டல் ஆவேசமாக கத்தினார்.

இளம் ஆராய்ச்சியாளர் பார்த்தி எழுந்து “வெவ்வேறு இடங்களிலிருந்து ரிப்போர்ட் வந்திருக்கு சார். கோடிக்கணாக்கான தேனீக்கள் செல்போன் டவர் ரேடியோ டிரான்ஸ்மீட்டர்கள் மீது அப்பிக்கொண்டு தாங்கள் ரீங்கரிக்கும் ஃப்ரீக்வன்ஸியை செல்போன் ரேடியோ ஃப்ரீக்வன்சில கலந்திட்டே இருக்கு. அது செல்போன் உபயோகிக்கிறவங்க மூளையில ஊடுருவி அவங்க வீடு திரும்பும் பாதைகள் எல்லாம் மறந்து…திசை தவறி…ஒரே குழப்பம். இவ்வளவு தேனீக்கள் எங்கிருந்து வருதுன்னு கண்டுபிடிக்க முடியல சார்” என்று நிறுத்தாமல் பேசினான்.

“புல்ஷிட். என்ன விளையாடுறீங்களா” கத்திய அனில் மிட்டல் ஜன்னலை நோக்கி எதேச்சையாக திரும்பினார். அங்கே தூரத்திலிருந்து கருமேகம் ஒன்று தாழ்வாக பறந்து வருவது போல மங்கலாக தெரிந்தது. மெல்ல ரீங்கரிக்கும் சத்தம் அதிகரித்தபடி வந்தது.

 

  1. யின் யாங்

”எல்லா நல்லவனுக்குள்ளயும் ஒரு கெட்டவன் இருக்கிறான். இந்த டிவைட் மெஷின் அந்த நல்லவனையும் கெட்டவனையும் தனிதனியா பிரிச்சி கொடுத்திடும். அப்புறம் அந்த கெட்டவனை அழிச்சிடலாம். நீ தைரியமா உள்ள போ” என்றார் இன்வென்டர் கிருஷ். அர்ஜுன் உள்ளே நுழைந்தான். கிருஷ் ஸ்விட்ச் ஆன் பண்ணினார். பீப் பீப் பீப். ப்ராஸஸ் சக்சஸ். ரெண்டு அர்ஜுன் வெளியே வந்தார்கள். கிருஷ் துப்பாக்கியை கையிலெடுத்து “இப்போ நல்லவன் கெட்டவனை சுட்டு விடலாம். இதோ துப்பாக்கிய வாங்கிக்கோ” என்றார். ரெண்டுபேருமே துப்பாக்கியை வாங்க கை நீட்டினார்கள்.

 

 

  1. நியோ

உலக பங்கியின் தலைவர் ஜிம் கிம். மூன்றாமுலக நாடுகளின் பொருளாதார திட்டங்கள் குறித்த ஒரு ரகசிய மீட்டிங்கை முடித்து கொண்டு, இப்போது தான் அறைக்கு வந்திருந்தார். பரிசாக வந்த அந்த சிறிய சிகப்பு நிற பெட்டியை சந்தேகத்துடன் பார்த்தார். யார் தந்தது என்று ஞாபகம் வரவில்லை. ஆவலுடன் பிரித்தார். ஒரு கண்ணாடிப்பெட்டிக்குள் சிறிய மிகச்சிறிய கார்ல் மார்க்ஸ் உட்கார்ந்திருந்தார். முதலில் பொம்மை என்று நினைத் ஜிம் கிம் உற்றுபார்த்த போது தான் மார்க்ஸ் அசைவதை கவனித்தார். அதிர்ச்சியில் பெட்டியை கீழே போட்டார். கண்ணாடியுடன் மார்க்ஸ் பொம்மையும் உடைந்து சிதறியது. அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்ட அடுத்த கணம் அதை கவனித்தார். சிதறிய மார்க்ஸ் பொம்மையின் ஒவ்வொரு உடைசலும் ஒவ்வொரு மார்க்ஸாக உருமாறி அசைய ஆரம்பித்தது. ஜிம் கிம் கையில் கிடைத்த ஏதோ ஒன்றை எடுத்து வரிசையாக ஒவ்வொரு மார்க்ஸையும் உடைக்க ஆரம்பித்தார். மீண்டும் அந்த ஒவ்வொரு உடைசல்கள்ளும் ஒவ்வொரு…

 

 

  1. ஊடுருவல்

“ஒருத்தன் மூளைக்குள்ள இந்த ட்ரான்ஸ்மீட்டர் சிக்னல அனுப்பி அவன் வாங்க வேண்டிய ப்ராடக்டுகளையும், பிராண்டையும் பெனிடிரேட் பண்ணி, அவனை கன்ஸ்யூம் பண்ண தூண்ட முடியும். டிவியோ, ரேடியோவோ தேவை இல்லை. இது பயோ அட்வெர்டைசிங். அவன் மூளை அந்த பிராண்ட் பேரை சொல்லி கிட்டே இருக்கும். அவன் வாங்கியே தீருவான்” என்றான் அந்த ட்ராண்ட்ஸ்மீட்டரை உருவாக்கிய திவாகர். அசந்து போன இந்தியாவின் பிரபல தொழிலதிபரான கிஷோர் ரத்தனி உடனடியாக அந்த ட்ரான்ஸ்மீட்டர்களை வாங்க ஆர்டர் கொடுத்தார். விளம்பரத்துகென்று கோடிகள் கொட்டி கொடுப்பது இனி மிச்சம். “காலையிலிருந்தே பகவான் பெயர் தான் மனசுல ஓடிட்டே இருந்தது. ஏதோ நல்லது நடக்க போகுதுன்னு நினைச்சேன். நடந்திடிச்சு பாத்தீங்களா” என்று வாய் நிறைய பல்லாக சிரித்து விட்டு ”ஆமா உங்களோட இந்த ட்ரான்ஸ்மீட்டருக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க” என்றார். ராகவன் புன்னகையுடன் சொன்னான் “பகவான்”.