அஞ்ஞானச் சிறுகதைகள் 05

tamil advertising

3

21. நான்

நான் இப்போ இந்த நிமிஷம், இந்த நொடி, சந்தோஷ் நாராயணன் எழுதிய இந்த அஞ்ஞானச்சிறுகதையை பிளாகில் படித்து கொண்டிருக்கிறேன். அதில் ஒரு குறிப்பு வருகிறது. ஆல்டெர்நேடிவ் யுனிவெர்ஸ் பற்றி. அதாவது என்னைப்போலவே இன்னொரு யுனிவெர்ஸில் இன்னொரு நான் இதே போலவே படித்துக்கொண்டு இருப்பான் என்று. சில நொடிகள் முன் பின் இருக்கலாம். ஆச்சரியமாக இருக்கிறது.

 

நான் இப்போ இந்த நிமிஷம், இந்த நொடி, சந்தோஷ் நாராயணன் எழுதிய இந்த அஞ்ஞானச்சிறுகதையை பிளாகில் படித்து கொண்டிருக்கிறேன். அதில் ஒரு குறிப்பு வருகிறது. ஆல்டெர்நேடிவ் யுனிவெர்ஸ் பற்றி. அதாவது என்னைப்போலவே இன்னொரு யுனிவெர்ஸில் இன்னொரு நான் இதே போலவே படித்துக்கொண்டு இருப்பான் என்று. சில நொடிகள் முன் பின் இருக்கலாம். ஆச்சரியமாக இருக்கிறது.

 

22. தூரம்

”ஸ்மார்ட்ஃபோனில் இது ஒரு புரட்சி. உங்களால் இந்த ஃபோன் மூலமாக உலகின் எங்கோ ஒரு மூலையில் எதிர்முனையில் இருப்பவரின் அறையில் நுழைந்து, அவர் அருகில் அமர்ந்து, தொட்டு பேச முடியும். தூரம் என்பது தொழில்நுட்பம் முன் ஒரு மாயை. இதை டெமோவாக இங்கே காட்ட இருக்கிறார் நம் இந்திய சீஇஓ மணிமாறன். சென்னையிலிருக்கும் தன் மனைவியுடன் பேசப்போகிறார்” பலத்த கரவொலியுடன் மும்பையில் அந்த ஃபோனை அறிமுகம் செய்து பேசினார் நோக்சங் நிறுவனத்தின் தலைவன் ஷிஹிமோட்டா.

மேடையில் வீடியோ திரை ஒளிர்ந்தது. மனைவி திரையில் தெரிந்தாள். “ஏங்க நேத்திலிருந்தே ஒரே குளிர் ஜுரம்” என்றாள்.“சென்னைக்கு அடுத்த ஃப்ளைட் எப்போ” என்று யோசிக்க ஆரம்பித்தான் மணிமாறன்.

 

23. ஆப்

“மச்சி இந்த ஆப் பேரு கிராவிடி. என்னோட இன்வென்ஷன். இத இன்ஸ்டால் பண்ணினேனா நீ கேக்குற எதையும் ஏராளமா, ஏராளமா உன்னை நோக்கி கவர்ந்து இழுக்கலாம்”  கடற்கரையில் உட்கார்ந்தபடி சொன்னான் தாணு. “இத எப்படி மச்சி ஃபோன்ல இன்ஸ்டால் பண்ணுறது வழக்கம் போல தானா” என்றான் ஷிவ். இருவரும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் சயின்ஸ் மாணவர்கள்.  “அட லூசு இத ஃபோனுக்காக நான் பண்ணல. இது ஒரு ஹ்யூமன் பாடி ஆப். இத அப்டியே விழுங்கிடணும். அது உன் உடம்புக்குள்ள போய் ஆட்டோமேட்டிகா இன்ஸ்டால் ஆகிடும் என்றான் தாணு.” “சூப்பர் மச்சி ” என்றபடி விழுங்கினான் ஷிவ். தொண்டையில் சூடாக உரசிக்கொண்டு இறங்கியது. உடலில் அசாதாரண மாற்றத்தை உணர்ந்தான். மூச்சு இரைத்தது. தொண்டை வறண்டு போனது போல இருந்தது.

தண்ணி தண்ணி என்று கேட்டான் ஷிவ். வழக்கத்துக்கு மாறான பேரிரைச்சல் கேட்கவும் தாணு திரும்பி ஒரு கணம் கடலை பார்த்தான். ஒரு கணம் தான் பார்த்தான்.

 

 

24. கடவுள் துகள்

ப்ரொஃபசர் பீதாம்பரம் கடவுள் துகளை தன் மாணவர்களுக்கு காட்டினார். கண்ணாடிபுட்டியில் பெப்பர் தூள் போல இருந்தது அது. இந்த வருட நோபல் தனக்குத்தான். கடவுளையே துகளாக சிறைபிடித்த கர்வம் குரலிட “இந்த வெற்றியை கொண்டாட இன்றிரவு என்னுடன் மது விருந்து” என்றார் தன் மாணவர்களை பார்த்து. இரவு கொண்டாட்டமாக கழிந்தது. ஹேங் ஓவருடன் விடிந்த காலையில் அந்த கண்ணாடிப்புட்டி காலியாக இருந்தது. ஏப்பம் விட்ட படி அதிர்ச்சியாக தன் உதவி மாணவனை அழைத்து புட்டியை காட்டினார். “நேற்று நீங்கள் போதையில் ஆம்லேட்டுக்கு அதிகமாக பெப்பர் போட்டீர்கள்” என்றான் அவன்.

 

 

25. செல்ஃபி

 கடவுள் உலகை படைத்தார், மரம், செடி, கொடி, பூச்சிகள், விலங்குகள் எல்லாவற்றையும் படைத்தார். ஓய்வாக இருந்த ஒரு கணத்தில் தன் கையிலிருந்த ஸ்மார்ட் ஃபோனை பார்த்தார். அவருக்கு செல்ஃபி எடுக்கணும் என்று ஒரு ஆசை வந்தது. தான் படைத்த இந்த உலகை பின்னணியாக வைத்து ஒரு செல்ஃபி எடுத்தார். ஃபோனில் என்ன பிரச்சினையோ செல்ஃபி சரியாக வரவில்லை. அப்படியே ஃபோனை தூக்கி போட்டுவிட்டு அவர் அடுத்த பிரபஞ்சத்தை படைக்க போய்விட்டார்.

தூக்கி போட்ட அந்த ஃபோனிலிருந்த அவருடைய செல்ஃபி உருவம் வளைந்து நெளிந்து வெளியே வந்தது. இந்த உலகம் எனக்குதான் என்றது. தனக்கு தானே பெயர் வைத்து கொண்டது. ’நான் மனிதன்.’

Leave a comment